இந்திய தேர்தலை வரவேற்கும் கூகுள் டுடூல்

Screenshot_2019-04-11 Googleஇந்திய மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக துவங்கியுள்ள நிலையில், முன்னணி தேடியந்திரமான கூகுள், தேர்தலுக்கான வாக்குப்பதிவை குறிக்கும் பிரத்யேக டுடூலை தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கான பிரத்யேக டூடுலை கிளிக் செய்தால், வாக்களிப்பது தொடர்பான வழிகாட்டி பக்கங்கள் உள்ளிட்டவை தேடல் முடிவில் தோன்றுகின்றன.

முன்னணி தேடியந்திரமன கூகுள், முக்கிய நிகழ்வுகள், சாதனையாளர்கள் பிறந்த தினம் போன்றவற்றின் போது, தனது லோகோவை குறிப்பிட்ட அந்த நிகழ்வு அல்லது பிறந்த தினம் காண்பவர் தன்மைக்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. இப்படி மாற்றி அமைக்கப்படும் லோகோ வடிவம், கூகுள் டுடூல் என பிரபலமாக குறிப்பிடப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என அழைக்கப்படும் இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெறும் மக்களவை தேர்தலில் முதல் கட்ட வாக்குபதிவு இன்று காலை துவங்கிய நிலையில், கூகுள் தனது லோகோவை இந்திய தேர்தலை குறிக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. கூகுள் எனும் வார்த்தையை குறிக்கும் எழுத்துக்களில், இடையே உள்ள எழுத்து, வாக்களிக்கும் கைவிரலை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கூகுளின் டுடூல் மீது மவுசை கொண்டு சென்றால், இந்திய மக்களவை தேர்தல் 2019 எனும் தகவல் வருகிறது. அதை மேலும் கிளிக் செய்தால், தேர்தல் தொடர்பான தேடல் பக்கம் தோன்றுகிறது.

தேர்தல் தேடல் பக்கத்தில், முதல் முடிவாக, வாக்களிப்பது எப்படி என விளக்கம் அளிக்கும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி தகவல் இடம்பெறுகிறது. தொடர்ந்து மக்களவை தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் இணையதளங்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்னேப் வழிகாட்டி

snapchat_pixabay_1531398896552கூகுள் மட்டும் அல்ல, மெசேஜிங் சேவையான ஸ்னேப்சாட் சார்பாகவும் இந்திய மக்களவை தேர்தலை முன்னிட்டு, பிரத்யேக வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அளிக்கும் வழிகாட்டு தகவல்களை அடிப்படையாக கொண்டு வாக்காளர்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கும் வகையில் ஸ்னேப்சாட் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் வாக்குச்சாவடியை கண்டறிவது, எந்த எந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பதை அளிக்கும் ஸ்னேப்மேப் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னேப்சாட் பாணியில் தேர்தலுக்கான பல்வேறு பில்டர் வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

unnamedமக்களவை தேர்தல் தொடர்பான தகவல் அறிய உதவும் இணையதளங்கள் மற்றும் செயலிகள் :

தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்களை அறிய: இந்திய தேர்த ஆணைய இணையதளம்: https://eci.gov.in/

வாக்குபதிவு தொடர்பான முறைகேடுகள் குறித்த புகார்களை அளிக்க உதவும் செயலி: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிமுகம்: https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil&hl=en_IN

வாக்காளர்களுக்கான ஹெல்ப்லைன்; தேர்தல் ஆணைய வழிகாட்டு செயலி- https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen&hl=en_IN

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.