எல்லோரும் இந்நாட்டு நிருபர்களே! – ஒரு புதுமை செய்தி தளத்தின் கதை

OhmyNews-1-1புத்தாயிரமாண்டின் துவக்கத்தில், வலைப்பதிவு எனும் கருத்தாக்கம் அறிமுகம் ஆகியிருந்தது என்றாலும், வலைப்பதிவு அலை வீசத்துவங்கியிருக்கவில்லை. சமூக ஊடகங்களுக்கு வித்திட்ட சமூக வலைத்தளங்கள் உருவாகத்துவங்கியிருந்தாலும், நாமறிந்த வகையில் சமூக ஊடக போக்கு இன்னமும் தோன்றியிருக்கவில்லை. பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சேவைகள் அறிமுகமாக இன்னும் சில ஆண்டுகள் இருந்தன.

இந்த பின்னணியில், தென்கொரியாவில் இருந்து ஒரு புதிய அலை உண்டாகி உலகையே திரும்பி பார்க்க வைத்தது. ’ஓ மை நியூஸ்’ (OhmyNews ) எனும் பெயரிலான இணையதளம் அந்த அலைக்கு மையமாக இருந்தது.

ஒ மை நியூஸ் செய்திகளை வழங்குவதற்கான இணையதளமாக உருவானது. ஆனால் அது வழக்கமான செய்தி தளமாக அல்லாமல், முற்றிலும் புதுமையான செய்தி தளமாக இருந்தது. வழக்கமான தொழில்முறை ஆசிரியர் குழு, தொழில்முறை நிருபர்கள் என்றில்லாமல், நீங்கள் அத்தனை பேரும் நிருபர்கள் தான் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அந்த தளம் அமைந்திருந்தது.

அதாவது ஓ மை நியூஸ் தளத்தை பொருத்தவரை, பொதுமக்கள் தான் அதன் வாசகர்கள், அவர்கள் தான் அதன் நிருபர்களும் கூட!

எல்லோரும் இந்நாட்டு மன்னரே எனும் மகாகவி பாரதியின் தொலைநோக்கு பார்வையை போல, ஓ மை நியூஸ் எல்லோரும் இந்நாட்டு செய்தியாளர்களே எனும் ஜனநாயக இதழியல் தன்மையோடு செயல்படத்துவங்கியது.

இணைய நாளிதழாக அறிமுகமான ஓ மை நியூஸ் தளத்தில், பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் செய்திகளை சமர்பிக்கலாம். அந்த செய்தி, பெரும்பாலும் தன்னார்வலர்களை கொண்ட ஆசிரியர் குழுவால் சரி பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

செய்தி சேகரிக்க தனியே தொழில்முறை நிருபர்கள் தேவையில்லை, பொதுமக்களே செய்தி சேகரித்து வெளியிடலாம் எனும் சுதந்திரம் ஓ மை நியூஸ் தளத்தை தென்கொரிய மக்களிடம் பிரபலமாக்கியது. அது மட்டும் அல்ல, மக்கள் முன்னெடுக்கும் குடிமக்கள் இதழியலின் ( சிட்டிசன் ஜர்னலிசம்) முன்னோடி உதாரணமாகவும் உருவானது.

இணைய பயன்பாட்டில் தென்கொரியா எப்போதுமே தீவிர ஆர்வம் கொண்ட தேசமாக இருந்து வருகிறது. கொரியர்களின் இணைய பயன்பாடு பல நேரங்களில் சர்வதேச பேசு பொருளாகி இருக்கிறது. இமெயில், அரட்டை என பல விஷயங்களுக்கு இணையத்தை பயன்படுத்தி வந்த கொரியர்கள், மக்கள் நிருபர்களை உருவாக்கும் ஓ மை நியூஸ் இணையதளத்தை மனதார வரவேற்று அதில் பங்கேற்றனர்.

அறிமுகமான வேகத்தில் ஓ மை நியூஸ், மக்களின் கவனத்தை ஈர்த்து, செல்வாக்கிலும், வீச்சிலும், தென்கொரியாவின் பாரம்பரிய பத்திரிகைகளுக்கு சவால் விடக்கூடிய இணைய நாளிதழாக வளர்ந்தது. கொரிய மக்கள் செய்திகளை தெரிந்து கொள்ள, அந்த தளத்தை விரும்பி நாடியதோடு, தாங்களே செய்திகளை சமர்பிக்கலாம் எனும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, ஆயிரக்கணக்கான கொரியர்கள் நிருபர்களாக மாறி தாங்கள் முக்கியமாக கருதிய உள்ளூர் செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.

இதன் விளைவாக, ஒரு கட்டத்தில், 65,000 க்கும் மேற்பட்ட நிருபர்களோடு உலகிலேயே மிகப்பெரிய இணைய நாளிதழ் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஓ மை நியூஸ் வளர்ந்தது.

பெரும்பாலான நாடுகளில் இருப்பது போல, கொரிய மக்களுக்கும் தங்கள் பாரம்பரிய ஊடகங்கள் மீது அதிருப்தி இருந்தது. முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியீட்டில் சார்பு நிலை இருந்ததாகவும், அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதில் அவை தயக்கம் காட்டுவதாகவும் விமர்சனம் இருந்தது. மேலும் மக்களுக்கு முக்கிய பிரச்சனைகளை செய்தியாக்கவில்லை என்ற கருத்தும் இருந்தது.

இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தீர்வு காணும் வகையில், மக்கள் ஊடகத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் முயற்சியாக ஓ மை நியூஸ் அமைந்தது. உள்ளூர் பிரச்சனைகளும், மூடி மறைக்கப்பட்ட பிரச்சனைகளும் ஓ மை நியூஸ் தளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டன. இதனால் தென்கொரிய மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஊடகமாக இந்த தளம் உருவானது. அந்நாட்டு அதிபர் தேர்தலிலும் அந்த தளம் முக்கிய பங்கு வகித்தது.

இணையத்தின் ஆற்றலை பயன்படுத்தி, மக்களே செய்தியாளர்களாக செயல்பட வழி செய்த ஓ மை நியூஸ், குடிமக்கள் இதழியலுக்கான வெற்றிகரமான உதாரணமாக கொண்டாடப்பட்டது. வெகு விரைவில் அதன் சர்வதேச பதிப்பும் துவங்கப்பட்டது.

பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்கள் மூலம் பொதுமக்களே செய்திகளை பகிர்ந்து கொள்வதில், அவற்றில் சில வைரலாக பரவி கவனத்தை ஈர்ப்பதும் இன்று சர்வசகஜமாக இருக்கிறது. ஆனால், சமூக ஊடகங்கள் இன்னமும் முழு வீச்சில் அறிமுகமாகாத கால கட்டத்தில், இணையத்தில், பொதுமக்களே செய்தியாளர்களாக செயல்பட முடியும் என்பதை ஓ மை நியூஸ் உணர்த்தியது.

2007 ம் ஆண்டு வரை வெற்றிகரமாக செயல்பட்ட ஓ மை நியூஸ் அதன் பிறகு, தேக்கத்தை சந்தித்து, குடிமக்கள் இதழியலுக்கான வலைப்பதிவாக தன்னை குறுக்கி கொண்டது. இதன் எழுச்சி போலவே சரிவும் எதிர்பாராததாக அமைந்தாலும், குடிமக்கள் இதழியலுக்கான வெற்றிகரமான உதாரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

பி.கு: ஓ மை நியூஸ் செய்தி தளத்தை ஓ யியான் ஹோ (Oh Yeon-ho) என்பவர் துவக்கினார். கொரிய பாரம்பரிய செய்தி நிறுவனங்களின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த யியான், அமெரிக்காவில் உயர்கல்வி படித்துக்கொண்டிருந்த போது, பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அவர் உருவாக்க விரும்பிய ஊடகத்திற்கான திட்டத்தை சமர்பிக்க வேண்டியிருந்தது. எல்லோரும் நிருபர்களாக செயல்படக்கூடிய, இணைய நாளிதழ் ஒன்றுக்கான யோசனையை அவர் தனது திட்டமாக விவரித்திருந்தார். அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பியதும் இந்த திட்டத்தை ஓ மை நியூஸ் செய்திதளமாக உருவாக்கி வெற்றி கண்டார்.

வலை 3.0 தொடரின் ஒரு பகுதி

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *