வீட்டில் இருந்தே உலகை வலம் வர ஒரு இணையதளம்

6cb60fa2-86fa-4caa-b19b-c17f183f363bகொரோனா தாக்கம் காரணமாக, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலில், மனம் வெளி உலகை நினைத்து ஏங்குவது இயற்கையானது தான். இந்த நிலையில் வீட்டில் இருந்தே உலகை வலம் வர முடிந்தால் எப்படி இருக்கும்? திர்பி.காம் (https://www.thripy.com/) இதை சாத்தியமாக்குகிறது.

வீடியோ வழியே உலகை வலம் வாருங்கள் என அழைப்பு விடுக்கும் இந்த தளம் மூலம், வீடியோ வழியே பல்வேறு நகரங்களுக்கு சென்று வரலாம். நகரங்கள் மட்டும் அல்ல, அருங்காட்சியகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் எழில் கொஞ்சம் இடங்களை வீடியோவில் உலா வரலாம். எல்லாமே 4கே தர வீடியோ.

நகரங்கள் பட்டியலை கிளிக் செய்தால், நியூயார்க், டோக்கியோ, லண்டன் என உலகின் முக்கிய நகரங்களின் வீடியோ தொகுப்பை பார்க்க முடிகிறது. இதே போலவே, ஒவ்வொரு பகுதியையும் கிளிக் செய்து வீடியோ பயணத்தில் மூழ்கலாம். நேரத்தை விரட்டியடிப்பதோடு, உலகின் புதிய இடங்களை பார்த்து ரசித்தது போலவும் இருக்கும்.

கொரோனா பாதிப்புக்கு மத்தியில், வெப்கேம் வாயிலான காட்சிகளை பார்த்து ரசிப்பது நல்ல யோசனை தான். திர்பி தளமோ, ஒரே இடத்தில் இருந்து வீடியோ பயணங்களை மேற்கொள்ள வழி செய்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.