கொரோனாவை எதிர்கொள்ள தொழில்நுட்ப நேசக்கரம்!

ventilatorகொரோனா உலகை உலுக்கி கொண்டிருக்கிறது. வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த சவாலை எதிர்கொள்வதில், தொழில்நுட்ப வல்லுனர்களும் களமிறங்கியிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இடங்களில், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை டாக்டர்களை விழி பிதுங்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க வெண்டிலேட்டர்கள் போதிய அளவு இல்லாத போது, கையறு நிலை உண்டாகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், அவசர நிலையில் பயன்படுத்த, 3டி பிரிண்டிங் முறையில் வெண்டிலேட்டர் கருவிகளை தயாரிப்பதற்கான முன்னோட்ட வடிவமைப்பை உருவாக்க ஓபன்சோர்ஸ்வெண்டிலேட்டர் (https://opensourceventilator.ie/) குழு முயன்று வருகிறது. இந்த முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள பொறியாளர்கள், மருத்துவ வல்லுனர்கள் பங்கேற்று தங்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள என்ன செய்வது என்பது தொடர்பான பேஸ்புக் விவாத களமாக துவங்கிய இந்த குழு, தற்போதைய நெருக்கடிக்கு கூட்டு முயற்சியால் தீர்வு காண, ஓபன் சோர்ஸ் அடிப்படையில் செயல்பட தீர்மானித்து சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. மருத்துவ துறைக்கு தேவையான முக்கிய கருவிகளை, குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் தயாரித்துக்கொள்ள வழி செய்ய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, அதற்கேற்ற வடிவமைப்புகளை கூட்டு முயற்சியில் உருவாக்க தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இதே போலவே, சாப்ட்வேர் டொனேஷன் (https://softwaredonation.org/ ) இணையதளம், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், இணைய நிறுவனங்கள் தங்கள் மென்பொருள் சேவைகளை நன்கொடையாக வழங்க வழி செய்து வருகிறது.

வீட்டில் இருந்தே பணியாற்றும் கலை!

கொரோனா அச்சத்தால், பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளன. அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்வதில் பல அணுகூலங்கள் இருந்தாலும், சவால்களும், சங்கடங்களும் இல்லாமல் இல்லை. அதிலும் குறிப்பாக, பல ஆண்டுகளாக அலுவலக சூழலுக்கு பழகியவர்களுக்கு ஒர்க் பிரம் ஹோம் என்பது சிக்கலாக இருக்கலாம். இந்த புதிய சூழலுக்கு மனதளவில் பழகுவதோடு, வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான தொழில்நுட்ப நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இதை எல்லாம் நினைத்து கவலைப்பட வேண்டாம். வீட்டில் இருந்து பணியாற்றுகிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய குறிப்புகளையும், ஆலோசனைகளையும் ஆன்லைனில் அழகாக தொகுத்தளிக்கிறது டபிள்யுஎப்எச்மேனுவல் (https://wfhmanual.com/) இணையதளம்.

வீட்டில் இருந்து பணியாற்றும் போது, உங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகளையும், சிறந்த அலுவல் செயல்முறைகளை உருவாக்கி கொள்வதற்கான வழிமுறைகளையும் இந்த தளம் அடையாளம் காட்டுகிறது. அதோடு, ஏற்கனவே இப்படி பணியாற்றிக்கொண்டிருப்பவர்களை அறிமுகம் செய்து கொண்டு, அவர்களின் அனுபவ குறிப்புகளையும் தொகுத்தளிக்கிறது. நீங்களும் கூட இது போன்ற அனுபவ குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும், ரிமோட்-டூல்ஸ் (https://www.remote.tools/) இணையதளம்,  எங்கிருந்தாலும் பணியாற்ற தேவையான குறிப்புகளையும், அதற்கு உதவும் டிஜிட்டல் சேவைகளையும் அறிமுகம் செய்கிறது. ஸ்டேசேன் (https://www.staysane.co/ ) இணையதளம், சமூக தொலைவை பின்பற்ற வீட்டில் தனித்திருக்கும் போது, செய்யக்கூடிய மெய்நிகர் சந்திப்புகள் போன்றவற்றை பரிந்துரைக்கிறது.

video

வீடியோ சந்திப்பு வழிகாட்டி

வீடியோ சந்திப்புக்கு என்று சில நெறிமுறைகள் இருக்கின்றன. கொரோனா பரவுவதை தடுக்க, பலரும் வீட்டில் இருந்தே பணியாற்றிக்கொண்டிருக்கும் சூழலில், அலுவல் சார்ந்த தகவல் தொடர்புக்காக வீடியோ சந்திப்புகளை அதிகம் நாட வேண்டியிருக்கும் நிலையில், இந்த நெறிமுறைகளை அறிந்திருப்பது அவசியம்:

  • இடையூறுகள் இல்லாத தனியிடத்தை தேர்வு செய்யவும். ஹெட்போன் அணிந்து கொள்வது சிறந்தது. உரையாடலை துவக்கும் முன், வீட்டில் உள்ள மற்றவர்களிடம் தகவல் தெரிவித்து, இடையே குறுக்கிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளவும்.
  • காமிராவை விட்டு அதிகம் தள்ளி இருக்க வேண்டாம். அதற்காக, மிகவும் அருகாமையிலும் வர வேண்டாம். காமிரா, கண் பார்வை மட்டத்தில் இருந்தால், மறுமுனையில் இருப்பவரை பார்த்து பேசுவது போல அமையும்.
  • வீடியோ சந்திப்பும் நேரடி சந்திப்பு போன்றது தான். எனவே, பக்காவாக உடையணிந்து அலுவலகத்தில் இருப்பது போலவே தோன்றுவது ஏற்றது.
  • காமிரா முன் பேசிக்கொண்டிருக்கும் போது, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களை மேயாமல், உரையாடலில் கவனம் செலுத்த வேண்டும்.
  • நீங்கள் பேசாத போது, உங்கள் பக்க மைக்கை மியூட் செய்யவும். அதே போல, மறுமுனையில் இருப்பவரை இடைமறித்து பேசமால், நீங்கள் பேச விரும்புவதை உணர்த்தவும்.
  • வணக்கம் சொல்லி துவங்கவும். விடைபெறும் போது குட்பை சொல்லவும்.

வீடியோ சந்திப்பு வழிகாட்டுதல்களை மேலும் அறிய: https://www.entrepreneur.com/article/238902

இது பயனில்லா இணையதளம்!

இணையத்தில் பயனுள்ள இணையதளங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அதே நேரத்தில், அதிகம் பயனில்லாத, ஆனால் சுவாரஸ்யமாக விளங்கும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. வீட்டிலேயே இருந்து அலுத்துப்போகும் போது, இந்த தளங்களை எட்டிப்பார்ப்பது ஊக்கம் அளிக்கலாம். இது போன்ற தளங்களை எல்லாம் ஒரே இடத்தில் பார்க்க வழி செய்கிறது தியூஸ்லெஸ்வெப் (https://theuselessweb.com/) இணையதளம். இந்த தளத்தை பயன்படுத்தும் முறையும் கொஞ்சம் சுவாரஸ்யமானது. இதன் முகப்பு பக்கத்தில், ‘தயவுசெய்து, இன்னொரு பயனில்லா இணையதளத்திற்கு அழைத்துச்செல்லவும்” என பெரிய எழுத்துகளில் உள்ள வாசகத்தை கிளிக் செய்தால், அத்தகை ஒரு இணையதளத்திற்கு கொண்டு செல்கிறது. இப்படி ஒவ்வொரு முறை கிளிக் செய்யும் போதும், ஒரு புதிய பயனில்லா தளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். இணையதளத்தை உருவாக்க எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என வியப்பாக இருக்கும். உதாரணமாக, கார்ண்டாக் எனும் பெயர் கொண்ட இணையதளத்தில், அதே பெயரிலான உணவுப்பொருள் பல வரிசைகளில் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

இது நெட்பிளிக்ஸ் பார்ட்டி

அவரவர் வீட்டில் தனியே இருந்தாலும், இணையம் வழியே சந்தித்துக்கொள்ளும் வசதியை பல இணையதளங்கள் வழங்குகின்றன தெரியுமா? நெட்பிளிக்ஸ் பார்ட்டி (https://www.netflixparty.com/) எனும் குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவை மூலம், வெவ்வேறு இடங்களில் உள்ள நண்பர்களுடன் இணைந்து, நெட்பிளிக்சில் திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடரை பார்க்க முடியும். இந்த பிரவுசர் நீட்டிப்பு மென்பொருளை டவுண்லோடு செய்து நிறுவிய பின், நெட்பிளிக்ஸ் வீடியோவை இயக்கிய பின், படம் பார்க்கும் இணைப்பை உருவாக்கி நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம். ஹவுஸ்பார்ட்டி (https://houseparty.com/) சேவையும் இதே ரகம் தான். இணையம் வழி குழு வீடியோ உரையாடலுக்கு வழி செய்யும் இந்த செயலி மூலம், மெய்நிகர் உலகில் நட்பு கொள்ளலாம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *