கொரோனா தாக்கத்தின் நடுவே, அதிகம் பயன்படுத்துப்படும் இணைய சேவைகளில் ஒன்றாக ஜூம் அமைந்துள்ளது. வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ஜூம் செயலி, பாடம் நடத்துவது முதல் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது வரை பலவற்றுக்கு பயன்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் ஜூம் செயலியின் பிரபலம் அதிகரித்திருக்கிறது. இதனிடையே ஜூம் செயலியின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகார்களும் எழுந்துள்ளன. ஜூம் பாமிங் எனப்படும் பிரச்சனை தவிர, தரவுகள் சேகரிப்பு என்கிரிப்ஷன் பிரச்சனை உள்ளிட்ட சர்ச்சைகளும் எழுப்படுகின்றன. ஜூம் பயன்பாடு தொடர்பாக பல் வேறு எச்சரிக்கைகளும் செய்யப்படுகின்றன.
தொடரும் சர்ச்சைகளால் பயனாளிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஜூம் செயலி மற்றும் தொடர்புடைய சர்ச்சைகள் குறித்து அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்:
- ஜூம் (Zoom) செயலி என்ன செய்கிறது.
ஜூம், செயலி வீடியோ சந்திப்புகளுக்கு வழி செய்யும் சேவை. இதன் மூலம், இணையத்தில் வீடியோ உரையாடல்களை மேற்கொள்ளலாம். இணையதளம், செயலி வடிவில் பயன்படுத்தலாம்.
- ஜூம் சேவையை அறிமுகமானது எப்படி?
ஜூம், பல ஆண்டுகளாக இருக்கிறது. எரிக் யுவான் எனும் சீன அமெரிக்கார் 2011 ல், ஜூம் சேவையை துவக்கினார். 2013 ல் முதல் வீடியோ சந்திப்பு சேவையை வழங்கி வருகிறது. ஏற்கனவே தொழில்முறை பயனாளிகள் மத்தியில் பிரபலமாக இருந்தது. கொரோனா சூழலில் வீடியோ சந்திப்பு வசதியை நாடுபவர்கள் மத்தியிலும் பிரபலமானது.
- ஜூம் செயலி திடிரென பிரபலமானது ஏன்?
இணையத்தில் வீடியோ சந்திப்பு வசதியை வழங்கும் சேவைகள் பல இருக்கின்றன. இந்த சேவைகளில் ஜூம் மட்டும் தனித்து நின்று பிரபலமாக அதன் எளிமையே முக்கிய காரணம். அதாவது ஜூம் செயலி பயனாளிகளுக்கு மிகவும் நட்பானதாக அமைந்துள்ளது. எனவே, யார் வேண்டுமானாலும் அதை எளிதாக பயன்படுத்த முடிகிறது. இதன் காரணமாகவே, ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்பு நடத்த ஜூமை நாடுகின்றனர். நாடக கலைஞர்கள் ஜூமில் நாடகம் நடத்துகின்றனர். எழுத்தாளர்கள் ரசிகர்களை சந்திக்கின்றனர். நண்பர்கள் பரஸ்பரம் ஆன்லைனில் சந்திக்கின்றனர்.
- ஜூமில் இப்போது என்ன பிரச்சனை?
ஜூம் செயலி பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில், அதன் பல்வேறு அம்சங்களும் உற்று கவனிக்கப்படுகின்றன. இதில் பல்வேறு பாதுகாப்பு குறைப்பாடுகளும் தெரியவந்துள்ளன. இவற்றில், ஜூம்பாமிங் ஒன்று.
- அதென்ன ஜூம்பாமிங் (Zoombombing )?
ஜூம் வீடியோ சந்திப்புகளில், அழைக்கப்படாத அந்நிய நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து அநாகரிகமாக நடந்து கொள்வதையும், தாக்குதலில் ஈடுபடுவதையும் ஜூம்பாமிங் என்கின்றனர். ஜூமின் எளிமையின் பக்கவிளைவும் என்று இதை சொல்லலாம். இதன் காரணமாக, ஜூம் சேவையை பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர்.
- ஜூம் செயலியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
ஜூம்பாமிங் மட்டும் அல்ல ஜூமில் உள்ள பிரச்சனை. பிரைவசி சார்ந்த கவலைகளும் எழுந்துள்ளன. நிறுவனத்தின் சீன தொடர்பும் கேள்விகளை எழுப்புகிறது. மேலும், பயனாளிகள் தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த சேவையின் என்கிர்ப்ஷன் தன்மை குறித்தும் சந்தேகங்கள் இருக்கின்றன. எனவே, ஜூம் பயன்பாட்டில் கவனம் தேவை என்று சொல்லப்படுகிறது.
- இந்த சர்ச்சைகளுக்கு ஜூம் பதில் என்ன?
ஜூம் சேவை தொடர்பான கேள்விகளையும், சர்ச்சைகளையும் நிறுவனம் அலட்சியம் செய்யாமல், அவற்றை சரி செய்வதில் உரிய கவனம் செலுத்தி வருகிறது. ஜூம் நிறுவனர், எரிக் யுவான், ஜூம் தொடர்பான பிரச்சனைகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். ஜூம்பாமிங் பிரச்சனையை பொருத்தவரை, ஸ்கிரின்ஷேரிங்கை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல வழிகளை நிறுவனம் தெரிவித்துள்ளது. (https://blog.zoom.us/wordpress/2020/03/20/keep-uninvited-guests-out-of-your-zoom-event/) மேலும், 90 நாட்களுக்கு புதிய அம்சங்கள் அறிமுகத்தை நிறுத்தி வைத்து பிரைவசி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
- பயனாளிகள் என்ன செய்ய வேண்டும்?
ஜூம் செயலி தொடர்பான சர்ச்சை இணைய சேவைகளில் உள்ள பிரைவசி கவலையை வெளிப்படுத்தியுள்ளது. எந்த ஒரு இணைய சேவையிலும், பிரைவசி பாதுகாப்பு ஆதார அம்சமாக இடம்பெற்றிருக்க வேண்டும் எனும் கோரிக்கையை இது வலுப்படுத்துகிறது. பயனாளிகள் தரப்பில், அவர்கள் பயன்படுத்தும் சேவையின் தன்மை குறித்த விழிப்புணர்வு மேலும் தேவை என்பதையும் உணர்த்துகிறது.
நன்றி; தமிழ் இந்து