ஒலி கோப்புகளுக்கான இணையதளம்

sound bibleஒலி வேதம் எனும் பெயர் நன்றாக இருக்கிறதா? இதே பெயரில் ஆங்கிலத்தில் ஒரு இணையதளம் இருக்கிறது- சவுண்ட் பைபில் ( https://soundbible.com/). ஒலி கோப்புகளுக்கான இணையதளம்.

இந்த தளத்தில், பலவிதமான ஒலிகளை கோப்பு வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கன மழை பெய்யும் ஓசை, பெரிய விமானம் தரையிறங்கும் ஒலி, ஹோட்டலில் சர்வரை அழைக்கும் மணியோசை என  விதவிதமான ஒலி கோப்புகளை இந்த தளத்தில் அணுகலாம்.

விளையாட்டு ஒலிகள், கேளிக்கை ஒலிகள் என பலவிதமான ஒலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

யூடியூப் வீடியோ அல்லது ஆவணப்படம் போன்றவற்றில் பயன்படுத்த பொருத்தமான ஒலி தேவை எனில் இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆசிரியர்களும் வகுப்பில் ஒலிகளை மேற்கோள் காட்ட விரும்பினால் இந்த தளத்தை நாடலாம்.

ஒலி கோப்புகள் இலவசமாக, கிரியேட்டிவ் காமென்ஸ் உரிமை ஆகியவறின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.

புதுமையான இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ள இணைய மலர் மின்மடலை பின் தொடரவும்;

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.