தொழில்நுட்ப அகராதி- டாங்கில் (Dongle ) – வன் பூட்டு

220px-Drone_4டாங்கில் (Dongle ) என்றால், கூடுதல் செயல்பாட்டை அளிப்பதற்காக, எந்த ஒரு சாதனத்திலும் பொருத்தக்கூடிய சிறிய கம்ப்யூட்டர் வன்பொருள் என்கிறது விக்கிபீடியா. அந்த விதத்தில் பார்த்தால், டாங்கிலை தமிழில் வன்பொருள் துண்டு அல்லது வன் துண்டு என குறிப்பிடலாம்.

ஆனால், தமிழில் ஏற்கனவே வன் பூட்டு என குறிப்பிடப்படுகிறது.

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், குறிப்பிட்ட வகை மென்பொருளுக்கான பாதுகாப்பு அம்சமாக டாங்கில் பயன்படுத்தப்படுவதாகவும் விக்கிபீடியா கட்டுரை தெரிவிக்கிறது. அதாவது, உரிமம் பெற்று பயன்படுத்த வேண்டிய மென்பொருள் எனில், அதை டாங்கில் எனும் சிறிய வன்பொருள் துண்டாக வழங்குகின்றனர். இந்த துண்டை கம்ப்யூட்டரில் பொருத்தினால் அதில் உள்ள மென்பொருளை பயன்படுத்தலாம்.

ஆக, மென்பொருள் பயன்பாட்டிற்கான பாதுகாப்பு அல்லது கட்டுப்பாட்டு அம்சத்தை கொண்டிருப்பதால், தமிழில் இதை வன் பூட்டு என்று சொல்வதே சரியாக இருக்கும்.

ஆனால், வன் பூட்டு அல்ல வன் துண்டு என்பதே சரியாக இருக்கும் என வாதிட நினைத்தால் தப்பில்லை. ஏனெனில், இணைய உலகில் டாங்கில் எனும் சொல் பயன்படுத்தப்படுப்படும் விதம் தொடர்பாக தொடர் பஞ்சாயத்து இருக்கிறது.

நிற்க இந்த இடத்தில் டாங்கில் சொல்லின் மூலம் பற்றிய தகவல்களை பாரக்கலாம். டாங்கில் என்ற சொல் எப்படி வந்தது எனத்தெரியவில்லை என கூறப்பட்டாலும், தொங்கி கொண்டிருப்பதை குறிக்கும் டேங்கில் எனும் ஆங்கில வார்த்தையில் இருந்து இது வந்திருக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் இருக்கின்றன.

எனினும், 1980 களில் முதன் முதலில் கம்ப்யூட்டர் துறையில் இதன் பயன்பாடு அமைந்ததாகவும் கருதப்படுகிறது.

இந்த சொல் ஆராய்ச்சியில் கூட அதிக சர்ச்சை இல்லை; ஆனால் இந்த சொல் பயன்படுத்தப்படும் விதம் தொடர்பாக பலருக்கு அதிருப்தி இருக்கிறது. இதனால் தூய டாங்கில் ஆதரவாளர்களும், பொது டாங்கில் ஆதரவாளரர்களும் மோதிக்கொள்கின்றனர்.

காலப்போக்கில் டாங்கில் எனும் சொல், மென்பொருள் பாதுகாப்பு கொண்ட வன் பொருளை குறிப்பதற்காக மட்டும் அல்லாமல், கம்ப்யூட்டரின் யு,எஸ்.பி போர்ட்டில் பொருத்தக்கூடிய எல்லா வகையான துணை சாதனங்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.  பென் டிரைவில் துவங்கி இணைய இணைப்பிற்காக பயன்படுத்தப்படும் வை-பை சாதனம் வரை எல்லாமே டாங்கில் என்றே சொல்லப்படுகிறது.

இதற்கேற்ப, வைஸ்கீக் (wisegeek) இணையதளம் சேமிப்பு அல்லது நினைவுத்திறன் யு.எஸ்.பி டாங்கில், கம்ப்யூட்டர் மற்றும் சாதனங்களிடையே எளிதான கோப்பு பரிமாற்றத்திற்கு வழி செய்கிறது’ என விளக்கம் அளிக்கிறது.

இதன்படி பார்த்தால், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பொருத்தக்கூடிய எல்லா சாதனங்களுமே டாங்கில் தான்.

டாங்கில் பொருளாக்கம் இப்படி விரிவடைந்துள்ளதை , டாங்கில் என்றால்,மென்பொருள் பாதுகாப்புக்கான சாதனம் எனும் விளக்கத்தை முதன்மையாக கருதும் தூய டாங்கில் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள், டாங்கில் எனும் சொல் தவறாக பயன்படுத்தப்படும் இடங்களில் ஆஜராகி இது தொடர்பாக வாதாடவும் செய்கின்றனர்.

இது தொடர்பாக லாங்குவேஜ் லாக் எனும் (https://languagelog.ldc.upenn.edu/nll/?p=1475 )வலைப்பதிவில் விரிவான பதிவு இருக்கிறது. சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட இந்த பதிவின் இறுதியில், தில்பர்ட் கார்ட்டூன் கதைத்தொடரில், டாங்கில் சொல் பயன்பாடு தொடர்பான ஒரு பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.

டாங்கில் பொருளும், இது தொடர்பான சர்ச்சையும் தெரிந்தால் மட்டுமே இந்த கார்ட்டூன் கதையை ரசிக்க முடியும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.