செய்திகளின் கள நிலவரம் அறிய உதவும் புதுமை செயலி

g (2)உங்கள் செய்தி பசியை தீர்க்க உதவும் செயலிகள் பட்டியலில் இணைத்து கொள்ளக்கூடிய வகையில் புதிய செய்தி செயலி ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. கிரவுண்ட்.நியூஸ் (ground.news ) எனும் பெயரிலான இந்த செயலி, புதிய செய்திகளை வாசிக்க வழி செய்வதோடு, அவற்றின் உண்மைத்தன்மையையும் உறுதி செய்து கொள்ள வழி செய்கிறது. களத்தில் இருப்பவர்களிடம் இருந்தே இதற்கான தகவல்களை பெறலாம் என்பதோடு, விரும்பினாலும் நீங்களும் இதில் பங்கேற்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது. இந்த உரையாடல் தன்மையே கிரவுண்ட் செயலியை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது.

இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்வதற்கு வழி செய்யும் இணையதளங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இவைத்தவிர ஸ்மார்ட்போனிலேயே உடனடி செய்திகளை தெரிந்து கொள்ள வழி செய்யும் பிரத்யேக செயலிகளும் அநேகம் இருக்கின்றன. திரட்டி வகையைச் சேர்ந்த இந்த செயலிகள் ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இணையதளங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து செய்திகளை தெரிந்து கொள்ள வழி செய்கின்றன. இந்த செயலிகளை வைத்திருந்தால் போதும் உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி இருக்க இந்த பிரிவில் புதியதொரு செயலிக்கான தேவை என்ன என கேட்கலாம். இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் சேவையாக கிரவுண்ட் செயலி அறிமுகமாகி இருக்கிறது. பிரேக்கிங் நியூஸ் எனப்படும் உடனடி செய்திகள் தொடர்பான தகவல்களை உறுதி செய்து கொள்ள வழி செய்யும் வகையில் இந்த செயலியின் செயல்பாடு அமைந்துள்ளது.

பொய்ச்செய்தி பிரச்சனையால் இணையத்தில் செய்திகளின் நம்பகத்தன்மை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செய்திகளை உறுதிப்படுத்திக்கொள்ள (வெரிபை) வழி செய்யும் அம்சத்துடன் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் செயல்படக்கூடிய இந்த செயலி அடிப்படையில் மற்ற செய்தி செயலிகளை போலவே செயல்படுகிறது. இந்த செயலியை தரவிறக்கம் செய்து உள்ளே நுழைந்ததும் கூகுள் அல்லது பேஸ்புக் லாகின் மூலம் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

உறுப்பினரான பின், செய்திகளை தெரிந்து கொள்ள இரண்டுவிதமான வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. முதல் வாய்ப்பு இருப்பிடம் சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்வதற்கானது. பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தை தெரிவித்தால், அந்த இடம் தொடர்பான செய்திகளை வாசிக்கலாம். அதற்கேற்ப உள்ளூர் ஊடகங்களின் செய்திகள் தோன்றும். இருப்பிடத்தை தெரிவிக்க விரும்பவில்லை எனில், பொதுவாக செய்திகளை வாசிக்கலாம்.

முன்னணி ஊடகங்கள் மற்றும் செய்தி தளங்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வெளியாகும் செய்திகளை பார்க்கலாம். இவைத்தவிர சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளையும் பார்க்கலாம். இருப்பிடம் சார்ந்த செய்திகள் உலக வரைபடத்தின் மீது சுட்டிக்காட்டப்படுகின்றன.

உடனடி செய்திகள், முன்னணி செய்திகள் என செய்திகள் தனித்தனியே அடையாளம் காட்டப்படுகின்றன. இவைத்தவிர பயனாளிகள் தாங்கள் விரும்பும் செய்தி பிரிவுகளை தேர்வு செய்து கொண்டு அவற்றில் மட்டும் கவனம் செலுத்தலாம். குறிப்பிட்ட செய்தி குறித்த தொடர்புடைய தகவல்களையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

இவை எல்லாமே, பொதுவாக அனைத்து செய்தி செயலிகளிலும் இருக்கும் அம்சங்கள் தான். கிரவுண்ட் செயலியில் என்ன புதிய அம்சம் என்றால், குறிப்பிட்ட எந்த செய்தி தொடர்பாகவும் பயனாளிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து மற்றவர்களுடன் உரையாடலாம். இந்த அம்சமே செய்திகளில் உள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்வதற்கான வசதியாகவும் அமைகிறது.

எந்த ஒரு செய்தியை வாசித்துவுடன் பயனாளிகள், அது தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். செய்தி ஏமாற்றம் அளிக்கிறது, நல்ல செய்தி, நான் உங்களுடன் இருக்கிறேன் மற்றும் சந்தேகமாக இருக்கிறது என நான்கு விதமான வாய்ப்புகளை கிளிக் செய்து கருத்து தெரிவிக்கலாம். இதன் மூலம் குறிப்பிட்ட அந்த செய்தி தொடர்பான உரையாடலை மேற்கொள்ளலாம். செய்தி நிகழ்ந்த இடத்தில் இருப்பவர்களோடு இந்த உரையாடலை மேற்கொள்ளலாம் என்பது தான் கவனிக்க வேண்டிய அம்சம். அதாவது களத்தில் உள்ளவர்களிடமே கருத்து கேட்கலாம்.

எந்த ஒரு செய்தியை வாசிக்கும் போதும், செய்தி நிகழ்ந்த இடத்திற்கு அருகாமையில் இருக்கும் பயனாளிகளை இந்த செயலி அடையாளம் காட்டுகிறது. பரபரப்பான செய்தி எனில், கள நிலவரம் என்ன என்று பயனாளிகளிடமே கேட்கலாம். செய்தி தொடர்பான தகவல்கள் சரி தானா என்றும் கேட்கலாம். அவர்கள் சொல்லும் விபரங்கள் களத்தில் உள்ளவர்கள் அளிக்கும் நேரடி சாட்சியங்களாக அமையலாம். இந்த உரையாடல் கூடுதல் தகவல்களை அளிக்கும் வகையிலும் அமையலாம்.

இதே போலவே நீங்களும் உங்கள் இருப்பிடம் அருகே நிகழும் செய்திகளை தகவல்களாக பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் அருகாமையில் நடைபெறும் நிகழ்வு தொடர்பான கேள்விகளை மற்றவர்கள் கேட்கும் போது நீங்களும் கள நிலவரத்தை தெரிவிக்கலாம். அல்லது ஸ்மாட்போனில் ஒளிபடம் அல்லது காணொலி காட்சியை பதிவு செய்து, நீங்களே செய்தியாகவும் பகிர்ந்து கொள்ளலாம்.

பொதுவாக செய்திகளை வாசிக்கவும், நம்மை கவரும் செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியையும் எண்ணற்ற செய்தி செயலிகள் அளிக்கின்றன. இந்த செயலி ஒரு படி மேலே சென்று, செய்திகள் தொடர்பாக களத்தில் உள்ளவர்களுடன் உரையாடி தகவல்களை உறுதி செய்து கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது.

தகவல்களை தெரிவிக்கும் பயனாளிகளின் நம்பகத்தன்மைக்கான ரேட்டிங் புள்ளிகள் வழங்குவது உள்ளிட்ட அம்சங்களும் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இன்றைய சூழலில் மிகவும் தேவையான செயலி தான். எதிர்பார்த்த அளவுக்கு பயனாளிகள் சேர்ந்து, அவர்கள் பயன்படுத்தும் விதமும் சிறப்பாக இருந்தால் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் தகவல்களுக்கு: https://ground.news/

தளம் புதிது; ஆலோசனை கூட்டங்களுக்கான இணையதளம்

அலுவலகம் என்றாலே அடிக்கடி ஆலோசனை கூட்டங்களும், குழு சந்திப்புகளும் நடைபெறுவது இயல்பு தான். அலுவலக ஆலோசனை கூட்டங்கள் பயனுள்ளதாக அமையலாம் அல்லது ஆளைவிடுங்கள் சாமி என சொல்லும் வகையில் அலுப்பூட்டக்கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் அதற்காக ஆலோசனை கூட்டங்களை அலட்சியம் செய்துவிடவும் முடியாது.

அலுவலக மற்றும் வர்த்தக சூழலில் சிறந்த முடிவு எடுக்க குழு ஆலோசனை அவசியம். இந்த ஆலோசனைகளை எப்படி திறம்பட மேற்கொள்வது ஒரு கேள்வி என்றால், எப்போது ஆலோசனை கூட்டத்தை நாட வேண்டும் என்பது இன்னொரு முக்கிய கேள்வி.

சில நேரங்களில் குழு விவாதத்திலேயே நேரம் வீணாகலாம். இன்னும் சில நேரங்களில் எளிதாக முடிவெடுப்பதற்கு பதில், குழு ஆலோசனை என அல்லாடிக்கொண்டிருக்கலாம். இத்தகைய அனுபவம் உள்ளவர்களுக்கு, இப்போது குழு ஆலோசனைக்கான கூட்டம் அவசியமா? எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் ஷுட் இட் பி ஏ மீட்டிங் இணையதளம் அமைந்துள்ளது.

இந்த தளத்தில் கேட்கப்படும் எளிய கேள்விகளுக்கு பதில் அளித்தால், இப்போது ஆலோசனை அவசியமா அல்லது அதைவிட எளிதாக முடிவெடுக்கலாமா என தீர்மானிக்கலாம். அலுவலக கூட்டங்களின் செயல்திறனை நிர்வகிக்க உதவும் ரேட் தி மீட்டிங் சேவை வழங்கும் இணையதளம் தனது துணை தளமாக இந்த சேவையை உருவாக்கியுள்ளது.

இணைய முகவரி: https://shoulditbeameeting.com/

வீடியோ புதிது; அந்த கால நுட்பங்களுக்கான சேனல்

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால், கேட்ஜெட்களும் ஸ்மார்ட் சாதனங்களும் புதிது புதிதாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் பழைய தொழில்நுட்பங்கள் பல வழக்கொழிந்து போய்விட்டன. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த கேசெட், பிளாப்பி டிஸ்க், சுழற்றும் டயல் கொண்ட தொலைபேசி போன்ற சாதனங்களை இக்கால தலைமுறையினர் பார்த்து கூட இருக்கமாட்டார்கள். இப்படி ஒரு காலத்தில் பிரபலமாக இருந்து பின்னர் வழக்கொழிந்து போய்விட்ட தொழில்நுட்பங்களை காணொலி படங்களாக அறிமுகம் செய்கிறது மியூசியம் ஆப் ஆப்சலெட் ஆப்ஜெக்ஸ் யூடியூப் சேனல். இந்த சேனலில் குண்டு பல்ப், டைப்ரைட்டர், போனோகிராம் போன்ற தொழில்நுட்பங்களை காணலாம். இதுவும் ஒரு வகையான ஆவணப்படுத்தல் தான் அல்லவா!,

தகவல் புதிது; கூகுள் அளிக்கும் புதிய டொமைன் முகவரி

தேடியந்திர நிறுவனமான கூகுள் தன்வசம் உள்ள டாட் ஆப் (.app) எனும் முகவரியை மற்றவர்கள் பதிவுக்காக திறந்துவிட்டுள்ளது. இணைய உலகில் டாட்.காம் உள்ளிட்ட டொமைன் முகவரிகள் பிரபலமாக உள்ளன. இந்த வரிசையில் புதிய டொமைன் முகவரிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் டாட்.ஆப் எனும் முகவரியை கூகுள் வாங்கியது.

தற்போது இந்த டொமைனுடன் முடியும் புதிய முகவரிகளை மற்றவர்களுக்கு கூகுள் திறந்துவிட்டுள்ளது. செயலிகளை உருவாக்குபவர்கள் தங்கள் செயலிகளுக்கான இருப்பிடமாக உள்ள இணையதளங்களை இந்த முகவரியுடன் அமைத்துக்கொள்ளலாம். இந்த முகவரிகள் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதோடு, என்கிரிப்ஷன் உள்ளிட்ட நவீன பாதுகாப்பையும் அளிக்கும் என்பது முக்கிய அம்சமாகும். ஏறகனவே பல செயலி உருவாக்குனர்கள் இந்த முகவரியில் தங்களுக்கான தளங்களை பதிவு செய்யத்துவங்கியுள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு; https://get.app/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.