இளையராஜாவும் இசை தேடியந்திரங்களும்!

ilaநான் தேடியந்திரங்களின் ரசிகன். அதிலும் குறிப்பாக இசை தேடியந்திரங்கள் மிகவும் பிடிக்கும். வரி வடிவங்களை தேடுவதை விட ஒலி காரணிகள் அடிப்படையில் இசைத்தேடலில் ஈடுபடுவது தொழில்நுட்ப சவால். அந்த வகையில் பல அருமையான தேடியந்திரங்கள் இருக்கின்றன. இவற்றில் பல காணாமல் போய் விட்டன. ஆனால் புதிதாகவும் பல உருவாக்கப்பட்டு வருகின்றன. இசை தேடியந்திரங்கள் பற்றி ஆர்வத்துடன் எழுதியும் வந்திருக்கிறேன். குறிப்பாக தமிழ் இந்து இணைய இதழில் எழுதிய தேடியந்திர தொடரில் இசை மயமான தேடியந்திரங்கள் பற்றி தனியே எழுதியுள்ளேன். எதற்கு இந்த சுய புராணம் என்றால், இசை தேடியந்திரங்கள் பற்றி எழுதும் போது நான் பின்பற்றும் அளவுகோள் பற்றி குறிப்பிடுவதற்காக தான். பெரும்பாலான இசை தேடியந்திரங்கள் மேற்கத்திய இசையை மையமாக கொண்டவை. எனவே அவை தரும் தேடல் அநேகமாக மேற்கத்திய இசை சார்ந்தவையாகவே இருக்கும்.

ஆனால் இசைக்கு மொழி ஏது? என்று சொல்லப்படுவதை போல பல இசைத்தேடியந்திரங்கள் ஒலி குறிப்புகள் அடிப்படையில் நம்ம இசையையும் தேடித்தர வல்லவை. ஆகவே, நம்மவர்களுக்கு பரிந்துரைக்கும் போது, பயனுள்ளதாக இருக்குமா என இசை தேடியந்திரங்களை பரிசோதித்து பார்ப்பது என் வழக்கம். அதாவது அந்த தேடியந்திரங்களில் இளையராஜா எனும் பெயரை டைப் செய்து தேடிப்பார்ப்பேன். ராஜாவின் ஒரு சில பாடல்களையாவது தேடித்தந்தால், அந்த தேடியந்திரம் பற்றி தயங்காமல் எழுதுவேன்.

இந்த பதிவிற்காக, இப்போது சவுண்ட்யூநீட் எனும் தேடியந்திரத்தை பயன்படுத்திப்பார்த்தேன். ஒலிகளுக்கான யூடியூப் என கருதக்கூடிய சவுண்ட் கிளவுட் உள்ளிட்ட இசை தளங்களில் தேடி முடிவுகளை அளிக்கும் இந்த தேடியந்திரத்தில் இளையாராஜாவை தேடிப்பாருங்கள்: http://soundyouneed.com/search/ilayaraja

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *