இணையத்தில் டைரி எழுதலாம் வாங்க!

dayபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீணாக்குகுறோம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? சமூக ஊடகங்களில் நிலைத்தகவல்களை வெளியிடும் வழக்கம் மிகை பழக்கமாக மாறி விட்டது என்ற எண்ணமும் உங்களை வாட்டுகிறதா? இவற்றில் இருந்து விடுபட என்ன வழி என யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? எனில் டேடிப் (https://daydip.com/ ) எனும் எளிமையான இணைய சேவையை பயன்படுத்திப்பார்க்கலாம்.

’டேடிப்’ சேவை உங்களுக்கு ஈர்ப்புடையதாக இருந்தால், சமூக ஊடக மோகத்திற்கான மாற்றாக இந்த சேவை அமைந்திருப்பதை உணரலாம்.

சமூக ஊடகத்திற்கு மாற்றாக கருதலாம் என்றாலும், டேடிப் சேவையை இன்னொரு சமூக ஊடக சேவையாகவோ, பேஸ்புக்கிற்கு போட்டி என்றோ கருதுவதற்கில்லை. சமூக ஊடக சேவைகளில் பார்க்க கூடிய விரிவாக வசதிகள் எல்லாம் இதில் கிடையாது. இது மிக எளிதான சேவை. டேடிப், இணைய டைரி சேவையின் கீழ் வருகிறது. இந்த சேவை மூலம் இணையத்தில் நீங்கள் டைரி எழுதி பராமரிக்கலாம்.

டேடிப் தளத்தின் அறிமுக வாசகம், “ டைரி இறந்துவிட்டது, இப்போது டிப் செய்வது தான் வழி” என்பது போல அமைந்திருந்தாலும், இந்த தளம் டைரி குறிப்புகளை எழுதவே வழி செய்கிறது. இதை கொஞ்சம் புதுமையாக செய்ய வழி செய்கிறது.

டைரி என்றதும் அதன் தேதியிட்ட பக்கங்களும், அதில் எழுதும் குறிப்புகளும் நினைவுக்கு வரும். இந்த சேவையில் இப்படி தேதியிட்ட குறிப்புகளை எல்லாம் எழத வேண்டாம். அதற்கு மாறாக, உங்கள் மன உணர்வுகளை சிறு குறிப்புகளாக பதிவு செய்யலாம். இதை தான், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் பதிவு செய்யுங்கள் என இந்த தளம் வர்ணிக்கிறது.

இந்த பதிவை மிக எளிமையாகவே செய்யலாம். இதற்கான வழி சுவாரஸ்யமாகவே இருக்கிறது. இதற்கு முதலில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, தினந்தோறும் உங்கள் மனநிலையை இதில் பதிவு செய்யலாம். அதன் பிறகு புதிய டிப்பை உருவாக்கலாம். அதாவது உங்களுக்கான பதிவை உருவாக்கலாம். பதிவை உருவாக்கும் போது, உங்கள் மனநிலையை பிரதிபலிப்பதற்கான ஸ்மைலி பட்டியல் தோன்றுகிறது. அவற்றில் இருந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் அல்லது கோபமாக இருக்கிறேன் எனும் உணர்வை தேர்வு செய்துவிட்டு, அன்றைய தின மனநிலையை வார்த்தைகளாக பதிவு செய்யலாம்.

அதன் பிறகு, உங்     கள் மனநிலைக்கு பொருத்தமான வார்த்தைகளை குறிச்சொற்களாக (டேக்) சேர்க்கலாம். தேவை எனில் இதனுடன் ஒரு ஒளிப்படத்தையும் இணைக்கலாம். அவ்வளவு தான் பதிவை வெளியிட்டுவிடலாம். இந்த பதிவை குறித்து வைத்துக்கொள்ளலாம். இல்லை எனில் பிறகு நீக்கிவிடலாம்.

அவ்வளவு தான் இந்த சேவை. ஒவ்வொரு நாளும் எப்படி உணர்கிறீர்கள் என்பதை சில வார்த்தைகளில் இந்த தளத்தின் வாயிலாக பதிவு செய்து வரலாம். பதிவுகள் அனைத்தையும் மைடிப்ஸ் பகுதியை காணலாம்.

day2இந்த தளத்தில் நண்பர்கள் பட்டியல், விருப்பங்கள், பகிர்வுகள் எதுவும் கிடையாது. மனதில் உள்ள எண்ணங்களை இதன் வாயிலாக முகம் தெரியாத இணைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அன்றைய தினம் எப்படி கழிந்தது என்பதை இப்படி சிறு குறிப்பாக பதிவு செய்யலாம்.

இந்த தளம் அறிமுக நிலையில் தான் இருக்கிறது. இதன் பின்னே பெரியதொரு இணைய சமூகம் உருவாகுமா என்றும் தெரியவில்லை. ஆனால் இதன் ஆதார சேவை ஈர்ப்புடையதாக இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், இணையத்தில் ஒரு காலத்தில் பெரிதாக பேசப்பட்ட லைப்லாகிங் சேவையின் கீழ் இந்த தளம் வருவதை புரிந்து கொள்ளலாம். சாதனைகள், மைல்கற்கள் என்றெல்லாம் பார்க்காமல், சாமானியர்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளை, சம்பவங்களை இணையத்தில் பதிவு செய்வதை தான், லைப்லாகிங் என்று சொல்கின்றனர். லைப்லாக் என்றால், ஒரு மனிதன் வாழ்க்கையின் காலவரிசை அடிப்படையிலான விரிவான பதிவு என்கிறது விக்கிபீடியா அறிமுகம். இதில் தரவுகளும் அதிகம். இப்படி வாழ்க்கை பதிவு செய்பவர்கள் லைப்லாகர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

உடலிலேயே அணியக்கூடிய அணிகணிணி சாதனங்கள் அல்லது மொபைல் போன் மூலம் திரட்டப்படும் தரவுகளையும், தகவல்களையும் பதிவு செய்து கொள்வதும் இதன் கீழ் வருகிறது. அணிகணிணிகள் சார்ந்த சாதனங்கள் நடைமுறை வாழ்க்கையில் பெரிய அளவில் ஊடுருவாததால் இந்த வகை பதிவுகளும் வெகுஜனமயமாகவில்லை. இதனிடையே சமூக ஊடக தளங்கள் பிரபலமானதால் பெரும்பாலான இணையவாசிகள் நிலைத்தகவல்களின் பக்கம் சாய்ந்துவிட்டனர்.

ஆனால் தற்போது பேஸ்புக் பயன்பாடு ஒரு மோகமாக மாறியிருப்பதாக பலரும் கருதும் நிலையில், மாற்று சேவைகளுக்கான தேவை எழுந்திருக்கிறது. இந்த வகையான தளங்களின் மிக எளிய வடிவமாக டேடிப் தளம் தோன்றுகிறது. வைரல் புகழ், லைக்குகளின் எண்ணிக்கை போன்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லாமல், இதில் டைரி குறிப்பு எழுதுவது போல, ஒவ்வொரு நாளும் உணரும் மனநிலையை பதிவு செய்து வரலாம். அல்லது எப்போது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்னம் ஏற்படுகிறதோ அப்போது பதிவிடலாம்.

ஏறக்குறைய இதே போன்ற வசதியை ரைட்.அஸ் (https://write.as/) தளமும் வழங்குகிறது. இந்த தளத்தை எளிமையான பதிப்பு சாதனமாகவும் கருதலாம். மனதில் உள்ள எண்ணங்களை பதிவுகளாக உருவாக்கி இதில் வெளியிடலாம். துணை வசதிகள் எதுவும் இல்லாத மிக எளிமையான வலைப்பதிவு சேவையாக இது அமைகிறது. கவனச்சிதறல்கள் இல்லாமல் இதில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

தகவல் புதிது: ஜிப்களில் புத்துயிர் பெறும் சரித்திர சின்னங்கள்!

architecture-101இணையத்தில் நீங்கள் பலவிதமான ஜிப்களை பார்த்து ரசித்திருக்கலாம். ஜிப்கள் பெரும்பாலும் நகைச்சுவை பாணியிலேயே அமைந்திருக்கின்றன என்றாலும், அர்த்தமுள்ள ஜிப்களும் அநேகம் உண்டு. அந்த வகையில் சரித்திர நினைவுச்சின்னங்களை நவீன அனிமேஷன் வடிவமாக தோன்றும் புதுமையான ஜிப்களை எக்ஸ்பீடியா நிறுவனம் நியோநாம் மற்றும் திஸ் ஈஸ் ரெண்டர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. எகிப்தின் லக்சர் ஆலயம், ஏதென்ஸ் நகரத்தில் இருந்த் பார்த்தெனான் நினைவுச்சின்னம் உள்ளிட்ட பழங்கால நினைவுச்சின்னங்களை இப்படி அழகிய ஜிப் வடிவமாக உருவாக்கியுள்ளனர். கலைப்பொக்கிஷங்களாக திகழ்ந்த இந்த சரித்திர சின்னங்கள் இப்போது அவற்றின் முழு வடிவில் இல்லை என்றாலும், அவற்றின் மூல வடிவம் எத்தனை மகத்தானதாக இருக்கும் என்பதை இந்த ஜிப்களில் பார்க்கலாம். சிதலங்களில் இருந்து முழுவடிவிலான கட்டிடங்கள் ஜிப்களில் தோன்றுவது வியக்க வைக்கும் அனுபவமாக இருக்கிறது.

மேலும் தகவல்களுக்கு: https://mymodernmet.com/10-types-of-architecture/

செயலி புதிது; ஸ்மார்ட்போன் மோகத்தில் இருந்து விடுபட உதவும் செயலி

138_3981526879534ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இருக்கும் கவனச்சிதற்ல்களை குறைக்க உதவும் வகையில் சியம்போ எனும் புதிய செயலி அறிமுகம் ஆகியுள்ளது. போனுக்கான லாஞ்சர் போல செயல்படும் இந்த செயலி, பயனாளிகளுக்கு கூடுதல் கட்டுப்பாட்டை அளிக்கிறது. வழக்கமான வண்ணமயமான திரைக்கு பதிலாக இந்த லாஞ்சர் கருப்பு வெள்ளை திரையை அளிக்கிறது. பளிச் ஐகான்களையும் இதில் பார்க்க முடியாது. ஏதேனும் சேவை தேவை எனில் தேடி கண்டுபிடிக்க வேண்டும். கவனச்சிதறல்களை குறைக்கும் நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சேவைகளில் இருந்து வரும் அறிவிக்கைகளையும், எப்போது பெற வேண்டும் என இதில் கட்டுப்பாடு வைத்துக்கொள்ளலாம். ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் குறிப்பிட்ட வகை சேவைகளை அடிக்கடி பார்த்துக்கொண்டிருக்க தூண்டுகோளாக அமையும் உளவியலுக்கு நேர் எதிரான வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான வடிவில் அறிமுகம் ஆகியுள்ளது.

மேலும் தகவல்களுக்கு: http://www.getsiempo.com/

வீடியோ புதிது: அந்த கால நியூயார்க்

நகரங்களின் பழைய ஒளிப்படங்களை பார்த்து ரசிப்பது சுவாரஸ்யமான அனுபவம் தான். இந்த படங்களின் மூலம், அந்த காலத்தில் நகரத்தின் தோற்றத்தை தெரிந்து கொள்ள முடிவதோடு, கால வெள்ளத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் தெளிவாகவே உணரலாம். இந்த காட்சிகளை காணொலி வடிவில் பார்க்க முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா? அமெரிக்காவின் நியூயார்க் நகரைப்பொருத்தவரை இந்த அனுபவத்தை பெறலாம். ஒரு நூற்றாண்டுக்கு முன் நியூயார்க் நகரம் எப்படி இருந்தது என்பதை உணர்த்தும் காணொலி காட்சிகளை அமெரிக்க லைப்ரரி ஆப் காங்கிரஸ், யூடியூப்பில் பதிவேற்றியுள்ளது. நியூயார்க் அகரில் முதல் முறையாக நடைபெற்ற கார்கள் அணிவகுப்பு உள்ளிட்ட அரிய வீடியோக்களை இந்த வரிசையில் காணலாம்.

யூடியூப் இணைப்பு; https://youtu.be/qYMFJTkjV74?list=PL0595658F188F6763

——-

நன்றி; தமிழ் இந்து இணைப்பிதழில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.