இணைய யுகத்தில் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களை நினைவில் நிறுத்திக்கொள்ளவும், அவர்கள் வாழ்க்கையை, செய்தியை எடுத்துச்சொல்லவும் இணையதளங்கள் அமைப்பது சிறந்த வழி. நன்கு வடிவமைக்கப்பட்ட, நேர்த்தியான இணையதளங்களின் வாயிலாக, காந்தியின் வாழ்க்கையையும், அவரது கொள்கைகளையும் எளிதாக வழங்கலாம்.
ஆனால், மகாத்மா நினைவைjf போற்றும் நேர்த்தியான இணையதளத்தை உருவாக்குவது போலவே, அந்தlf தளத்தை சீரான முறையில் பராமரிப்பதும் முக்கியம். மாறாக, இணையதளத்தை புதுப்பிக்காமல் கைவிடுவது என்பது மகாத்மாவை மறப்பதற்கு சமமானது.
மகாத்மாவின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட இணையதளத்தை (https://gandhi.gov.in/), அவரது பிறந்த தினத்தையொட்டி அணுகினால், ஏமாற்றம் மிஞ்சுவதோடு, இணைய பராமரிப்பை நம்முடைய அரசும் நாமும் அணுகும் விதம் தொடர்பான கேள்விகளும் எழுகின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு, மகாத்மாவின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தேசிய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட இந்தத் தளம், உள்ளடக்கத்திலும் சரி, தோற்றத்திலும் சரி நேர்த்தியாகவே இருக்கிறது.
மகாத்மாவின் 150-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களுக்கு நடுவே, அவரது வாழ்க்கை பற்றியும், இன்னும் பிற சிறப்புகள் பற்றியும் அறியும் வகையில் இந்தத் தளம் அமைந்துள்ளது. கொண்டாட்டம் தொடர்பான பிரதமரின் செய்தி, நாடு முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மகாத்மா தொடர்புடைய இடங்களை வரைபடத்தில் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. காந்தியின் அகிம்சை கொள்கை, அவரது அடிச்சுவடுகள், மகாத்மாவால் ஊக்கம் பெற்ற தலைவர்கள் உள்ளிட்ட தகவல்களும் கவர்கின்றன. மகாத்மா படைப்புகளுக்கான காந்தி களஞ்சியம் பகுதி சிறப்பாக உள்ளது.
ஆனால், 150-வது கொண்டாட்டம் முடிவுற்று ஓராண்டு ஆன நிலையில், இந்தத் தளத்துக்கு விஜயம் செய்தால், இதில் உள்ள எந்த உள்ளடக்கமும் புதுப்பிக்கப்படாமல் இருப்பது முகத்தில் அறைகிறது. முகப்புப் பக்கத்தில் தோன்றும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தைக் குறிக்கும் அக்டோபர் 2 எனும் வாசகம், இது பழைய தளம் எனும் செய்தியை உணர்த்துகிறது.
150-வது பிறந்த தினத்துக்காக அமைக்கப்பட்ட இணையதளம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அதன்பிறகு எவ்விதத்திலும் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் உணர்வை தவிர்க்க முடியவில்லை. முகப்புப் பக்கத்தில், மகாத்மா பற்றி எந்தத் தகவலும் புதுப்பிக்கப்படவில்லை.
தேசப்பிதாவுக்காக அமைக்கப்பட்ட இணையதளம் இப்படி பராமரிப்பின்றி இருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது. 150-வது கொண்டாட்டத்துக்காக அமைக்கப்பட்ட இணையதளம், அது அமைக்கப்பட்ட விதத்திலேயே இருப்பது இயல்பு என விட்டுவிட வேண்டுமா?
மிக எளிதாக, மகாத்மாவின் பிறந்த நாள் செய்தி தகவல் அல்லது செய்தியை முகப்புப் பக்கத்தில் வெளியிட்டு, ஏற்கெனவே அமைக்கப்பட்ட தளத்தின் உள்ளடக்கத்தை ஆவணக் காப்பகமாக அணுகும் வகையில் அமைத்திருந்தால்கூட போதுமானது. ஆனால், தளம் பழைய வடிவில் அப்படியே உரைந்து கிடக்கிறது.
இதைவிட மோசம் என்னவெனில், இந்தத் தளத்துடன் உருவாக்கப்பட்ட டிவிட்டர் பக்கம், https://twitter.com/Mahatma150 ஓராண்டுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் இருப்பதுதான். பேஸ்புக் பக்கமும் இவ்விதமே இருக்கிறது: https://www.facebook.com/Mahatma150/
காந்தியின் பிறந்த நாள் செய்திகள், மேற்கோள்கள், நினைவு புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களுடன் இந்தத் தளத்தை துடிப்புடன் வைத்திருக்கலாம். பேஸ்புக் அல்லது டிவிட்டரில் வெளியாகும் மகாத்மா தொடர்பான நினைவலைகளின் ஜீவன்கூட இல்லாமல், மகாத்மா 150-வது பிறந்த நாள் கொண்டாட்ட தளம் காட்சி அளிப்பதை என்னவென சொல்வது?
ஹேராம்!
—