பயனுள்ள இணையதளங்கள் பட்டியலில் வருகிறது, ஃபோர்வோ (https://forvo.com/). இந்த தளம் உச்சரிப்பு அகராதி. பிற மொழி சொற்களை சரியாக உச்சரிப்பது எப்படி என்பதை இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இப்படி ஒரு சில மொழிகள் மட்டும் அல்ல, மொத்தம் 400 க்கும் மேற்பட்ட மொழிகளில் சொற்களின் உச்சரிப்பை ஒலி வடிவில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இதன் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில், உச்சரிப்பை அறிய விரும்பும் சொல்லை டைப் செய்தால், அதன் ஒலி வடிவை கேட்கலாம். எந்த மொழியில் உச்சரிப்பு தேவை என்பதையும் தேர்வு செய்யலாம். மொழி பெயர்ப்புக்கான வசதியும் இருக்கிறது, குறிப்பிட்ட சொல் வழக்கையும் தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட மொழியில் உச்சரிப்பு தேவை எனில் அதற்கான வேண்டுகோளையும் சமர்பிக்கலாம்.
தொடர்புடைய சொற்கள் மற்றும் சொற்றொடர்களும் முன்னிறுத்தப்படுகின்றன. பெயர் சொல், அடைமொழி, வினைச்சொல், மருத்துவ சொல், சொற்றொடர் என பல வகைகளில் சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த தளத்தின் இன்னொரு சிறப்பு இதன் உச்சரிப்பு இயந்திரத்தனமானது இல்லை: உயிர் துடிப்பானது. ஏனெனில் அந்த அந்த மொழி பேசுபவர்கள் உச்சரிப்பை இந்த தளம் வழங்குவது தான். அந்த வகையில் இந்த தளத்தை உச்சரிப்பின் ஒலி வடிவங்களுக்கான விக்கிபீடியா என வர்ணிக்கலாம். பயனாளிகள் இந்த தளத்தில் உறுப்பினராகி தங்கள் மொழி சொற்களின் உச்சரிப்பை பதிவு செய்யலாம்.
இந்த தளத்திற்கு என நூற்றுக்கணக்கான எடிட்டர்களும், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும் இருக்கின்றனர்.
முன்னணி மொழிகள், அதிக உச்சரிப்பு கொண்ட மொழிகள் போன்றவையும் தளத்தின் முன்னிறுத்தப்படுகின்றன. உச்சரிப்பை அறிய மட்டும் அல்லாமல், பிற மொழி கற்றுக்கொள்பவர்களுக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
இதில் பத்தாயிரத்திற்கும் மேலான உச்சரிப்புகள் கொண்ட மொழிகள் பட்டியலில் தமிழும் உள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேலான சொற்களை கொண்ட மொழிகளும் அநேகம் உள்ளன.
பல்வேறு மொழிகளுக்கான பயண வழிகாட்டிகளும் உள்ளன.
இன்று உச்சரிப்பு ஒலி அகராதியாக விளங்கும் இந்த தளம் துவங்கப்பட்ட விதம் சுவாரஸ்யமானது. பிளிக்கர் ( ) மற்றும் கூகுள் ( ) போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரபலமாக விளங்கிய நிலையிலும், அவற்றின் பெயரை சரியாக உச்சரிப்பதில் பலருக்கும் பிரச்சனை இருந்த நிலையில், இதற்கு வழிகாட்டும் வகையில் 2008 ம் ஆண்டில் இந்த தளம் உருவாக்கப்பட்டது.
2013 ல் டைம் பத்திரிகையின் ஆண்டின் சிறந்த 50 தளங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் ஐபோன் செயலியும் இருக்கிறது.
வீடியோ பதிவு: https://www.youtube.com/watch?v=OCGOOXaS-t8