சக் நோரிஸ் 86 வயதில் அண்மையில் மறைந்தார். கட்டுறுதியான உடல், துணிவு ஆகியவற்றுக்காக அறியப்பட்ட அதிரடி நாயகர்களில் ஒருவர். முன்னணி நாயகர் இல்லை என்றாலும், ஸ்வாஸ்நேகர், ஸ்டாலோன், வாண்டேம் ஆகியோருக்கு அடுத்த நிலையில் தனக்கென தனி இடம் பிடித்திருந்த நடிகர்.
சினிமாவில், ஆஹா ஒஹோ என கொண்டாடக்கூடியவர் இல்லை என்றாலும், – இப்படி சொல்வதற்கு காரணம் இணைய உலகில் இவருக்கு இருந்த செல்வாக்கு வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்பதை உணர்த்த தான். இவர் இணைய உலகின் சூப்பர் ஸ்டார்.
உண்மையில் மீம்களின் நட்சத்திரம். – மீம்களில் மிகையாக தோன்றச்செய்து கொண்டாடப்பட்ட நடிகர்.
–
ஆம், இணைய உலகில் சக் நோரிஸ் மீம்கள் வெகு பிரபலம். – எல்லாமே சக் நோரிஸ் உண்மைகள் அல்லது தகவல்கள் சார்ந்தவை. இவை கேலியும், நகைச்சுவையும் கலந்தவை என்றாலும், சக் நோரிஸ் மீதான மிகை பிம்பத்தை உண்டாக்கியவை. அந்த பிம்பத்தை அப்படியே கட்டிக்காத்தவை.
சாம்பிளுக்கு சில மீம்கள் பார்க்கலாமா?
சக் நோரிசின் கண்ணீர் புற்றுநோயை குணமாக்கும் சக்தி கொண்டது தெரியுமா? ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவர் அழ மாட்டார்.
–
இன்னொரு மீம்-
கோவிட் போது வைரஸ் நாரிசை பாதித்தது, அவர் அதை சிறைப்பிடித்தார்.
–
சக் நாரிஸ் புஷ் அப் பயிற்சி செய்யும் போது, அவர் மேலே எழுவதில்லை, பூமியை உள்ளேத் தள்ளி விடுகிறார்.
–
சக் நோரிஸ் ஒரு கோப்பை ஆணிகளை அருந்துவார்.
இப்படி அடுக்கி கொண்டே போகலாம். சொல்லப்போனால் இணையத்தில் சக் நோரிஸ் மீம்களை தொகுக்கவே சக் நோரிஸ் பேக்ட்ஸ் எனும் இணையதளம் இருக்கிறது.
–
2005 ல் இருந்து சக் நோரிஸ் தொடர்பான மீம்கள் உலா வருகின்றன. தொடர்ந்து அவை புதுப்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தலைமுறைக்கும் சக் நோரிஸ் மீம்கள் பிடித்தமானதாக இருக்கின்றன.
இந்த மீம்கள் எல்லாமே அவரை மிகையாக புகழ்ந்து தள்ளுபவை. கேலி கலந்திருந்தாலும் புன்னகைக்க வைப்பவை. படித்தவுடன் நம் பங்கிற்கு ஒரு நோரிஸ் மீமை உருவாக்க வைப்பவை.
–
டைட்டானின் நாயகன் தோன்றும் மீம்கள் இருக்கின்றன. நம்மூரில், வடிவேலு மீம்கள் வெகு பிரபலம்.
ஆனால் யாரும் நோரிஸ் மீம்கள் உயரத்தை எட்டவில்லை. அதோடு மீம்களின் எழுச்சிக்கான முக்கிய உதாரணமாகவும், உந்துசக்தியாகவும் இருக்கிறார்.
மீம்களை ஆராயும் போது நோரிஸ் மீம்களுக்கு தனி இடம் கொடுத்தாக வேண்டும்.
ஏன்? எப்படி இந்த செல்வாக்கு?
இதற்கு பதில் காணும் முன், நோரிஸ் மீம்கள் உருவானவிதம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதன் பின்னே சுவாரஸ்யமான கதை உள்ளது.
இயான் ஸ்பெக்டர் எனும், இளைஞர் தான் நோரிஸ் மீமை உருவாக்கியவர். 2005 ம் ஆண்டு ஆப்புல் எனும் இணைய விவாத தளத்தில், வின் டீசல் எனும் நடிகர் தொடர்பான மிகை அம்சங்கள் பதிவை பார்த்தார். அதன் தாக்கத்தால், சக் நோரிஸ் கொண்ட மிகை தகவல்கள் பக்கத்தை உருவாக்கினார்.
சக் நோரிஸ் பேக்ட்ஸ் எனும் அந்த பக்கம் மெல்ல பிரபலமாகி மீம் வடிவமும் எடுத்து. அடுத்து வந்த ஆண்டுகளில் இந்த மீம் தன்னளவில் தனி உலகமாக உருவாகி, இணையத்தில் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமையை சக் நோரிசுக்கு பெற்றுத்தந்தது.
அவர் இணைய நிகழ்வாக உருவானார். இணையத்தில் ரசிகர்கள் உருவாக்கிய சூப்பர் ஸ்டாராகவும் நிலைப்பெற்றார்.