Tag Archives: click

குழப்பும் இணையதளங்கள்.

aifft

இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பல்வேறு இணையதளங்களை அறிமுகம் செய்து வருகிறேன்.ஒரு இணையதளம் பற்றி எழுத தீர்மானிப்பதற்கு முன் அதற்காக பல்வேறு இணையதளங்களை பார்த்து பரிசிலிக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு சுவையான அனுபவம் என்றாலும் நேரத்தையும் உழைப்பயைம் கோருவது.

சில இணையதளங்கள் முதல் பார்வைக்கே கவனத்தை ஈர்க்கும். சில தளங்கள் சிறப்பாக இருக்கும். ஆனால் ந‌ம்மவர்களுக்கு ஏற்றதாக இருக்காது.ஒரு சில தளங்கள் அவற்றில் உறுப்பினராக பயன்படுத்தி பார்க்க வேண்டியிருக்கும். சில தளங்களை முழுவதும் அலசிப்பார்த்த பிறகே அதன் பயன் புரியும். ஒரு சில தளங்கள் அருமையாக இருந்தாலும் அவை பற்றி உடனே எழுத முடியாது.அவற்றை மனதுக்குள் ஊறப்போட்டு நேரம் அவ்ரும் போது எழுத வேண்டும்.

இது பொதுவாக வலைப்பதிவிற்காக நான் (மகிழ்ச்சியோடு) எழுத எடுத்துக்கொள்ளும் முறை.

சில நேரங்களில் பல இணையதளங்களை பார்வையிட்டும் சரியான தளத்தை தேர்வு செய்ய முடியாமல் அயற்சி ஏற்ப‌டும்.

இவ‌ற்றின் நடுவே சில தளங்கள் ,அவற்றின் பயன்பாடு புரியாமல் குழ‌ப்பத்தை எற்படுத்தும் .வழக்கமாக ஒதுக்கி தள்ளிவிடும் இத்தகைய தள‌ங்களில் ஒன்றை இன்று ஒரு மாற்றத்திற்காக பதிவிடுகிறேன்.

இஃப்ட் என்னும் இந்த தளம்,( https://ifttt.com/) இணையத்தை உங்களுக்காக பணியாற்ற வைப்பதாக கூறினாலும் அதன் பயன்பாடு தன்மை புரியாமலே இருக்கிறது.

புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்ற!.

முன் எப்போழுதையும் விட நம் வாழ்க்கையில் புகைப்படங்கள் அதிகரிக்கத்துவங்கியுள்ளன.செல்லிலும் காமிராவிலும் எடுத்த படங்கள் நம்மிடம் குவிந்து கிடக்கின்றன.அதே போல புகைப்படங்களை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளன.முன்பெல்லாம் யாரவது புதியவ்ர்கள் வீட்டிற்கு வந்தால் தான் புகைப்பட ஆல்பத்தை எடுத்து காட்ட முற்படுவோம்.

இப்போது அப்படியில்லை,புகைப்படம் எடுத்த உடனே அத்னை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.பிலிக்கரில் வெளியிடலாம்.டிவிட்டரிலும் பகிரலாம்.

ஆனால் வெறும் புகைப்படங்களை மட்டுமே பார்ப்பது சமயங்களில் அலுப்பூட்டலாம்.

இதுவே புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்?பிகோவிகோ தளம் இந்த மாயத்தை தான் நிகழ்த்தி காட்டுகிறது.

வீடியோ தொகுப்பு என்றால் டிவி நிகழ்ச்சிகளின் போது முக்கிய சம்பவங்களில் புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பொருத்தமான பின்னணி இசையோடு ஒரு தொடர் சித்திரம் போல தோன்றும் அல்லவா அதே போலவே நம வாழ்கை சார்ந்த புகைப்படங்களையும் இந்த தளம் வீடியோ தொகுப்பாக மாற்றித்தருகிறது.

இதற்காக பேஸ்புக் அல்லது பிலிக்கரில் உள்ள நமது புகைப்படங்களை இந்த தளத்தில் பதிவேற்றினால் போதும் அவற்றை வீடியோ தொகுப்பாக மாற்றை விடுகிறது.அதற்கு பொருத்தமான பின்னணி இசை சேர்ப்பதோடு நமது வாசகங்களை வர்ணனையாகவும் சேர்த்து மேலும் சுவை கூட்டலாம்.

இந்த வீடியோ தொகுப்பை பேஸ்புக் ,டிவிட்டர் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

http://www.picovico.com/

ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சுவையான தேடல் உத்தியை கொண்டிருந்தாலே போதுமானது என்று சொல்லலாம்.நிச்சயம் ‘வோர்டு ஆன் த வெயர்’தேடியந்திரம் இத்தகைய சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.

ஒரே கிளிக்கில் இணையத்தின் பல இடங்களில் இருந்து தகவல்களை தேடி ஒரே இடத்தில் தருவதாக கூறும் இந்த தேடியந்திரம் அதனை அழகாக செய்கிறது.

அதாவது இதில் எந்த பதத்தை தேடினாலும் அந்த பதம் தொடர்பான முடிவுகளை நான்கு பத்திகளாக பிரித்து தருகிறது.முதல் பத்தியில் பொதுவான இணைய முடிவுகள் இடம் பெறுகின்றன.அதன் பக்கத்தில் அந்த பதத்திற்கான யூடியூப் வீடியோக்களும் டிவிட்டர் குறும்பதிவுகளும் ,கடைசி பத்தியில் புகைப்படங்களும் இடம் பெறுகின்ற‌ன.

ஆக ஒரே கிளிக்கில் தேடும் பதம் அதாவது குறிச்சொல் தொடர்பான இனைய முடிவுகள்,வீடியோக்கள்,புகைப்படங்கள்,மற்றும் குறும்பதிவுகளை பார்த்து விடலாம்.எல்லாமே அடுக்கப்பட்டது போல பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு எளிதாக கிரகித்து கொள்ளும் வகையில் இருப்பது நல்ல விஷயம்.

புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் தனித்தனியே தேடிக்கொண்டிருக்காமல் ஒரே கிளிக்கில் தேட முடிவது தான் இந்த தேடியந்திரத்தின் சிறப்பாக உள்ளது.

எப்போதெல்லாம் இதே போல குறும்பதிவு,வீடியோ,புகைப்படம் என எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது இந்த தேடியந்திரம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த தேடியந்திரம் கொஞ்சம் சுவாரஸ்யமானது தான்.கூகுல் தேட்ல முடிவுகளை பயன்படுத்தி கொள்ளும் தேடியந்திரங்கள் போல இந்த தேடியந்திரம் பிங் தேடல் முடிவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படுகிற‌து.

தேடியந்திர முகவ‌ரி;http://www.wordonthewire.com/

புக்மார்க் சேவையில் புதிய அவதாரம்.


உங்கள் வாழ்கையையே மாற்றி காட்டுகிறோம் வாருங்கள் என அழைக்கிறது கிலிபிக்ஸ் இணையதள‌ம்.வாழ்கை என்று கிலிபிக்ஸ் குறிப்பிடுவது இணைய வாழ்கையை!

அதாவது இணைய பயணத்தில் எதிர்கொள்ளும் விஷயங்களை பின்னர் எளிதாக தேடி கண்டுபிடிக்கும் வகையில் ஒரே இடத்தில் தொகுத்து வைத்து கொள்ள உதவுகிறது கிலிபிக்ஸ்.

ஒரு விதத்தில் பார்த்தால் கிலிபிக்ஸ் புக்மார்கிங் சேவை தான்.ஆனால் அதனை மிகவும் மேம்பட்ட முறையில் வழங்குகிறது.

புக்மார்கிங் என்பது என்ன?இணையத்தில் உலாவி கொண்டிருக்கும் போது நல்ல கட்டுரையையோ அல்லது சுவையான விஷயத்தையோ பார்க்கும் போது அப்போது அதில் கவனம் செலுத்த முடியாவிட்டால் பின்னர் வந்து பார்த்து கொள்ளலாம் என்று குறித்து வைத்து கொள்ளும் வசதி தானே!.

இத்தகைய புக்மார்கிங் சேவைகளில் பலவிதங்கள் இருக்கின்றன.அவற்றில் புதுவிதமானதாக கிலிபிக்ஸ் அறிமுகமாகியிருக்கிறது.

கிலிபிக்சை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.டிவிட்டர் அல்லது பேஸ்புக் கணக்கு மூலமே இதில் உறுப்பினராகி விடலாம்.ஜிமெயில் கணக்கு மூலமும் உள்ளே நுழையலாம்.அதன் பிறகு இணையத்தில் எந்த இடத்திலும் கிலிப் செய்யலாம்.அதாவது அந்த பக்கத்தை குறித்து வைத்து கொள்ளலாம்.

இதற்காக கிலிப் பட்டனை பிரவுசரின் புக்மார்க் பகுதியில் இணைத்து விட்டால் போதுமானது.எந்த இணையபக்கத்தை குறித்து வைத்து கொள்ள விரும்புகிறோமோ அந்த பக்கத்தில் இருந்து கிலிப் ப‌ட்டனை கிளிக் செய்தால் அந்த பக்கம் புக்மார்க் செய்யப்பட்டு விடும்.

இது வழக்கமாக எல்லா புக்மார்கிங் சேவையும் செய்வது தான்.ஆனால் கிலிபிக்சில் இதன் பிறகு தான் சுவாரஸ்யமே இருக்கிற‌து.

புக்மார்க் செய்தவற்றை எல்லாம் அழகாக அடுக்கி வைக்க முடியும் என்பது தான் அது.

நல்ல கட்டுரை,சுவாரஸ்யமான யூடியூப் வீடியோ,வாங்க‌ நினைக்கும் புத்தகம்,ஆன்லைன் ஷாப்பிங்கில் பார்த்து ரசித்த ஆடை என எதை வேண்டுமானாலும் புக்மார்க் செய்து கொள்வதோடு ஒவ்வொன்றையும் அதற்குறிய தலைப்பின் கீழ் வகைப்படுத்தி வைக்க முடியும்.

அதாவது நல்ல கட்டுரைகளையும் செய்திகளையும் அதற்கான தலைப்பின் கீழ் போட்டு வைக்கலாம்.அதே போல புத்தகங்களுக்கு ஒரு பெட்டி வீடியோக்களுக்கு ஒரு பெட்டி என உருவாக்கி கொள்ளலாம்.அவரவர் தெவைக்கேற்ப எத்தனை பெட்டிகள் வேண்டுமானாலும் உருவாக்கி புக்மார்க் செய்தவற்றை வகைப்படுத்தி கொள்ளலாம்.

இப்படி எல்லாமே ஒழுங்காக வகைப்படுத்தப்படுவதை தான் கிலிபிக்ஸ் இணைய வாழ்கையை ஒருங்கிணைக்க உதவுவதாக கிலிபிக்ஸ் சொல்கிற‌து.

புக்மார்க் இணைப்புகளை பெட்டிபெட்டியாக சேமித்து வைப்பதை பார்க்கும் போது இணையத்த்தில் பார்த்து ரசிப்பவற்றை இணைய பலகையில் அவற்றை புகைப்படங்களாக குத்தி வைத்து கொள்ள வழி செய்யும் பின்ட்ரெஸ்ட் சேவை நினைவுக்கு வரலாம் என்றாலும் இது பின்ட்ரெஸ்ட் போன்றது அல்ல!.

புக்மார்க் செய்தவற்றை அழகாக வகைப்படுத்தி கொள்ள உதவுவதோடு அவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் இந்த சேவை கைகொடுக்கிறது.இதற்காக சின்போர்டு என்னும் வசதி உள்ளது.இதில் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டால் நண்பர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் பார்க்கலாம்.

புக்மார்கிங் சேவையில் புதிய அவதாரமான கிலிபிக்சை ப‌யன்படுத்தி பாருங்கள்!

இணையதள முகவரி;http://www.clipix.com/

இது இசை விளையாட்டு இணையதளம்.

மேற்கத்திய இசையில் உங்களுக்கு அறிமுகமும் ஆர்வமும் இல்லை என்றால் இந்த பதிவை படிக்காதீர்கள்.காரணம் இந்த பதிவுக்கான இணையதளம் உங்களுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றால் ராக் இசை பாடல்கலையும் பாப் இசை பாடல்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் அட நம்மூர் பாடல்களுக்கும் இதே போன்ற இணையதளம் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தளம் என்பதால் இந்த பதிவை மேலே படியுங்கள்.ஆனால் ஒன்று இந்த தளம் நிச்சயம் சுவாரஸ்யமானது.

கெஸ் யுவர் சாங் என்னும் இந்த தளம் ஒரு இசை விளையாட்டு இணையதளம்.

விநாடி வினா போன்ற நிகழ்ச்சிகளிலும் இன்னும் பிற டிவி கேம் ஷோக்களிலும் ஏதாவது ஒரு பாடலின் வீடியோ அல்லது ஆடியோவை போட்டு காட்டிவிட்டு அதல் வரும் பாடலை கண்டுபிடிக்க சொல்வது உண்டல்லவா?அதே போல இந்த தளமும் இசை கோப்புகளை கேட்டு அதில் வரும் பாடல்களை கண்டு பிடிக்க சொல்கிறது.

இதை ஒரு விளையாட்டாகவே விளையாடலாம்.

இந்த இசை விளையாட்டை ஆடத்துவங்க முதலில் உங்களுக்கு பிடித்தமான அல்லது மிகவும் பரிட்சயமான இசை வகையை(ராக்,பாப்,ஆர் அன்டு பி,நாட்டுபாடல்) தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு என் பாடலை ஒலிக்க செய்யவும் என்னும் இடத்தில் கிளிக் செய்தால் அந்த பாடலின் ஒரு துண்டு இசைக்கப்படுகிறது.ஒலிக்கும் பாடலை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் ஊகிக்க தயார் என்னும் பகுதியை கிளிக் செய்து பதில அளிக்கலாம்.

பாடலுக்கான மூன்று பதில்களும் முன்வைக்கப்படுவதால் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.உங்கள் தேர்வு சரி என்றால் அடுத்த பாடலை கேட்டு யூகிக்க முன்னேறலாம்.தவறு என்றாலும் கவலைப்படாமல் அடுத்த பாடலை கேட்கலாம்.இப்படியாக அலுக்கும் வரை பாடலை கேட்டு எந்த பாடல் என கண்டு பிடித்து கொண்டே இருக்கலாம்.

ஆனால் ஒன்று இந்த விளையாட்டு அலுத்து போகவே வாய்ப்பில்லை.காரணம் யூகிக்க முயலும் பாடலை சரியாக சொன்னால் அதை முழுவதும் கேட்டு ரசிக்கலாம்.அந்த பாடல் பிடித்திருந்தால் அப்படியே ஐடியூன்ஸ் மூலம் வாங்கி கொள்ளலாம்.

அதோடு ஒவ்வொரு கட்டமாக முன்னேற புதிய பாடல்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.கூடவே நமது இசை பரிட்சயம் குறித்தும் சந்தோஷப்பட்டு கொள்ளலாம்.எப்போது வேண்டுமானாலும் இசை வகையை மாற்றியும் விளையாடலாம்.

பேஸ்புக் வழியேவும் இந்த விளையாட்டை விளையாடலாம்.விநாடி வினா பாணியிலும் விளையாடலாம்.விநாடி வினா சுற்று முடிந்ததும் பேஸ்புக் நண்பர்களோடு சவாலிலும் ஈடுபடலாம்.அப்படியே பேஸ்புக் நண்பர்களை சவாலுக்கு அழைத்து அவர்களோடு பாடல்களை யூகிக்கும் விளையாட்டில் ஈடுபடலாம்.

நண்பர்களும் இந்த தளத்தில் உறுப்பினராக இருந்தால் அவர்கள் கேட்ட பாடல்கள் யூகித்த பாடல்களின் பட்டியலையும் பார்க்கலாம்.கேடு ரசிக்கலாம்.இதன் மூலம் மேலும் புதிய பாடல்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

வினாடி வினா நிகழ்ச்சிகளில் பரிசளிக்கப்படுவது போல இந்த விளையாட்டிலும் சரியாக யூகித்தால் அதற்கான சாதனை பட்டயங்களை பெற்று நமது பக்கத்தில் இடம் பெறச்செய்யலாம்.

யோசித்து பாருங்கள் தமிழி பாடல்களுக்காக இதே போன்ற தளம் இருந்தால் இளையராஜா பாடல்களையும் எமெஸ்வி பாடல்களையும் இசைப்புயல் பாடல்களையும் கேட்டு யூகித்து மகிழலாம்.கர்நாடக் இசை மற்றும் நாட்டு பாடல் போன்ர பிரிவுகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

தமிழில் திரைப்பாடல் போன்ற தளங்களை நடத்தி வருபவர்கள் முயன்று பார்க்கலாம்.

இசை விளையாட்டிற்கான இணைய முகவரி;http://www.guessyoursongs.com/