Tag Archives: edit

இணையதளங்களை திருத்துவோம் வாருங்கள்

bbcஉங்களுக்கு ஹேக்கிங் செய்யத்தெரியாவிட்டால் என்ன? நீங்கள் விரும்பினால் ஒரு இணையதளத்தின் தோற்றத்தை மாற்றலாம் தெரியுமா? அந்த இணையதளத்தின் தலைப்பை திருத்தலாம் . புகைப்படங்களை மாற்றலாம். – ஷர்ட்யுஆரெல் ( http://shrturl.co/) இணையதளம் இவை எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது .

அடிப்படையில் இந்த இணையதளம் எந்த ஒரு இணையதளத்தின் போலி வடிவத்தையும் உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. எப்படி ? நீங்கள் மாற்ற விரும்பும் தளத்தின் இணைய முகவரியை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு சமர்பிக்கப்பட்ட இணையதளத்தின் நகல் தோற்றத்தை இது உருவாக்கித்தருகிறது. இந்த நகல் தோற்ற தளம் திருத்தங்களை செய்யக்கூடியது. ஆக, அதில் உள்ள தலைப்புகளையோ ,புகைப்படங்களையோ நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

திருத்தங்களை செய்த பின், மாறிய தோற்றத்தின் இணைய முகவரியை பெற்று நண்பர்களுடன் பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். தளத்தின் தோற்றத்தை பார்த்தால் பார்த்து பழகிய பிரபலமான தளம் போல இருக்கும். ஆனால் அதன் உள்ளடக்கமோ மாறி இருக்கும்.

பொதுவாக ஒரு இணையதளத்தின் உள்ளே அத்துமீறி உள்ளே நுழைந்து அதன் உள்ளடக்கத்தை மாற்றுவது ‘டிஃபேசிங்’ என்று சொல்லப்படுக்கிறது. இணைய தளம் மீது கரை பூசுவது அல்லது அசிங்கப்படுத்துவது என பொருள். இந்த அத்துமீறிய செயல் ஹேக்கிங்கில் ஒரு வகை . அரசியல் நோக்கம் முதல் வில்லங்கமான நோக்கம் வரை பல்வேறு காரணங்களுக்காக இப்படி இணையதளங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்படுவதுண்டு.

இப்போது ஹேக்கிங் செய்யமாலேயே எந்த ஒரு இணையதத்தின் தோற்றத்தையும் மாற்ற ஷர்ட்யூஆரெல் வழி செய்கிறது. ஆனால் ஹேக்கிங் போல மூல தளத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதன் நகல் தோற்றத்தில் தான் மாற்றங்கள் செய்யப்படுகிறது.

இந்த சேவையை பலவிதங்களில் பயன்படுத்தலாம். விளையாட்டாகவும் பயன்படுத்தலாம். வில்லங்கமாகவும் பயன்படுத்தலாம். வில்லங்கமாக பயன்படுத்தினால் விபரீதத்திற்கு நீங்களே பொறுப்பு. வில்லங்கமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு தளங்கள் மீதோ , நிறுவன தளங்கள் மீதோ கை வைக்காமல் இருப்பது நல்லது. மாற்றாக சொல்ல நினைக்கும் செய்தியை ஆச்சரயம் கலந்த சுவாரஸ்யத்துடன் சொல்ல இந்த வசதியை பயன்படுத்தலாம்.

அதே போல இணையதள வடிவமைப்பில் ஆர்வம் உள்ளவர்கள் இணையதள தோற்றம் தொடர்பான உதாரணங்களுக்கு இந்த சேவையை பயன்படுத்தலாம்.

——-

இணையதள முகவரி: http://shrturl.co/

 

————-

பி.கு:<100-00-0002-219-9_b/strong> இந்த வகையான இணைய சேவைகள் இணையத்தின் வழக்கமாகவே இருக்கிறது. இணைய கோபத்தை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கும் இதே போன்ற சேவை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

மேலும் இது போலவே , பிரபல செய்தி தளங்களின் தோற்றத்தில் நாம் விரும்பும் செய்திகளை இடம் பெற வைக்ககூடிய சுவாரஸ்யமான இணையதளமும் இருக்கிறது. அந்த இணையதளம் பற்றி அறிய விரும்பினால், சிறந்த இணையதளங்கள் பற்றிய விரிவான அறிமுகங்களை கொண்ட எனது புத்தகமான ’இணையத்தால் இணைவோம் ’ வாங்கிப்பாருங்கள்; https://www.nhm.in/shop/100-00-0002-219-9.html

 

விளையாட்டக பயன்படுத்தக்கூடிய இணைய சேவை.

இணைய எலும்புக்கூடுகளை உருவாக்க!

text-mirror

ஒரு இணையதளத்தை எந்த விதமான வடிவமைப்பு அலங்காரங்களும் இல்லாமல் அதன் வரி வடிவிலான தகவல்களை மட்டும் பார்க்க விரும்பினால்,டெக்ஸ்ட்மிரர் இணையதளம் அவ்வாறு அந்த தளத்தை மாற்றி தருகிறது.

எந்த இணையதளத்தை மாற்ற வேன்டுமோ அதை இந்த தளத்தில் சமர்பித்தால், அதில் உள்ள இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நீக்கிவிட்டு வெறுமையாக தருகிறது.அப்போது வெறும் வரி வடிவிலான தகவல்கள் மட்டுமே இருக்கும்.மற்றபடி, புகைப்படங்களோ,விளம்பரங்களோ வேறு எந்த அம்சமும் இருக்காது.

எதோ கம்ப்யூட்டர் புரோகிராமிங் எழுதப்பட்டது போல அந்த பக்கம் காட்சி அளிக்கும்.சரி, இப்படி இணையதளங்களை அவற்றின் வடிவமைப்பு மற்றும் எச்டிஎமெல் சார்ந்த அம்சங்களை நீக்கி விட்டு வெறும் எலும்புக்கூடு போல பார்க்க வேண்டியதன் அவசியம் என்ன?

பல பிரவுசர்களில் வரி வடிவில் மட்டும் சேமிப்பதற்கான வசதி இருக்கிற‌தே என்று கேட்கலாம். உண்மைதான் பிரவுசர்கள் மூலமே ஒரு தளத்தின் வரி வடிவத்தை மட்டும் சேமிக்கலாம் தான்,ஆனால் டெக்ஸ்ட்மிரர் பயன்படுத்தும் போது தளத்தின் மூல வடிவமைப்பு அப்படியே பாதிக்காமல் இருக்கிறது.அதாவது இடது புறம் இருந்த தகவல்கள் அங்கேயே மாறாமல் இருக்கும் . இது ஒரு அணுகூலம்.

மற்றபடி அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பேஸ்புக் போன்ற பக்கங்களை இப்படி வடி வடிவில் பார்க்கலாம்.

வரி வடிவம் என்பதால் குறிப்பிட்ட இணையதளம் துரிதமாக வந்து நிற்க வாய்ப்புள்ளது.

எது எப்படியோ, இணைய கட்டுரைகளை விளம்ப தொல்லை இல்லாமல் படிக்க விடும்பினால் அதற்கு இன்ஸ்டபேப்பர் போன்ற அருமையான தளங்கள் இருக்கின்றன.

இணையதள முகவ‌ரி; http://textmirror.net/

இளம் எழுத்தாளர்களுக்கான பேஸ்புக்.

எழுத்தாளராவதற்கு தான் எத்தனை தடைகள்!

முதலில் எழுத வேண்டும்.எழுதியதை திருத்தி செப்பனிட்டு புத்தகத்தை வெளியிட வேண்டும்.அதன் பிறகு வாசகர்கள் கிடைக்க வேண்டும்.

இதற்கு மாறாக எழுதும் போதே வெளியிடுவதற்கான வாய்ப்பும் படிப்பதற்கான வாசகர்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்?

விட்புக் இணையதளம் இந்த அற்புதத்தை தான் சாத்தியமாக்குகிறது.

எழுத்தார்வம் கொண்டவர்களுக்கான பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் தளமாக இந்த விட்புக் உருவாக்கப்பட்டுள்ளது.

எழுதுங்கள்,படியுங்கள்,பகிருங்கள்! என அழைக்கும் இந்த வலைப்பின்னல் எழுத்தாளராக தேவையான எல்லாவற்றையும் வழங்குகிறது.

இதற்கு இந்த தளத்தில் உறுப்பினரானால் போதுமானது.(பேஸ்புக் பயனாளிகள் நேராக நுழைந்து விடலாம்).

உறுப்பினராகும் போதே எழுத்தில் நீங்கள் விரும்பும் வகைகளை (தொழில்நுட்பம்,இலக்கியம்,வரலாறு…)போன்றவற்றை குறிப்பிட்டு படித்த பள்ளி போன்ற அடிப்படையான விவரங்களையும் குறிப்பிடலாம்.

நிங்கள் குறிப்பிடும் எழுத்து வகைக்கேற்ப உங்களுக்காக புத்தகங்கள் சில பரிந்துரைக்கப்படும்.அவற்றை பிறகு பார்ப்போம்.இப்போது எழுதுவதை கவனிக்கலாம்.அதற்கு முன்பாக விட்புக்கில் உங்கள் பேஸ்புக் நண்பர்கள் யாராவது இருக்கின்றனரா என்று பார்த்து அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் எழுத்து திட்டத்தை தெரிவிக்கலாம்.

புதிதாக நாவல் எழுதப்போகிறேன் என்றோ அல்லது கம்புயூட்டர் பயன்பாடு அனுபவ குறுப்புகளை எழுதப்போகிறேன் என்றோ தெரிவிக்கலாம்.அதன் பிறகு எழுத துவங்கலாம்.எழுதும் போது ஏற்படும் எண்ணங்களையும் அனுபவங்களையும் பேஸ்புக் அப்டேட் போலவே பகிர்ந்து கொள்ளலாம்.

இனி எழுத ஆரம்பிக்கலாம்.

‘புதிய புத்தகத்தை உருவாக்க’என உள்ள பகுதியை கிளிக் செய்தால் எழுதுவதற்கான புத்தக பக்கங்கள் வந்து நிற்கின்றன.அதற்கு முன்பாக புத்தகத்தின் தலைப்பு,துணை தலைப்பு மற்றும் புத்தகம் பற்றிய விளக்கத்தையும் குறிப்பிட்டு புத்தகத்திற்கான அறிமுகத்தை அளிக்கலாம்.வலைப்பின்னல் தளம் என்பதால் புத்தகத்தில் மற்றவர்கள் பங்களிப்பு மற்றும் பின்னூட்டம் வடிவில் கருத்துக்களை அனுமதிக்க விருப்பமா என்றும் தெரிவிக்கலாம்.

இனி எழுத எந்த தடையும் இல்லை.சும்மா சொல்லகூடாது திரையில் தோன்றும் இணைய குறிப்பேட்டை பார்த்தாலே எழுத ஆர்வம் ஊற்றெடுக்கும்.அந்த அளவுக்கு சகல வசதிகளோடு சிறப்பாக இருக்கிறது குறிப்பேடு.

ஒவ்வொரு அத்தியாயமாக பெயரிட்டு எழுதி கொண்டே போகலாம்.எழுதியதை சேமித்து விட்டு அடுத்ததாக எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதுஎழுதலாம்.எழுதியதை எப்போது வேண்டுமானாலும் திருத்தி கொள்ளலாம்.

எழுதுவதற்கான இணைய குறிப்பேடு கிட்டத்தட்ட இபுக்கிற்கான அனைத்து வசதிகளுடனும் இருப்பதால் எழுதி முடித்தவுடன் முழு புத்தகமாக உருவாக்கி விடலாம்.

எழுதி முடித்த புத்தகத்தை இந்த தளத்திலேயே வெளியிடலாம்.அதாவது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அவர்களும் அதை படித்து விட்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இவ்வளவு ஏன் புத்தகத்தை எழுதும் நிலையிலேயே கூட ஒவ்வொரு அத்தியாயத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.விரும்பினால் சக உறுப்பினர்கள் திருத்தங்களை தெரிவிக்கவும் அனுமதிக்கலாம்.அல்லது அவர்கள் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப மேம்படுத்திக்கொள்ளலாம்.இன்னுமொரு பட மேலே போய் ஒத்த கருத்துள்ள உறுப்பினர்களை சேர்ந்து எழுதவும் அனுமதிக்கலாம்.

இந்த கருத்து பரிமாற்றமே விட்புக் வலைப்பின்னலை தனித்துவம் மிக்கதாக ஆக்குகிறது.

ஒரு படைப்பை உருவாக்கும் போதே அது பற்றி நண்பர்களோடும் இலக்கிய நிபுனர்களோடும் விவாதித்து அவர்கள் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப அந்த படைப்பை பட்டை தீட்டிக்கொள்ளும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடாது.ஆனால் இந்த வாய்ப்பை ஆர்வம் உள்ள எல்லா இளம் எழுத்தாளர்களுக்கும் சாத்தியமாக்குகிறது விட்புக்.

எழுதும் போதே வாசகர்களை பெற வழி செய்வதோடு எழுத்து சார்ந்த நட்பை தேடிக்கொள்ளவும் வாய்ப்பு தருகிறது இந்த வலைப்பின்னல்.

நீங்களும் கூட மற்ற இளம் எழுத்தாளர்கள் எழுதுவதை படித்து கருது தெரிவித்து ஊக்குவிக்கலாம்.மற்ற எழுத்தாளர்களுக்கு நேரிடியாக செய்தி அனுப்பி தொடர்பு கொள்ளலாம்.அவர்களோடு உரையாடலாம்.எல்லாமே எழுத்து சார்ந்த உறவை வளர்க்கும்.

எழுத்தாளர்கள் தங்கள் பக்கத்தில் எழுதிய புத்தகத்தை இடம் பெற செய்வதோடு புத்தக அலமாரி,செய்தி பரிமாற்ற அறை,கூட்டு முயற்சி அரங்கு ஆகியவற்றையும் அமைத்து கொள்ளலாம்.

இவ்வளவுக்கும் இடையே தினமும் எழுத்தின் முன்னேற்றத்தை பகிர்ந்து கொள்ளலாம்.எழுத்தாளராக விரும்புகிற்வர்களுக்கு இது கிட்டத்தட்ட இணைய சொர்கம் தான்.

இணையதள முகவரி;http://www.widbook.com/home

மேலும் ஒரு புகைப்பட திருத்த இணையதளம்!.

புகைப்படங்களை மெருகேற்ற விரும்புகிறவர்களுக்கு வசதியாக ஒரே கிளிக்கில் புகைப்படங்களின் பின்னணி உட்பட பல்வேறு அம்சங்களை திருத்தித்தரும் சேவையை ஃபிக்புல் இணையதளம் வழங்குகிறது என்றால் குவிக்பிக்சர்ஸ்டூல் இணையதளமோ அதை விட வியக்க வைக்ககூடியதாக இருக்கிறது.

மிக மிக எளிமையாக உள்ள இந்த தளம் எந்த ஒரு புகைப்படத்திலும் பொதுவாக மேற்கொள்ளக்கூடிய 12 திருத்தங்களை செய்து கொள்ள வழி செய்கிறது.12 அம்சங்களுமே முகப்பி பக்கத்திலேயே வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றில் கிளிக் செய்தால் புகைப்படத்தில் அந்த திருத்தத்தை மேற்கொண்டு விடலாம்.

புகைப்படத்தின் மீது வாசகங்களை இடம்பெற வைப்பது,புகைப்படத்தின் ஒரத்தை நிழல் போல் ஆக்குவது,அதன் முனைகளை வட்ட வடிவமாக்குவது,புகைப்படத்தை சுற்றி சதுரமாக கோட்டை போடுவது என பல்வேறு திருத்தங்களை மிக சுலபமாக செய்து கொள்ளலாம்.

அதே போல புகைப்படத்தை அச்சிட ஏற்ற வகையில் மாற்றுவது ஒன்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை கொலேஜ் போல ஒன்றிணைப்பது போன்ற விளைவுகளையும் மேற்கொள்ளலாம்.

புகைப்படத்தை டெஸ்க்டாப் நாட்காட்டியாக மாற்றிக்கொள்ள விரும்பினாலும் அதற்கான வசதி இருக்கிறது.

புகைப்படத்தின் அளைவை இஷ்டம் போல சுருக்கிகொள்ளும் வசதியும் இருக்கிறது.

ஒரே பக்கத்தில் புகைப்பட திருத்தங்கள் தொடர்பான 12 அம்சங்களை அணுக முடிவது இந்த தளத்தின் சிறப்பம்சம்.

இணையதள முகவரி;http://www.quickpicturetools.com/en/

ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை.

இது காமிரா யுகம்.பலரும் கையில் டிஜிட்டல் காமிராவோ செல்போன் காமிராவோ வைத்திருக்கிறோம்.அவற்றால் எல்லா நிகழ்வுகளையும் படம் எடுத்து பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் இமியிலிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

புகைப்படங்களை எடுப்பதும் பகிர்வதும் எளிதாகி இருப்பது போல அவற்றை திருத்துவதும் தான் எளிதாகியிருக்கிறது.அதாவது எடிட் செய்வது.புகைப்படத்தின் பின்னணி மற்றும் வண்ணங்களை திருத்தி புகைப்படத்தை மெருகேற்றுவது.

இதற்கான சாதங்களும் சாப்ட்வேரும் அநேகம் இருக்கின்றன என்றாலும் அவற்றை பயன்படுத்த பயிற்சியும் தேர்ச்சியும் அவசியம்.

அத்தகைய பயிற்சியும் தேர்ச்சியும் இல்லாமல் புகைப்படங்களை மெருகேற்றும் ஆர்வம் மட்டுமே உள்ளவர்களுக்காக ஆன்லை புகைப்பட எடிட்டிங் சேவைகள் இருக்கவே இருக்கின்றன.அதாவது இணையத்தின் மூலமே புகைப்படங்களை திருத்தி மேம்படுத்தி கொள்ளலாம்.

இந்த வசதியை தான் வழங்குகிறது பிக்புல் இணையதளம்.

ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் என்று வர்ணிக்க கூடிய இந்த தளம் மிக எளிதாக புகைப்படங்களை திருத்தி கொள்ள வழி செய்கிறது.

இதற்காக புகைப்படத்தை இந்த தளத்தில் பதிவேற்றிவிட்டு,அதற்கு தேவையான பின்னணி அமைப்பு மற்றும் இதர திருத்தங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

திருத்தங்கள் என்று வரும் போது புகைப்படத்தின் அழகை மேம்படுத்த தொழில்முறையாக மேற்கொள்ளப்படும் பல்வேறு யுத்திகளை உள்ளடக்கியது.எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் செய்து முடித்துவிடலாம்.

இவற்றை தேர்வு செய்து புகைப்படத்தை அழகாக்கி கொண்ட பிறகு அதனை அப்படியே கம்ப்யூட்டரில் சேமித்து கொள்ளலாம்.அப்படியே இமெயில் பேஸ்புக் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://www.picfull.com/