வியக்க வைக்கும் விக்கி உலகம்!

’ஒரு கனவு நனவாகி விட்ட நிலையில் நாம் காண வேண்டியது இன்னொரு கனவு’.

இந்த மேற்கோளுக்கு சொந்தக்காரர் யார் என யூகிக்க முடிகிறதா? ஒரு சின்ன க்ளு ,அவர் நம்மவர் தான்!. இதற்கான பதிலை பார்ப்பதற்கு முன் முதலில் விக்கிபீடியா புராணத்தை கொஞ்சம் பார்க்கலாம்.

விக்கிபீடியாவை ஒரு இணைய அதிசயம். கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியா இணையத்தின் எல்லையில்லா ஆற்றலுக்கும் உதாரணமாக விளங்குகிறது. விக்கிபீடியா அறிமுகமான போது இந்த அளவு வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன், விக்கிபீடியா வெற்றி பெறும் என்று கூட பெரும்பாலானோர் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஏனெனில் அப்போது விக்கிபீடியாவின் கருத்தாக்கமே புதிதாக இருந்தது. விக்கிபீடியாவிற்கு முன் கலைக்களஞ்சியம் என்றால் அதை நிர்வகிக்க ஒரு ஆசிரியர் குழு இருக்கும், அதற்கு வழிகாட்ட வல்லுனர்கள் குழு இருக்கும். ஒவ்வொரு தகவலையும் ஆய்வு செய்து பல்முறை சரி பார்த்து இடம்பெறச்செய்வார்கள். ஆனால் கட்டற்ற களஞ்சியமாக அறிமுகமான விக்கிபீடியா இந்த சித்தாந்தத்தையே தலைகீழாக புறட்டிப்போட்டது. விக்கிபீடியா இணையவாசிகளால், இணையவாசிகளுக்காக உருவாக்கப்பட்டது. அதில் மையமாக ஆசிரியர் குழு இல்லை. யார் வேண்டுமானாலும் கட்டுரைகளை சமர்பிக்கலாம்.- அந்த கட்டுரையில் உள்ள தகவல்களை யார் வேண்டுமானாலும் திருத்தி மாற்றி அமைக்கலாம் எனும் ஜனநாயகத்தன்மையுடன் விக்கிபீடியா அறிமுகமானது. இதன் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்.

மாபெரும் களஞ்சியம்

விக்கிபீடியாவின் ஆதார தன்மையே இந்த பங்கேற்பு தன்மை தான். விக்கி என்றால் மென்பொருள் மொழியில், எவரும் திருத்தங்களை செய்யக்கூடிய இணையதளம் என்று பொருள். இதை விக்கியின் பின்னே உள்ள மென்பொருள் சாத்தியமாக்குகிறது. ஆக, தொழில்நுட்ப நோக்கில்  யார் வேண்டுமானால் தகவல்களை இடம்பெற வைப்பது சாத்தியமாகலாம். ஆனால் இவ்வாறு உருவாக்கப்படும் இணையதளத்தையும், அதில் இடம் பெறும் தகவல்களையும் எப்படி நம்புவது என்ற கேள்வி எழுந்தது. அதோடு, வல்லுனர்கள், ஆசிரியர்கள் குழு உதவி இல்லாமல் ஒரு களஞ்சியத்தை சாமானியர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்குவது எல்லாம் நடைமுறையில் செல்லுபடியாகுமா? என்று கேட்கப்பட்டது. இத்தகைய முயற்சி அபத்தமாகவே அமையும் என ஆருடம் கூறப்பட்டது. ஆனால் விக்கிபீடியா இணையவாசிகளின் பங்கேற்பால் பெரும் அளவில் வெற்றி பெற்று உலகின் மாபெரும் களஞ்சியமாக உருவாகியுள்ளது.

விக்கிபிடியாவின் வளர்ச்சி வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது. இன்று விக்கிபீடியா ஆங்கில மொழியில் மட்டும் அல்லாமல், நம் தமிழ் உள்ளிட்ட 295 மொழிகளில் செயல்படுகிறது. ஆங்கில மொழியில் மட்டும் 5 மில்லியனுக்கு மேல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நாள்தோறும் 800 புதிய கட்டுரைகள் சேர்க்கப்படுகின்றன. நொடிக்கு இத்தனை தகவல்கள் திருத்தப்படுகின்றன. தமிழ் மொழியில் கட்டுரைகள் ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் விக்கிபீடியா இயங்குகிறது. இந்த பிரும்மாண்ட வளர்ச்சிக்கு பின்னே உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தன்னார்வலர் படை ஓயாமல் இயங்கி கொண்டிருக்கிறது. பாரம்பரிய களஞ்சியங்கள் எல்லாம் ஒவ்வொரு பதிப்பின் போது மேம்படுத்தப்படும். விக்கிபீடியா ஒவ்வொரு நொடியும் திருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அதுவே விக்கிபீடியாவின் தனித்தன்மையாக இருக்கிறது.

இணைய உலகில் விக்கிபீடியாவுக்கு இருக்கும் செல்வாக்கை பற்றியும் அதிகம் கூற வேண்டியதில்லை. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை தகவல்கள் தேவை எனில் விக்கிபீடியாவை நாடுகின்றனர். கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்களில் தகவல்களை தேடும் போது, அநேகமாக அது தொடர்பான விக்கிபீடியா பக்கம் தேடல் பட்டியலில் முதல் பக்கத்திலேயே வரவேற்கும்.

தகவல் சுரங்கம்

விக்கிபீடியா தகவல் சுரங்கம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதன் தகவல்களை எந்த அளவுக்கு நம்பலாம் எனும் கேள்வி இன்னும் கூட பலருக்கு இருக்கலாம். இந்த கேள்விக்கு நம்பலாம் அல்லது நம்ப முடியாது என ஒற்றை வார்த்தையில் பதிலை எதிர்பார்ப்பது விக்கி சித்தாந்தத்தையே கொச்சை படுத்துவது போலாகிவிடும். ஏனெனில் விக்கிபீடியா அந்த அளவுக்கு நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான பல அடுக்கு செயல்முறைகளையும், அவற்றை இயக்கும் கராரான விதிகளையும் கொண்டுள்ளது. இது பற்றி சுருக்கமாக சொல்வது என்றால் விக்கிபீடியாவில் எப்படி தகவல்களை இடம்பெற வைக்க தன்னார்வலர் படை இயங்கி வருகிறதோ, அதே போல, தகவல்களை சரி பார்க்கவும் , அவற்றில் பிழை எனில் திருத்தம் செய்யவும் ஒரு பெரும் படை செயல்பட்டு வருகிறது. இந்த படை விக்கிபீடியா கட்டுரைகளில் உள்ள தகவல்களை சரி பார்த்து தேவையான திருத்தங்களை மேற்கொள்கிறது. இந்த திருத்தங்களும் திருத்தப்படலாம் என்பதால் பல நேரங்களில் திருத்தல் யுத்தம் நிகழ்வது உண்டென்றாலும், விக்கிபீடியா தன்னைத்தானே திருத்திக்கொண்டே இருக்கிறது.

நம்பகத்தன்மை

எனவே விக்கிபிடியாவில் உள்ள தகவல்கள் நம்பகமானவை என்று சொல்வது சரியல்ல, நியாயமும் அல்ல. ஆனால் அதற்காக விக்கிபீடியா தகவல்கலை அப்படியே கண்ணை மூடிக்கொண்டும் நம்பி விடக்கூடாது. இவை அடிப்படையில் வழிகாட்டி நோக்கிலானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை ஒரு துவக்கப்புள்ளியாக வைத்துக்கொள்ளலாம். அதோடு விக்கிபீடியா கட்டுரைகள் செயல்படும் விதத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் கட்டுரை எழுதலாம் என்றாலும், மனம் போன போக்கில் எதையும் எழுத முடியாது. முதலில் கட்டுரை தலைப்பை சமர்பிக்க வேண்டும். அதை சக பயனாளிகள் குழு பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு தகவல்களை சேர்க்கலாம். தகவல்களையும் இஷ்டம் போல சேர்க்க முடியாது. அதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும். மாற்றம் செய்ய வேண்டுமானாலும் ஆதாரங்கள் தேவை. தகவலுக்கான மூலத்தை சுட்டிக்காட்ட வேண்டும்.

விக்கி கட்டுரைகளை வாசிக்கும் போது, தகவல்கள் தொடர்பான ஆதாரங்கள் இணைப்பை படித்துப்பார்க்க வேண்டும். கட்டுரைக்கு கீழே இந்த இணைப்புகள் வரிசையாக இருக்கும். அதிகார பூர்வ தளங்களுக்கான இணைப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றை படித்துப்பார்க்கும் போது தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த தெளிவு உண்டாகும். குறிப்பாக மிக முக்கிய தகவல் எனில். அது தொடர்பான ஆதாரங்கள் என்ன என்பதை ஆராய வேண்டும். தேவை எனில் அந்த தகவல் குறித்து தனியே கூகுளில் தேடிப்பார்க்கலாம். விக்கியில் வாசித்தால் மட்டும் போதாது, கொஞ்சம் ஆய்வும் தேவை.

விக்கிபீடியா பயனாளியாக மட்டும் இல்லாமல் விக்கிபீடியாவில் பங்கேற்கவும் செய்தால், இந்த செயல்முறையை நன்றாக விளங்கி கொள்ளலாம். அதோடு விக்கிபீடியாவில் பங்கேற்பது என்பது நம் மொழியில் உள்ள களஞ்சியத்தின் வளத்தை பெருக்குவதில் தொண்டாற்றுவது போல தான். தமிழ் விக்கிபீடியாவில் இன்னும் கட்டுரைகளை சேர்க்கலாம். திருத்தங்களை மேற்கொண்டு மேம்படுத்தலாம். :

தினம் தினம் தகவல்கள்

நிற்க விக்கிபீடியாவில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் பல இருக்கின்றன. விக்கிபீடியாவில் தேவையான தகவல்களை பெறலாம் என்பதோடு தினந்தோறும் புதிய விஷயங்கள் கற்றுக்கொள்ளவும் செய்யலாம். விக்கிபீடியா முகப்பு பக்கத்தில் இருந்தே இதை துவங்கலாம். விக்கிபீடியா பரவலாக அறியப்பட்டதாக இருந்தாலும் கூட, அந்த தளத்திற்கு நேரடியாக பலரும் விஜயம் செய்வதில்லை. பெரும்பாலானோர் கூகுள் தேடல் மூலம் கண்டறியும் குறிப்பிட்ட விக்கிபீடியா பக்கத்தையே நாடுகின்றனர். ஆனால் விக்கிபீடியா முகப்பு பக்கத்தில் தினமும் ஒரு கட்டுரை முன்னிறுத்தப்படும். அதன் மூலம் புதிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அருகிலேயே செய்திகளின் பட்டியலையும் பார்க்கலாம். அதன் கீழே உங்களுக்குத்தெரியுமா எனும் தலைப்பிலும், இன்றைய தின நிகழ்வுகள் எனும் தலைப்பிலும் தகவல்களை பார்க்கலாம். தினமும் ஒரு புகைப்படம் மூலம் தகவல் முன்வைக்கப்படும்.

தினமும் இல்லாவிட்டாலும் அடிக்கடி விக்கிபிடியாவுக்குள் எட்டிப்பார்ப்பதை வழக்கமாக கொண்டு சில நிமிடங்களை செலவிட்டால் புதிய விஷயங்களை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். முகப்பு பக்கத்தில் விக்கிபீடியாவில் அப்டேட்டாகும் தகவல்களை எளிதாக அடையாளம் காணலாம் என்றால், போர்ட்டல் பகுதியின் மூலம் விக்கி சுரங்கத்தில் உள்ளவற்றை எல்லாம் காணலாம்.: https://en.wikipedia.org/wiki/Portal:Contents/Portals

இந்த பகுதியில் விக்கி கட்டுரைகள் பல்வேறு தலைப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அகர வரிசைப்பட்டியலையும் காணலாம். இதில் மேலோட்டமாக பார்வையை ஓட்டி விருப்பமான பகுதியை தேர்வு செய்து மேற்கொண்டு படிக்கலாம். இதே பகுதியில் மிகவும் பிரபலமான கட்டுரை பட்டியல் மூலமும் புதிய கட்டுரைகளை அணுகலாம். போர்ட்டல் பகுதியில் உள்ள தலைப்புகளையும், வகைகளையும் பார்த்தாலே விக்கிபீடியாவின் நீள ,அகலத்தை நன்றாக தெரிந்து கொள்ளலாம்.

இணையத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விக்கிபீடியா தளத்தில் உலா வருவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொண்டால் நீங்களும் கூட நாளடைவில் நடமாடும் தகவல் களஞ்சியமாக மாறிவிடலாம். அதோடு குறிப்பிட்ட தலைப்பில் உங்கள் தகவல் ஞானத்தையும் ஆழமாக்கி கொள்ளலாம்.

சகோதர தளங்கள்

விக்கிபீடியா தளமே வியக்க வைக்க கூடியது என்றால் அதன் சகோதர தளங்களை பார்த்தால் இன்னும் பிரம்மிப்பு உண்டாகும். ஆம், விக்கிமீடியா அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் விக்கிபீடியா சார்பில் விக்குபுக்ஸ், விக்கிகோட்ஸ், விக்கிஷ்னரி, விக்கிநியூஸ், விக்கிசோர்ஸ் ,விக்கிவர்சிட்டி, விக்கிடேட்டா உள்ளிட்ட துணை திட்டங்களும் செயல்படுத்தபட்டு வருகின்றன. எல்லாமே இணையவாசிகளால் உருவாக்கப்படுபவை.

இவற்றில் விக்கி நியூஸ் (https://en.wikinews.org/ ) என்பது செய்திகளுக்கானது. விக்கி சமூகத்தால் பகிர்ந்து கொள்ளப்படும் செய்திகளை இந்த பக்கத்தில் அணுகலாம். உலக செய்து முதல் உள்ளூர் செய்திகள் வரை உண்டு. செய்திக்ள் தவிர, கட்டுரைகள், நேர்காணல்கள், செய்தி சேகர்ப்பு ஆகியவற்றையும் வாசிக்கலாம். விக்கி செய்திகள் தமிழிலும் இருக்கிறது: http://bit.ly/2oZMSyx

விக்கி செய்திகள் போலவே விக்கி புக்ஸ் (https://en.wikibooks.org/wiki/Main_Page ) பகுதியில் புத்தகங்களை வாசிக்கலாம். பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கhttps://en.wikibooks.org/wiki/Main_Pageளை வாசிக்க முடியும்.

விக்கிஷ்னரி (https://en.wiktionary.org/wiki/Wiktionary:Main_Page ) பகுதி விக்கி அகராதியாகும். இந்த அகராதியில் ஆங்கில் சொற்களுக்கான பொருள்மற்றும் பயன்பாட்டை தெரிந்து கொள்ளலாம். தமிழிலும் விக்கிஷ்னரி இருக்கிறது. இதே போலவே பிரபலமானவர்களின் மேற்கோள்களின் தொகுப்பாக விக்கிகோட் பகுதி அமைகிறது. மேற்கோள்களையும், பொன்மொழிகளையும் இதில் காணலாம். இதன் தமிழ் பகுதியில் தான் மேலே சொன்ன கனவு மேற்கோள் வருகிறது. அதன் சொந்தக்காரர் நடிகர் கமல்ஹாசன். https://en.wiktionary.org/wiki/Wiktionary:Main_Page

இந்த பக்கத்தில் மேலும் பல பிரபலங்கள், இலக்கியங்கள், திரைப்படங்களின் மேற்கோள்களை பார்க்கலாம். கலை,இலக்கியம், சமயம், வீரம் என தனித்தனி தலைப்புகள் கீழும் மேற்கோள்களை அணுகலாம். மயில்சாமி அண்ணாதுரை முதல் பாவலரேறு பெருஞ்சித்திரனார், மண்டேலா, மகாத்மா என மேதைகளின் மேற்கோள்களையும் அறியலாம்.

விக்கி வாயேஜ் (https://en.wikivoyage.org/wiki/Main_Page ) என்பது பயண வழிகாட்டி. உலகின் எந்த நாடு அல்லது நகருக்கு பயணம் செல்ல விரும்புகிறோமோ அந்த நாடு அல்லது நகரம் தொடர்பான தகவல்களை அறியலாம். குறிப்பாக சுற்றுலா நோக்கிலான தகவல்கள் மற்றும் பயண வழிகளை அறியலாம்.

விக்கி பல்கலை

விக்கி சோர்ஸ் என்பது மூலத்தகவல்களுக்கான நூலகம் போன்றது. விக்கிடேட்டா தரவுகளுக்கான காப்பகம். விக்கி வார்சிட்டி (https://en.wikiversity.org/wiki/Wikiversity:Main_Page) பகுதியில் விக்கி பல்கலைகழகம் போன்றது. கல்வி சார்ந்த தகவல்கள் இதில் கொட்டிக்கிடக்கின்றன. இணைய வடிவமைப்பு உள்பட பல விஷயங்களை இந்த ப்குதியில் கற்றுக்கொள்ளாலாம். மாணவர்கள் இந்த பக்கத்திற்குள் நுழைந்தால் பயனுள்ள பல தகவல்களை பெறலாம். பள்ளி பாடத்திற்கான ஊக்கத்தையும் பெறலாம், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் தகவல்களையும் திரட்டிக்கொள்ளலாம்.

இவைத்தவிர விக்கி ஸ்பிஷியஸ் (https://species.wikimedia.org/wiki/Main_Page ) பகுதியில் தாவிரங்கள், விலங்குகள் உள்ளிட்ட உயிரணங்கள் தொடர்பான தகவல்களை அறியலாம். இவை எல்லாமே இணையவாசிகள் பங்கேற்பால் உருவாகி வருபவை., எனவே நீங்களும் பங்கேற்கலாம். தமிழ் விக்கிபீடியா பக்கம்: http://bit.ly/1o52tcM

விக்கி ஆர்வலர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இன்னொரு இணையதளம் விக்கிமீடியா அறக்கட்டளையின் வலைப்பதிவாகும்: https://blog.wikimedia.org/ . இதில் விக்கிபீடியாவின் புதிய திட்டங்கள், விக்கி சமூக நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம். இந்த வரிசையில் சிம்பிள் விக்கிபீடியாவையும் (https://simple.wikipedia.org/wiki/Main_Page ) சேர்த்துக்கொள்ள வேண்டும். இது விக்கிபீடியாவின் எளிமையான வடிவம். இதில் உள்ள கட்டுரைகள் எல்லாம் அடிப்படை ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். வாக்கியங்களும் சிறியதாக எளிதில் படிக்க கூடியதாக இருக்கும். சிறுவர் ,சிறுமியர் மற்றும் முதல் ஆங்கிலம் கற்று வருபவர்களுக்கு இந்த எளிமையான பக்கம் ஏற்றதாக இருக்கும். இதே போல கிவிக்ஸ் (http://www.kiwix.org/ ) இணையதளம் விக்கிபீடியா பக்கங்களை தரவிறக்கம் செய்து இணைய இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்த உதவுகிறது.

இவை எல்லாம் விக்கி சாம்பிராஜ்யத்தின் சில மாதிரிகள் மட்டுமே. விக்கி உலகிற்குள் நுழைந்தால் இன்னும் பல அற்புதங்களை நீங்களே தெரிந்து கொள்ள முடியும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.