Tag Archives: music

mashroomdisplay1

நீங்களூம் ரீமிக்ஸ் செய்யலாம்.

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெயரையே கோலிவுட் இசையமைப்பாளர்கள் கெடுத்து வைத்துள்ளனர்.

ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.ரீமமிக்ஸ் செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக சொல்லும் இந்த கட்டுரை இசை உலகில் மேக்னெடிக் டேப் மூலம் அறிமுகமான தொழில்நுட்பமே ரீமிக்ஸ் கலைக்கும் வாய்ப்பளித்ததாக தெரிவிக்கிறது.

இசையில் மட்டும் அல்ல கலையிலும் இலக்கியத்திலும் கூட ரீமிக்ஸ் இருப்பதாக இந்த கட்டுரை சொல்கிறது.

இவை ஒரு புறம் இருக்க இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்வது என்பது வேறு ரசிகர்கள் ரீமிக்ஸ் செய்வது என்பது வேறு.ரீமிக்ஸ் மூலம் ரசிகர்களூக்கு தாங்கள் ரசிக்கும் பாடல்கள் மீது கூடுதல் உரிமை கிடைக்கிறது.

இந்த கருத்தில் உங்களூக்கும் உடன்பாடு இருந்து நீங்களும் ரீமிக்ஸ் செய்ய விரும்பினால் மாஷ்ரூம் தளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

மாஷ்ரூமில் இசைப்பிரியர்கள் தாங்கள் விரும்பும் எந்த பாடலையும் இஷ்டம் போல ரீமிக்ஸ் செய்யலாம்.

இதற்கு அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த பாடலில் யூடியூப் கோப்பை பதிவேற்றுவது மட்டும் தான்.இதற்கும் கூட கஷடப்பட வேண்டாம்.பாடலில் யூடியூப் முகவரியை சமர்பித்தாலே போதும்.

அதன் பிறகு அந்த பாடலில் விரும்பிய ஒலிகளை சேர்த்து அவற்றின் அளவை ஏற்றி இறக்கி முற்றிலும் புதிய பாடலை உருவாக்கி கொள்ளலாம்.இப்பைட் ரீமிக்ஸ் செய்த பாடலை இந்த தளத்திலேயே கேட்டி ரசிப்பதோடு அதனை பேஸ்புக் டிவிட்டர் வழியே நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://mashroom.fm/
———
இசை தொடர்பான இன்னொரு சுவாரஸயமான சேவை ;http://cybersimman.wordpress.com/2012/04/02/songs-3/

top

டிவிட்டர் பரிந்துரைக்கும் பாடல்கள்.

இன்றைய முன்னணி நாற்பது பாடல்களை கேட்டு ரசிக்கலாம் வாங்க என்று அழைப்பு விடுக்கிறது டாப்பார்டி.இட் இணையதளம்.அதற்கேற்ப 40 முன்னணி பாடல்களை முகப்பு பக்கத்திலேயே பட்டியலிடுகிறது.

பாடல்களோ புத்தகங்களோ திரைப்படங்களோ பொதுவாக டாப் டென் பட்டியல் வெளியிடப்படுவது தான் வழக்கம்.டாப் டென்னை விட்டால் டாப் 100 க்கு போய்விடுவார்கள்.ஆனால் டாப் 40 என்ன கணக்கு என்று புரியவில்லை.

டாப் 40 என்பது கொஞ்சம் விநோதமாக இருந்தாலும் இந்த தளம் முன்னணி பெரும் பாடல்களை தேர்வு செய்யும் விதம் சுவாரஸ்யமாகவே உள்ளது. நேயர்கள் கேட்டு ரசிக்கும் பாடல்களை டிவிட்டர் மூலம் கண்டறிந்து அதனடிப்படையில் முன்னணி பாடல்களை பட்டியலிடுகிற‌து.

இப்படி ஒவ்வொரு தினமும் நேயர்கள் மத்தியில் முன்னிலை பெறும் பாடல்களின் பட்டியலை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.எனவே தினமும் புதிய பட்டியலை பார்க்கலாம்.

பட்டியலில் உள்ள பாடலை கிளிக் செய்தால் அதனை கேட்க துவங்கிவிடலாம்.

பட்டியல் என்றாலே சர்ச்சைக்குறியவை தான்.ஆனால் இந்த பட்டியல் மிகவும் ஜனநாயகமயமானவை என்று சொல்லலாம்.காரணம் இந்த பட்டியல் தனிநப‌ராலோ குழுவாலோ தேர்வு செய்யப்படாமல் தானாக தேர்வு செய்யப்படுவது தான்.

அதாவது டிவிட்டர் பயனாளிகள் தாங்கள் கேட்டு ரசித்து கொண்டிருக்கும் பாடல் பற்றி பகிர்ந்து கொள்ளும் தகவலின் அடிப்படையில் பாடல்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

பாப் இசை பிரியர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தக்கூடிய தளம் தான்.இந்த பட்டியலில் எப்போதாவது நம்மூர் பாடல்கள் இடம் பெற வாய்ப்புண்டா என்று தெரியவில்லை.ஆனால் டிவிட்டரில் பகிரப்படும் தமிழ் பாட‌ல்களை கொண்டு நாமும் ஒரு பட்டியல் தயாரிக்கலாம்.

இணையதள முகவ‌ரி

;http://topforty.it/#/

whatsout

படம்,பாட்டு,புத்தகம்,விளையாட்டு… எல்லாம் ஒரே தளத்தில்

திரைப்பட ரசிகர்களை பொருத்தவரை புதிதாக என்ன படம் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.இதற்காக என்று இணையதளம் இருக்கிறது. அதே போல புத்தக பிரியர்கள் என்றால் என்ன புத்தகம் புதிதாக வெளியாகியுள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.இசை பிரியர்களை பொருத்தவரை புதிய ஆல்பங்களை அறிய விரும்புவார்கள்.இவற்றுக்கும் இணையதளங்கள் இருக்கின்றன.

திரைப்பட ரசிகரோ,புத்தக பிரியரோ,இசை பிரியரோ யாராக இருந்தாலும் அவர்கள் எல்லோர் கேள்விக்கும் அழகாக பதில் சொல்கிறது வாட்ஸ் அவுட் இணையதளம்.

ஆம் இந்த தளம் புதிதாக வெளியாகியுள்ள படங்கள்,பாடல்கள்,புத்தகங்கள் தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் வழங்குகிறது. இவற்‌றோடு புதிய வீடியோ கேம் வெளியீட்டு தகவலகளையும் வழங்குகிறது.

படம்,பாட்டு,புத்தகம் என எல்லா தகவல்களும் ஒரே பக்கத்தில் இருப்பதோடு எல்லாமே மிக எளிமையாக இருக்கின்றன.அதிகப்படியான தகவல்களோ அநாவசிய விவரங்களோ கிடையாது.எப்போது வெளியாயின எங்கே கிடைக்கும் அல்லது எங்கே பார்க்கலாம்,கேட்கலாம் போன்ற விவரங்கள் மட்டுமே நச் என இடம் பெற்றுள்ளன.

திரைப்படங்கள் திரையரங்குகள் மற்றும் படங்கள் என இரண்டு தலைப்புகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லாவற்றிலும் வரிசையாக படத்தின் போஸ்டர்கள் வரவேற்கின்றன.திரையரங்க பகுதியில் உள்ள ப‌டத்தை கிளிக் செய்தால் அந்த படம் வெளியான தேதி வந்து நிற்கிறது.அதோடு அந்த படத்தின் டிக்கெட்டை வாங்குவதற்கான இனைப்பு மற்றும் டிரைலரை காண்பதற்கான இணைப்பு இடம் பெறுகிறது .அவ்வளவு தான்.

இதை தவிர கடந்த வாரம்,இரண்டு வார்த்திற்கு முன்,கடந்த மாதம் வெளியான படங்களை அடையாளம் காட்டும் வசதியும் இருக்கிறது.அடுத்த வாரம் வரும் படங்களையும் அறியலாம்.

அதே போல புத்தக பகுதியில் புத்தக அட்டையில் கிளிக் செய்தால் அவை வெளியான நாள் மற்றும் அமேசானில் வாங்குவதற்கான இணைப்பு இருக்கிறது.பாடல்கள் ,மற்றும் வீடியோ கேமிலும் இதே போன்ற இணைப்புகள் வரவேற்‌கின்றன.

இமெயில் முகவ்ரியை சம‌ர்பித்தால் புதிய படங்கள் அல்லது பாடல்கள் ,புத்தகங்கள் வெளியாகும் போது தகவல் தெரிவிக்கும் சேவையையும் இந்த தளம் வழங்குகிறது.

ப‌டங்களை எடுத்து கொண்டால் மூவி டேட்டாபேஸ் விவரம்,விமர்சனம், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் குறிப்புகள்,ரசிகர்களின் ரேட்டிங் என விலாவரியாக தகவல்களை திரட்டித்தந்து திணறடிக்கும் தளங்கள் எல்லாம் இருக்கின்றன.பாடல்களூக்கும்,புத்தகங்களுக்கும் விதவிதமான வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன.எல்லா தளங்களுமே விவரங்கள் மூச்சு முட்ட வைத்துவிடும்.

ஆனால் வாட்ஸ் அவுட் தளம் அப்படியெல்லாம் திணற வைக்காமல் என்ன படம் ,என்ன புத்தகம்,என்ன பாடல் புதிதாக வந்துள்ளன என்பதை மட்டும் அடையாளம் காட்டி ஒதுங்கி கொள்கிறது.இந்த எளிமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

வாட்ஸ் அவுட அமெரிக்க தளம் என்பது மட்டும் தான் கொஞ்சம் ஏமாற்றம்.நம்மூருக்கும் இதே போன்ற தளம் உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

இணையதள‌ முகவரி:http://whatsoutt.com/

பாட்டு கேட்டால் டிஷர்ட் தரும் இணையதளம்.

பாண்டேராவோ,லாஸ்ட்.எப் எம்மிலோ அல்லது ஸ்பாட்டிபையிலோ எதில் வேண்டுமானாலும் பாட்டு கேளுங்கள் அந்த தகவலை மட்டும் எங்களிடம் சொல்லுங்கள் உங்கள் அபிமான இசைக்குழுவின் ட் ஷர்ட்களை அனுப்பி வைக்கிறோம் என்று சொல்கிறது ஷர்டிபை இணையதளம்.

பாண்டோரா ,ஸ்பாட்டிபை போன்ற தளங்களை இணைய வானொலி என்றும் வர்ணிக்கலாம்.பாடல் பரிந்துரை தளங்கள் என்றும் சொல்லலாம்.பிடித்தமான மற்றும் புதிய பாடல்களை கேட்டு ரசிக்க உதவும் இந்த தளங்கள் இசை பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன.

ஷர்டிபை இசை பிரியர்களை மனதில் கொண்டு துவக்கப்பட்டுள்ள தளம் என்றாலும் இந்த தளங்களோடு எந்த விததிதிலும் போட்டி போடுவது அல்ல இதன் நோக்கம்.மாறாக ரசிகர்களுக்கு அவர்களின் அபிமான இசைக்குழுவின் சார்பில் டிஷர்ட்களை அனுப்பி வைக்கும் சேவையை மட்டுமே இந்த தளம் வழங்குகிறது.

அந்த வகையில் இசைக்குழுவிற்கும் ரசிகர்களுக்கும் இடையே பாலமாக விளங்குகிறது.

டிஷர்ட்கள் அபிமானத்தின் வெளிப்பாடாக அமையக்கூடியவை அல்லவா?நிறுனவங்கள் மற்றும் இசை குழுக்கள் போன்றவை நிதி திரட்டவும் விளம்பர்த்துக்காகவும் பிரத்யேக டி ஷர்ட்களை வெளியிடுவதுண்டு.இவை இலவசமாகவும் கிடைக்கும்.விற்கப்படுவதும் உண்டு.படம் மற்றும் வாசகம் பொறிக்கப்பட்ட இத்தகைய டி ஷர்ட்களை ரசிகர்களும் விரும்பி அணிந்து தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்துவதுண்டு.

டி ஷர்ட்களை வாங்குவதற்கோ பெறுவதற்கோ பலவிதமான வழிகள் இருக்கின்றன.அவற்றோடு இன்னொரு சுலபமான சுவாரஸ்யமான வழியாக ஷர்டிபை அறிமுகமாகியுள்ளது.

ரசிகர்கள் எந்த பாடகர் அல்லது இசைக்குழுவின் பாடல்களை அதிகம் கேட்டு ரசிக்கின்றனரோ அந்த பாடகர் அல்லது இசைக்குழுவின் டி ஷர்ட்டை இந்த தளம் அனுப்பி வைக்கிறது.இலவசமாக இல்லை.கட்டணம் செலுத்த வேண்டும்.மூன்றுவிதமான சந்தா திட்டங்கள் இருக்கின்றன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு எந்த சேவையை பயன்படுத்து பாடல் கேட்கின்றனர் என்ப்தை குறிப்பிட்டால் அந்த சேவையில் கேட்கப்படும் பாடல்களை கவனித்து அதனடிப்படையில் பிடித்தமான பாடகர்களை அனுமானித்து டி ஷ்ர்ட்டை அனுப்பி வைக்கும்.டி ஷர்ட்டுக்கான தொகை சம்பந்தப்பட்ட இசைக்குழுவுக்கே நேரடியாக அனுப்பி வைத்து விடுவதாக இந்த தளம் சொல்கிறது.

இடைத்தர்கர்கள் இல்லாமல் நேரடியாக இசைக்குழுவுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பினால் இந்த சேவையை நாடலாம்.

அமெரிக்க ரசிகர்களை மனதில் கொண்டு துவக்கப்பட்டுள்ள தளம் என்ற போதிலும் எப்படி எல்லாம் புதுசாக யோசித்து சேவைகளை உருவாக்குகின்றனர் என்ற வியப்பை ஏற்படுத்தும் தளம்.மிகப்பெரிய சேவை எல்லாம் கிடையாது.எளிமையான சேவை.ஆனால் இசைப்பிரியர்களுக்கு சுவாரஸ்யமானது.

இணையதள முகவரி;http://www.shirtify.fm/

spare

பயன்ப‌டுத்த முடியாத டிக்கெட்களை விற்க ஒரு இணையதளம்.

விளையாட்டு போட்டிகள்,இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அடிக்கடி செல்லும் வழ‌க்கம் கொண்டவ‌ர்கள் ஸ்பேர் டிக்கெட்(உபரி டிக்கெட்) இணையதளத்தை தவறாமல் குறித்து வைத்து கொள்ள வேண்டும்.அது அவர்களுக்கும் ந‌ல்லது.அந்த தளத்திற்கும் நல்லது.

பெயருக்கேற்ப இந்த தளம் உபரியாக உள்ள டிக்கெட்டை உரிய நேரத்தில் பைசல் செய்வதற்கான இணைய மேடையாக உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது நம்மிடம் உள்ள ஆனால் நம்மால் பயன்ப‌டுத்த முடியாத டிக்கெட்களை அவற்றை பயன்படுத்தகூடியவர்களிடம் தருவதற்கான வழியாக இந்த தளம் விளங்குகிறது.

இத்தகைய அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.சினிமாவுக்கோ,ஐபிஎல் போட்டிக்கோ டிக்கெட் வாங்கியிருப்போம்,திடீரென போக முடியாத சூழ்நிலை ஏர்பட்டு விடும்.அப்போது என்ன செய்வோம்.வேறு யாரிடமாவ‌து அந்த டிக்கெட்டை கொடுத்து விட நினைப்போம்.

சில நேரங்களில் நண்பரோ அல்லது தெரிந்தவரோ அட்டா நானும் டிக்கெட்டுக்காக அலைந்து கொண்டிருந்தேன் என ஆனந்தமாக வாங்கி கொள்ளலாம்.பல நேரங்களில் தெரிந்தவர் நண்பர்கள்,தெரியாதவர்கள் என யாரை கேட்டாலும் பயன் இருக்காது.

இந்த பிரச்ச‌னைக்கு தீர்வாக தான் ஸ்பேர் டிக்கெட் தளம் உருவாகப்பட்டுள்ளது.

யாரிடம் பய‌ன்படுத்த முடியாத உபரி டிக்கெட் இருக்கிறதோ அவர்கள் இந்த தளத்தில் அந்த டிக்கெட்டை பட்டியலிடலாம்.யாருக்கு இவை தேவையோ அவர்கள் தொடர்பு கொண்டு அந்த டிக்கேட்டை வாங்கி கொள்ளலாம்.

பல‌ருக்கும் போன செய்து தேவையா தேவையா என கேட்டு கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை.டிக்கெட்டை பட்டியலிட்டு விட்டு காத்திருக்கலாம்.அதே நேரத்தில் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் கிடைக்காமல் அலைபாய்ந்து கொண்டிருப்பவர்கள் நேராக இந்த‌ தளத்தில் வந்து தங்களுக்கு தேவையான டிக்கெட் இருக்கிறதா என பார்த்து கொள்ளலாம்.

டிக்கெட்களை சம்ர்பிப்பவர்கள் அவற்றுக்கு தள்ளுபடி த‌ர விரும்பினால் அதனையும் குறிப்பிடலாம்.

டிக்கெட்கள் வீணாக கூடாது என நினைப்பவ‌ர்களுக்கும் சரி ,குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான டிக்கெட் கிடைகாத என ஏங்கி கொண்டிருப்பவருக்கும் சரி இந்த தளம் ஒரு வரப்பிரசாதம் தான்.ஆனால் ஒன்று கணிசமான அளவு பயனாளிகள் சேர வேண்டும்.இல்லை என்றால் கடை விரித்தோம் கொள்வார் இல்லை என்னும் நிலை ஏற்படலாம்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இப்படி உபரி டிக்கெட்டை தேவைப்படுவரிடம் விற்பதற்கான இணைய சேவைகள் நிரைய உள்ளன.இவ்வ‌ளவு ஏன் கையில் இருக்கும் டிக்கெட்களை ஏல தளமான இபேவில் பட்டியலிட்டால் கொத்தி கொண்டு போய் விடுவார்கள்.

இந்த வகையில் இந்திய சந்தியில் அறிமுகமாகியுள்ள முதல் தளமாக இந்தனை குறிப்பிடலாம்.முதல் க‌ட்டமாக‌ மும்பை,டெல்லி,புனா போன்ற‌ நகரங்களில் அறிமுகம் செய்துள்ளனர்.அடுத்த கட்டமாக் சென்னை உள்ளிட்ட ந‌கரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படலாம்.

இந்த தளத்தில் உள்ள மற்றொரு சிற‌ப்பம்சம் பயனாளிகள் தாங்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை குறிப்பிட்டால்,அவ‌ற்றுக்கான உபரி டிக்கெட் சம‌ர்பிக்கப்படும் போது அது பற்றிய தகவல் உடனே தெரிவிக்கப்படும்.மற்றவர்களை முந்திக்கொண்டு டிக்கெட்களை வாங்கி கொள்ளலாம்.

நடைமுறையில் பயன் தரக்கூடிய தளங்களின் வரிசையில் இந்த தளத்திற்கு நல்வரவு கூறலாம்.

இணையதள முகவ‌ரி;http://spareticket.in/