Tag Archives: தேடல்

இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம்

halal1.jpegஇண்டெர்நெட் எல்லோருக்குமானது தான்.ஆனால் திறந்தமனம் கொண்டவர்களுக்கு மிகவுமேற்றது.மற்றபடி குறிப்பிட்ட நெறியின்படி தான் வாழ வேண்டும் என நினப்பவர்களுக்கு இண்டெர்நெட் சில நேரங்களில் சங்கடத்தை தரக்கூடும்.
இண்டெர்நெட்டின் எல்லையில்லா தன்மையும் அதன் வரம்புகளற்ற தன்மையுமே அதன் பலபவீனமாக அமைந்து விடுவதுண்டு.

எத‌ற்கு இந்த‌ முன்னுறை என்றால் இஸ்லாமிய‌ர்க‌ளுக்கான‌ தேடிய‌ந்திர‌ம் ஒன்றை அறிமுக‌ம் செய்ய‌த்தான்.ஐய‌ம்ஹ‌லால் என்னும் பெய‌ரில் அந்த‌ தேடிய‌ந்திர‌ம் அறிமுக‌மாகியுள்ளது.

ட‌ச்சு க‌ம்பெனி ஒன்று இத‌னை உருவாக்கியுள்ள‌து.இண்டெர்நெட்டில் ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ளோடு ஆபாடச‌மான‌ ச‌ங்க‌திக‌ளும் உள்ள‌ன‌. உண்மையான‌ இஸ்லாமிய‌ர்க‌ள் இத‌னை விரும்பமாட்டார்க‌ள்.அத‌ற்காக‌ இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்த‌ம‌லும் இருக்க‌ முடிய‌து.என்ன‌ க‌வ‌ன‌த்தோடு ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்.

எத்த‌னை தான் க‌வ‌ன‌மாக‌ இருந்தாலும் ச‌ம‌ய‌ங்க‌ளில் வேண்டாத‌ த‌க‌வ‌ல்க‌ளும் ஆபாச‌மான‌ ப‌ட‌ங்க‌ளும் எட்டிப்பார்த்து ச‌ங்க‌ட‌த்தை த‌ருவ‌துண்டு.

இந்த‌ ச‌ங்க‌ட‌த்தை த‌விர்த்து ந‌ல்ல‌வித‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டுமே த‌ருவ‌து தான் ஐய‌ம்ஹலால் தேடிய‌ந்திர‌த்தின் நோக்க‌ம்.இஸ்லாமிய‌ர்க‌ள் த‌வ‌று என்று க‌ருத‌க்கூடிய‌ ப‌த‌ங்க‌ளை த‌விர்த்து விட்டு தேட‌ல் முடிவுக‌ளை இது ப‌டியலிட்டு த‌ருவ‌தாக‌ கூறுகிற‌து.

என‌வே இஸ்லாமிய‌ர்க‌ள் இதில் ச‌ங்க‌ட‌மில்லாம‌ல் தேட‌லாம்.

இது போன்ற‌ த‌னி தேடிய‌ந்திர‌ம் அவ‌சிய‌மா என‌ சில‌ர் நினைக்க‌லாம்.அவ‌ர‌வ‌ர் தேவை ம‌ற்றும் ம‌ன‌நிலையை பொருத்த‌து இது.

சிறுவ‌ர்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ த‌க‌வ‌ல்க‌ளை வ‌டிகட்டும் வ‌ச‌தியை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து போல‌ ஒருவ‌ரின் உண‌ர்வு சார்ந்த‌ வ‌டிக‌ட்ட‌லை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தும் ச‌ரியே.

என் த‌னிப்ப‌ட்ட‌ அனுப‌வ‌த்தை சொல்வதாயின் ப‌ல‌முறை ப‌ணிச‌ர்ந்த‌ புகைப்ப‌ட‌ங‌க்ளை தேடும் போது குறிச்சொற்க‌ளுக்கு ச‌ற்றும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ ஆபாச‌ புகைப்ப‌ட‌ங‌க‌ள் வ‌ந்து நிற்ப‌தை பார்த்திருக்கிறேன். இப்ப‌டி ஆபாச‌ ப‌ட‌ங்க‌ள் வடிகட்டப்பட்டு தேவையான‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்றுவ‌து ந‌ல்லாது தானே.

————
link;
http://www.imhalal.com/

கூகுல் ஜோசியம்

laptopகூகுலுக்கு தெரியாத விஷயம் உலகத்தில் இருக்கிறதா என்ன? எந்த கேள்விக்கு பதில் வேண்டும் என்றாலும் கூகுலில் தேடலாம் என்பது தெரிந்த விஷயம் தான்.
அப்ப‌டியே க‌ட‌ந்த‌ ஆண்டு நொடித்துப்போன‌ உல‌க‌ பொருளாதார‌ம் இப்போது எப்ப‌டி இருக்கிற‌து என்னும் கேள்விக்கு ப‌தில் தேவை என்றாலும் கூகுலிட‌மே கேட்க‌லாம் தெரியுமா?

இந்த‌ கேள்விக்கான கூகுலின் ப‌தில் ம‌கிழ்ச்சியை த‌ர‌க்கூடிய‌து.பொருளாதார‌ சீர்குலைவை அடுத்து உண்டான‌ தேக்க‌நிலை சீராக‌த்துவ‌ங்கியிருக்கிற‌து என்ப‌தே அந்த ப‌தில்.

கூகுல் என்ன பொருளாதார நிபுணரா?அதனால் எப்படி பொருளாதார நிலை குறித்த் பதில சொல்ல முடியும்?

எல்லாம் ஒரு கணிப்பு தான். தேடப்படுவதை வைத்து சொல்லப்படும் கணிப்பு.

கூகுல் முன்ன‌ணி தேடிய‌ந்திர‌மாக‌ இருப்ப‌தும் ப‌ல‌ரும் தேட‌ல் என்றால் கூகுலையே நினைப்ப‌தும் நீங்க‌ள் அறிந்திருக்க‌லாம்.இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல் தேவைப்ப‌டும் போது பெரும்பால‌னோர் நாடுவது கூகுலைதான்.அது ம‌ட்டுமல்ல‌ முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள் உல‌கை உலுக்கும் போது அவை தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை தேட்ட‌வும் கூகுலை தான் ப‌ய‌ன்ப‌டுத்துகிண்ற‌ன‌ர்.

உதார‌ண‌த்திற்கு பாப் இசை ம‌ன்ன‌ன் மைக்கேல் ஜாக்ஸ‌ன் ம‌ர‌ன‌ம‌டைந்த‌ போது ஜாக்ஸ‌ன் தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ள் கூகுலில் அதிக‌ம் தேட‌ப்ப‌ட்ட‌ன‌. ப‌ன்றிக்காய்ச்சல் நோய் ப‌ர‌வ‌த்துவ‌ங்கிய‌ போது இந்த‌ நோய் ப‌ற்றி விடாம‌ல் தேடிய‌து இண்டெர்நெட் ச‌மூக‌ம்.

கூகுலில் அதிக‌ம் தேட‌ப்படும் ப‌த‌ங்க‌ளை வைத்தே பிர‌ப‌லமாக‌ திக‌ழ்வ‌து யார் என்று ஊகித்துவிட‌ முடியும்.அதே போல‌ உல‌கில் நில‌வும் போக்குக‌ளையும் கூகுலில் தேட‌ப்ப‌டும் ப‌த‌ங்க‌ள் மூல‌மே ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியும்.

இதே அடிப்படையில் தான் த‌ற்போது பொருளாதார‌ தேக்க‌த்தின் பாதிப்பு உல‌கிலும் ,குறிப்பாக‌ அமெரிக்காவிலும் குறைந்திருப்ப‌தாக‌ க‌ணிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

பொருளாதார‌ சீர்குலைவின் பாதிப்பு உச்ச‌த்தில் இருந்த‌போது எங்கு பார்த்தாலும் ஆட்குறைப்பு ப‌ற்றியும் நிறுவ‌ன‌ங்க‌ள் இழுத்து மூட‌ப்ப‌டுவ‌து ப‌ற்றியும் தான் பேச்சாக‌ இருந்த‌து.அப்போது வேலை வாய்ப்பு ப‌ற்றியே கூகுலில் அதிக‌ம் தேட‌ப்ப‌ட்ட‌து.

ஆனால் இப்போது கூகுலில் தேட‌ப்ப‌டும் சொற்க‌ளை பார்த்தால் வேலை வாய்ப்பு, ம‌ற்றும் அர‌சு உத‌வுக்கான‌ தேட‌ல் குறைந்திருக்கிற‌தாம்.அதே நேர‌த்தில் வீடு, ம‌ற்றும் வீட்டுக்க‌ட‌ன் தொட‌ர்பான‌ தேட‌ல் ஒர‌ல‌வுக்கு அதிக‌ரித்திருக்கிற‌தாம்.

இவ‌ற்றை க‌ருத்தில் கொண்டு பார்த்தால் பொருளாதார‌ தேக்க‌நிலையிலிருந்து அமெரிக்கா மிள‌த்துவ‌ங்கியிருக்கிற‌து என்றுதானே பொருள்.கூகுலின் முத‌ன்மை பொருளாதார‌ நிபுண‌ரான‌ ஹால் வ‌ரியான் இப்ப‌டி தான் ந‌ம்பிக்கையோடு கூறுகிறார்.

கூகுல் தேட‌ல் முடிவுக‌ள் தொற்று நோய் ப‌ர‌வுவ‌து தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ளையும் தெரிந்து கொள்ள‌ உதுவுகிற‌து என்ப‌து கூடுத‌லான‌ த‌க‌வ‌ல்.

கூகுலின் கை ஓங்குகிறது

google1கூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது.

கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளது என்பதே அந்த செய்தி.2004 ம் ஆண்டில் கூகுல் காப்புரிமை கோரி விண்ணப்பித்தது. 5 ஆண்டு பரிசிலனைக்கு பிறகு த‌ற்போது காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு இணையதள‌த்தின் பின்னே உள்ள புதுமையான கருத்தாக்கம்,இணைய சேவை போன்றவற்றுக்கு காப்புரிமை கோரப்படுவதும் வழங்கப்படுவதும் வழக்கமானது தான். ஆனால் முகப்பு பக்கத்திற்கு காப்புரிமை கோரப்பட்டு வழ‌ங்கப்படுவது இதுவே முதல் முறை.

ச‌ரி இத‌னால் கூகுலுக்கு என்ன‌ லாப‌ம் என்று கேட்கலாம்.கூகுலுக்கு என்ன‌ லாப‌ம் என்று கேட்ப‌தைவிட‌ ம‌ற்ற‌ தேடிய‌ந்திர‌ங்க‌ளுக்கு என்ன‌ பாதிப்பு என்று யோசித்துப்பார்த்தால் இந்த‌ காப்புரிமை எத்த‌னை முக்கிய‌மான‌து என்று புரிந்து விடும்.

த‌மிழ் மொழியை பொருத்த‌வ‌ரை ‘முருக‌ன் என்றால் அழகு’ என்ப‌து போல‌ இண்டெர்நெட்டைப்பொருத்த‌வ‌ரை கூகுல் என்றால் அழ‌கு என்று அர்த்த‌ம்.அதாவ‌து எளிமை தான் அழ‌கு என்று எடுத்துக்கொண்டால் கூகுலின் முக‌ப்பு ப‌க்க‌த்தின் முன் வேறு எந்த‌ இணைய‌தள‌மும் நிற்க‌ முடியாது.எளிமையோடு தெளிவையும் சேர்த்துக்கொண்டால் கூகுலின் முக‌ப்பு ப‌க்க‌ம் தான் பேர‌ழ‌கான‌து.

மேக‌ங்க‌ள‌ற்ற‌ வெண்மையான‌ வான‌ம் போன்ற‌ அழ‌கான‌ பின்ன‌ணியில்,ந‌டுவே ஒரே ஒரு கட்ட‌ம் .அத‌ன் கீழே தேட‌லுக்கான‌ குறிப்பு.அவ்வள‌வு தான் கூலின் முக‌ப்ப‌ ப‌க்க‌ம். ப‌க்கா எளிமை என‌றாலும் நெத்திய‌டி ர‌க‌ம். த‌க‌வ‌ல்க‌லை தேட‌ வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வேறு எந்த‌ க‌வ‌ன‌ப்பிச‌கும் இல்லாம‌ல் வ‌ந்தோமா தேடினோமா என்று போய் கொண்டே இருக்க‌லாம். வ‌டிவ‌மைப்பு என்றால் மெகா பட்ஜெட் படங்கள் போல ஏக‌ப்பட்ட கிர‌பிக்ஸ் ம‌ற்றும் இத‌ர‌ அம்ச‌ங்க‌ளோடு ப‌டு அம‌ர்க்க‌ள‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று க‌ருத‌ப்ப‌ட்ட‌ கால‌த்தில் சும்மா எளிமையான‌ முக‌ப்பு ப‌க்க‌த்தின் மூல‌ம் வ‌டிவ‌மைப்பு இல‌க்கண‌த்தையே மாற்றிய‌மைத்த‌து.

கூகுலின் வெற்றிக்கு பிறகு எளிமை எனபது இணையதளத்திற்கான வடிவமைப்பு அம்சங்களில் முக்கிய விஷயமாகிவிட்டது.அது மாட்டும‌ல்லாம‌ல் தேடியந்திர‌ம் என்றால் அத‌ன் முக‌ப்பு ப‌க்க‌ம் கூகுலைப்போல‌ இருந்தாக‌ வேண்டும் என்ப‌து எழுத‌ப்ப‌டாத‌ விதியாகி விட்ட‌து.

ஆஸ்க் தேடிய‌ந்திர‌த்திலிருந்து சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் துவ‌க்க‌ப்ப‌டட்ட‌ cuiல் வ‌ரை எந்த‌ தேடிய‌ந்திர‌மாக‌ இருந்தாலும் அத‌ன் முக‌ப்பு ப‌க்க‌ம் கூகுலை போல‌வே இருக்கும்.

பிர‌ச்ச்னை இது தான். இப்போது கூகுல் முக‌ப்பு ப‌க்க‌த்திற்கு காப்புரிமை வாங்கியிருப்ப்தால் புதிதாக‌ துவ‌ங்க‌ப்ப‌டும் தேடிய‌ந்திர‌ங்க‌ள் வேறு மாதிரியான‌ முக‌ப்பு ப‌க்க‌த்தை உருவாக்க‌ வேண்டும். ஏற்க‌ன‌வே உள்ள‌ யாகூ போன்ற‌ தேடிய‌ந்திர‌ங்க‌ளும் பாதிக்க‌ப்ப‌ட‌லாம்.

ஒரு தேடிய‌ந்திர‌த்தின் வெற்றிக்கு கூகுல் பாணி முக்ப்பு ப‌க்க‌ம் மிக‌வும் அவ‌சிய‌ம் என்ப‌தால் இனி கூகுல் ம‌ட்டுமே அத‌னை ப‌ய‌ன்ப‌டுத்த‌முடியும்.

ஏற்க‌ன‌வே தேட‌லில் கூகுலின் அதிக்க‌ம் நில‌வும் நிலையில் இது கூகுலுக்கு எதிர்ப்பே இல்லாம‌ல் செய்துவிட‌லாம்.