Tag Archives: websites

உங்களுக்கு தெரியுமா? கேட்டு அசத்து இணையதளம்.

அப்படியே மிதமான வியப்பில் ஆழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா?

டிட் யூ நோ இணையதளம் இத்தகைய வியப்பில் ஆழ்த்தக்கூடியது.

சில தகவல்களை படித்ததும் நம்ப முடியாத ஆச்சர்யம் உண்டாகும் அல்லவா? அத்தகைய தகவல்களை அடுக்கிறடு இந்த தளம்.

உதாரணத்திற்கு உலகிலேயே எரிமலைகள் இல்லாத ஒரே கண்டம் ஆஸ்திரேலியா என்பது உங்களுக்கு தெரியுமா?

அதே போல பாடும் பறவை என வர்ணிக்கப்படும் ஹம்மிங்பேர்டு தான் பின்னோக்கி பறக்கும் திறன் படைத்த ஒரே பறவை என்பது உங்களுக்கு தெரியுமா?

இரண்டு ஐ எழுத்துக்களை கொண்ட ஒரே ஆங்கில வார்த்தை பனிசறுக்கை குறிக்கும் ஸ்கையிங் என்பது தெரியுமா?

குதிக்க முடியாத ஒரே பாலூட்டி யானை தான்,வெளியே விதை கொண்ட ஒரே பழம் ஸ்டிராபெரி,ஹவாய் மொழியில் 12 எழுத்துக்களே உள்ளன,85 சதவீத தாவிர உயிர்கள் கடலில் வாழ்கின்றன,ஆஸ்திரேலியா முதலில் நியூ ஹாலன்ட் என்று அழைக்கப்பட்டது என வரிசையாக வியப்பூட்டும் தகவல்கள் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன.

எல்லாமே இது வரை பெரும்பாலானோர் அறிந்திறதவை.இப்போது அறியும் போது அப்படியா என கேட்க வைப்பவை.

முக்காலமும் உணர்ந்த என்று சொல்வதை போல எல்லா தகவல்கலுமே உலக நடைமுறை அல்லது இயல்பு சார்ந்தவை.

உங்களுக்கு தெரியுமா என்னு கேள்விக்கு கீழே ,இந்த தகவல்கள் வரிசையாக இடம் பெறுகின்றன.

இவற்றுக்கு அருகிலேயே வரலாறு,நாடுகள்,விலங்குகள், என பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆச்சர்ய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

படிப்பதற்கு எளிதானது.அதே நேரத்தில் மிகவும் சுவாரஸ்யமானவை.நேரம் போவதே தெரியாமல் படித்து வியக்கலாம்.ஆச்சர்யமுட்டும் தகவல்களோடு பல அரிய விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

பெற்றோர்கள் தாராளமாக இந்த தளத்தை தங்கள் பிள்ளகளுக்கு பரிந்துரைக்கலாம்.

வியப்பதற்கு மேலும் சில விவரங்கள்.;

ஆகஸ்டில் தான் அதிக குழந்தைகள் பிறக்கின்றன,நெருபுகோழியின் கண்கள் அதன் மூளையை விட பெரிதானவை,எச்சிலோடு கலக்காவிடில் உணவின் சுவையை உணர் முடியாது,ஸ்டிராபெரியைவிட் அஎலுமிச்சையில் அதிக சர்க்கரை உள்ளது,பறவைகள் உணவை விழுங்க புவியீர்ப்பு விசை தேவை….

இந்த தளம் எளிமையான முறையில் ஆச்சர்யம் தரும் தகவல்களை பட்டியலிடுகிறது என்றால் அம்யூசிங்க் ஃபேக்ட்ஸ் இணையதளம் வியப்பூட்டும் விநோத தகவல்களுக்கான வலைவாசலாக விளங்குகிறது என்று சொல்லலாம்.

முகப்பு பக்கத்தில் இன்றைய வியப்பூட்டும் தகவல் எனனும் தலைப்பின் கீழ் விந்தையான தகவலை முன் வைக்கும் இந்த தளம் விந்தையான செய்திகள்,விந்தை விநாடி வினா,விந்தை காட்சிகள் என பல்வேறு தலைப்புகளின் கீழ் விதவிதமான விவரங்களை அளிக்கிறது.

செய்திகள் பகுதியில் நாளிதழ்களில் வெளியாகும் விந்தையான செய்திகளை படித்து ரசிக்கலாம்.இவற்றை தவிர தனி தனி தலைப்புகளின் கீழ் விவரங்களை படித்தும் வியப்படையலாம்.

உறுப்பினராகி சக உறுப்பினர்களின் நட்பையும் வளர்த்து கொள்ளலாம்.

என்றாலும் விவரங்களுக்கான உண்மையான வலைவாசல் என்றால் ஃபேக்ட்மான்ஸ்டர் இணையதளத்தை தான் சொல்ல வேண்டும்.

தகவல் மற்றும் விவரங்களுக்கான கையேடாக அமைந்துள்ள இந்த தளத்தில் தகவல்கள் பல்வேறு தலைப்புகளாக தொகுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு தலைப்பிலும் துணை தலைப்புகளோடு விவரங்கள் விரிகின்றன.

இணையதள முகவரி;http://www.did-you-knows.com/

http://www.factmonster.com/

http://www.amusingfacts.com/

icheckmovies

திரைப்பட ரசிகர்களுக்கான சூப்பர் இணையதளம்.

நான் பார்த்த ரசித்த திரைப்படங்கள்.

இப்படி ஒரு பட்டியலை உருவாக்கி கொள்ளவும் அந்த பட்டியலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது ஐ செக் மூவீஸ் இணையதளம்.பட்டியலை உருவாக்கி கொண்ட பிறகு இந்த தளத்தில் திரைப்பட ரசிகர்கள் தெரிவிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.பெறுவதற்கு பட்டங்களும் சூடிக்கொள்ள மகுடங்களும் இருக்கின்றன.

இந்த தளத்தை பொருத்தவரை ரசிகர்கள் தான் ராஜா.பொதுவாக திரைப்பட தளங்களில் பார்க்க கூடிய டாப் டென் படங்களின் பட்டியல் போன்றவை இதில் இருந்தாலும் எல்லாமே ரசிகர்கள் சார்ந்தவை.

அடிப்படையில் இந்த தளம் பார்த்த திரைப்படங்களை குறித்து வைப்பதற்காக!இதற்கு முதலில் உறுப்பினராக சேர வேண்டும்.அதன் பின் பார்க்கும் படங்களை பார்த்தாச்சு என டிக் செய்து தங்களுக்கான பட்டியலில் சேர்த்து கொள்ள வேண்டியது தான்.

இப்படி சேர்த்து கொள்வது மிகவும் சுலபமானது.காரணம் மிகச்சிறந்தபடங்கள்,புதிய படங்கள் என பலவித தலைப்புகளில் திரைபடங்களின் பட்டியல் ரசிகர்களின் வசதிக்காக பரிந்துரைக்கப்படுகிறது.அவற்றில் இருந்து படத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த பட்டியல் எல்லாமே திரைப்பட தகவல் களஞ்சியம் என்று புகழப்படும் இண்டெர்நெட் மூவிடேட்டாபேசானா ஐஎம்டிபி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.இதன் பொருள் இந்த டேட்டாபேசில் உள்ள படங்களை மட்டுமே இங்கு சேர்க்க முடியும்.ஆனால் அநேகமாக எல்லா படங்களுமே இந்த டேட்டாபேசில் இணைக்கப்படுவதால் இதில் ஏதும் பிரச்சனையில்லை.

பட்டியலில் உள்ள நீங்கள் பார்த்த படத்தை கிளிக் செய்ததுமே வந்து நிற்கும் தகவல்களை பார்த்ததுமே திக்கு முக்காடி போக நேரிடும்.

காரணம்,திரைப்படம் வெளியான ஆண்டு,அந்த படம் பெற்றுள்ள தரவரிசை எண்,அதை எத்தனை பேர் பார்த்துள்ளனர்,எத்தனை பேர் தங்களுக்கு பிடித்த படம் என குறிப்பிட்டுள்ளனர் ,அந்த படம் பறிய உறுப்பினர்களின் கருத்துக்கள்,சமீபத்தில் பார்த்தவர்கள் ,படத்தின் வகை,என படம் தொடர்பான விவரங்கள் வரிசையாக இடம் பெறுகின்றன.எல்லாமே சக உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களின் அடைப்படையில் திரட்டப்பட்டவை.

பாக்ஸ் ஆபீஸ் வெற்றி,விளம்பர பரைசாற்றுதல்கள்,விமர்சகர்களின் கருத்து போன்றவற்றின் சார்பு இல்லாமல் உறுப்பினர்களின் ரசனையின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த விவரங்கள் குறிப்பிட்ட படத்தின் மதிப்பு என்ன என்பதை அழகாக உணர்த்திவிடக்கூடும்.

இந்த விவரங்களை பார்வையிட்ட படி அந்த படத்தை உங்கள் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.படத்தை பார்த்திருந்தால் பார்த்ததாக குறித்து கொள்ளலாம்.பார்க்கவில்லை என்றால் பார்க்க வேண்டும் என குறித்து கொள்ளலாம்.அதே போல படம் பிடித்திருந்தால் விரும்பிய படம் என்றோ அல்லது பிடிக்கவிட்டால் பிடிக்கவில்லை என்றோ குறித்து கொள்ளலாம்.

பார்த்த படங்களை பட்டியலிட துவங்கிய பின் அந்த விவரங்கள் ஒவ்வொன்றாக உறுப்பினரின் பக்கத்தில் இடம்பெற்று அவரது ரசனைக்கான பயோடேட்டா போல அமையும்.

எளிமையாக தோன்றினாலும் இந்த பக்கம் உறுப்பினர்கள் பற்றி சொல்லகூடிய தகவல்களும் பகிர்ந்து கொள்ளக்கூடிய விவரங்களும் தீவிர திரைப்பட ரசிகர்களை இந்த தளத்திலேயே மூழ்க வைத்துவிடும்.அப்படியே திரைப்பட ரசனை சார்ந்த புதிய அனுபவத்தில் திளக்க வைக்கும்.திரைப்பட ரசனை சார்ந்த புதிய நண்பர்களையும் தேடித்தரும்.நண்பர்கள் மூலம் நல்ல படங்களின் பரிந்துரையையும் பெற முடியும்.

அந்த அளவுக்கு விரிவான வசதிகளும் விதவிதமான பகிர்தல் அம்சங்களும் இருக்கின்றன.உறுப்பினர் பக்கத்தில் சமீபத்தில் பார்த்த படம்,இதுவரை பார்த்த படங்கள்,பார்த்ததில் பிடித்தவை ஆகிய விவரங்கள் இடம்பெறுகின்றன.உறுப்பினரின் திரைப்பட ரசனை ஜாதகம் என்று கூட சொல்லலாம்.

உறுப்பினர்கள் இந்த பக்கத்தை பரஸ்பரம் பார்க்க முடியும்.அதாவது சக உறுப்பினர்களின் பக்கத்தை பார்ப்பதற்கான் வாய்ப்பு உள்ளது.உறுப்பினர் பக்கத்தை பார்வையிடுவதும் சுவாரஸ்யமானதே.காரணம் குறிப்பிட்ட அந்த உறுப்பினர் எந்த எந்த படங்களை பார்த்துள்ளார்,அவற்றை ரசித்துள்ளார் என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.இப்படி பார்க்கும் போது ரசனை ஒத்து போகிறது என்று வைத்து கொள்ளுங்கள் உடனே அந்த அந்த உறுப்பினரை தொடர்பு கொண்டு நண்பாராக்கி கொள்ளலாம்.

நண்பராக நேரடியாக செய்தி அனுப்பலாம்.நண்பரான பின் இருவருடைய படங்களின் பட்டியலை ஒப்பிட்டு பார்க்கலாம்.பரஸ்பரம் பிடித்த படங்கள் பிடிக்காத படங்கள் என்றெல்லாம் அலசி ஆராயலாம்.அப்படியே படங்கள் பற்றிய விமர்சன கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.இதன் மூலம் திரைப்படம் சார்ந்த உரையாடலில் ஈடுபடலாம் என்பதோடு புதிய படங்கள் பற்றிய அறிமுகமும் கிடைக்கும்.

நண்பர்கள் போலவே இந்த தளத்தில் பக்கத்து வீட்டுகாரரகளையும் சந்திக்கலாம்.பக்கத்து வீட்டுக்காரர் என்றால் பார்த்த படங்களிலும் ரசனையிலும் உங்களை ஒத்திருப்பவர் என்று பொருள்.

உறுப்பினர்கள் உறுப்பினர் பக்கத்தில் தங்களை பற்றிய சுய அறிமுக குறிப்பையும் இடம் பெற வைக்கலாம்.உறுப்பினர் பக்கத்தில் ஒருவர் பார்த்த படங்களின் எண்ணிக்கை,ரசித்த படங்களின் எண்ணிக்கை,பிடிக்காத படங்களின் எண்ணிக்கை ,நண்பர்களின் எண்ணிக்க ஆகிய விவரங்களும் இடம் பெறுகின்றன.

உறுபினர்களுக்கு பல் வேறு விருதுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.அதோடு பகிர்ந்து கொள்ளும் படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப துணை நடிகர் ,நடிகர் போன்ற அந்தஸ்தும் வழங்கப்படுவது மேலும் சுவையானது.

பேஸ்புக் போன்ற தளங்கள் வழியே நட்பை வளர்த்து கொள்ளலாம்.பார்த்து ரசித்த திரைபடங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.ஆனால் இந்த தளம் முழுக்க முழுக்க திரைப்படம் சார்ந்த பகிர்தலை சாத்தியமாக்கி திரை ரசனை அடிப்படையில் நட்பை ஏற்படுத்தி தருகிறது.

அதே போல எந்த ஒரு திரைப்பட தொடர்பான கருத்தை அறிய விரும்பினாலும் இந்த தளம் கைகொடுக்கும்.குறிப்பிட்ட படத்தை கிளிக் செய்ததுமே அதை சமீபத்தில் எத்தனை பேர் பார்த்துள்ளனர் ,அவர்களின் விமர்சனம் என்ன போன்ற விவரங்கள் மூலமாக அந்த படம் பற்றிய ரசிகர்களின் மன உணர்வை கச்சிதமாக அறிந்து கொண்டு விடலாம்.

பழையபடங்களை இப்போதும் எத்தனை பேர் பார்க்கின்றனர்,புதிதாக வெளியான படத்தை எத்தனை பேர் ரசித்துள்ளனர் என்றெல்லாம் அறிய முடிவது உண்மையிலேயே சுவாரஸ்யமானது.

ஒரு படத்தை பற்றி இப்படி அலசி ஆராயும் போது அந்த படத்தை ரசித்தவர்களை அறிமுக செய்து கொண்டு நண்பர்களாக்கி கொள்ளலாம்.

——————

http://www.icheckmovies.com/

நன்றி நவிலல் இனையதளம்.

நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம் உற்சாகம் அளிக்கிறது.

நன்றி நவிலல் என்பது தனிப்பட்ட விஷயம்.எப்போது,யாருக்கு நன்றி சொல்வது என்று அவரவருக்கு தெரியாதா/இதற்காக எல்லாம் ஒரு இணைய தளமா என்று கேட்கலாம்?

ஆனால் எல்லாவற்றையும் இணையமயமாக்கி வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும் பல்வேறு இணைய சேவைகளின் வரிசையில் நன்றி சொல்வதையும் சுலபமாக்கி தரும் இந்த தளம் இணைய யுகத்தில் மிகவும் இயல்பானதே என்றே சொல்ல வேண்டும்.

தீபாவளி வாழ்த்துக்களையும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் சொல்ல வாழ்த்து அட்டைகள் இருப்பது போல தேங்க்யூஸ் என்னும் இந்த தளம் நன்றி சொல்வதற்காக அழகான அட்டைகளை உருவாக்கி வைத்திருக்கிறது.

நண்பர்கள்,உறவினர்கள்,சக ஊழியர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக நன்றி சொல்லுங்கள் என்று உற்சாகப்டுத்துகிறது இந்த தளம்.இவ்வளவு ஏன் பிரபலங்கலூக்கும்,உங்கள் வாழ்க்கையின் சிறப்பான நபர்களுக்கும் நன்றி தெரிவியுங்கள் என்கிறது.

அதுவும் சரி தான்,என்று ஒப்பு கொண்டு நன்றி நவிலலுக்கு தயாராகி விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்,நன்றி குறிப்பை உருவாக்கி கொள்ள வேண்டியது தான்.நன்றியை உருவாக்குங்கள் என்னும் பகுதியில் கிளிக் செய்தால் ஒரு கடித வாசகம் வந்து நிற்கிறது.நன்றிக்கான உடனடி வாசக அமைப்பான இதில் கோடிட்ட இடத்தை நிரப்புக என்பது போல இடை இடையே காலி இடம் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் நன்றிக்கு உரியவரின் பெயரையும்,நன்றி பெருக்கிற்கான காரணத்தையும்,மேலும் சில விவரங்களையும் பூர்த்தி செய்து நன்றி செய்தியை தயார் செய்து விடலாம்

ஆக யாருக்கு நன்றி சொல்வது என தீமானித்தால் போதும்,எப்படி சொல்வது,எந்த வாசகங்களை எழுதுவது என்றெல்லாம் யோசித்து குழம்ப வேண்டாம்.அதற்காக என்றே அழகான நன்றி படிவத்தை இந்த தளம் தயாராக வைத்திருக்கிறது.

நன்றி படிவத்தை பூர்த்தி செய்த பின் தான் இன்னும் சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.

நண்பருக்கா,உறவினருக்கா,சக ஊழியருக்கா, யாருக்க நன்றி தெரிவிக்கிறோம் என்பதையும் ,நன்றி உணர்வின் வெளிப்பாடா,பரிசளிப்பா எந்த வகையை சேர்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பொருத்தமானவற்ரை கிளிக் செய்த பின் நன்றி சொல்பவரின் புகைப்படத்தையும் இனைக்கலாம்.நன்றி சீட்டுக்கான விதவிதமான எழுத்துரு வடிவங்களும் இருக்கின்றன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.இந்த எழுத்துருக்கள் கைப்பட கடித்தம் எழுதியது போனர உணர்வை தர வல்லவை.

நன்றி குறிப்பை தயார் செய்த பின் பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் உரியவருக்கு அனுப்பி வைக்கலாம்.இமெயில் மூலமும் அனுப்பலாம்.

யோசித்து பார்த்தால் நாம் பலருக்கு நன்றி கடன் பட்டிருப்பது புரியும்.பல நேரங்களில் அவற்றை வெளிப்படுத்தவும் செய்திருப்போம்.சில நேரங்கள் தள்ளிப்போட்டிருப்போம்.மறந்திருப்போம்.சொல்லாமல் விட்டிருப்போம்.

ஆனால் நன்றி சொல்ல நினைத்ததும் அதனை செய்து முடிக்க இந்த தளம் உதவுகிறது.அதோடு யாருக்கெல்லாம் நன்றி சொல்லலாம் என யோசிக்கவும் வைக்கிறது.எதிரபாராத நேரத்தில் லிப்ட் கொடுத்து உதவிய நண்பருக்கி நன்றி சொல்லலாம்.நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்த நண்பருக்கு நன்றி சொல்லலாம்.காலையில் அத்தனை அவசரத்திலும் புன்னகையோடு வழியனுப்பும் மனைவிக்கு நன்றி சொல்லலாம்.

இந்தியாவுக்காக சாதனைகள் படைக்கும் சாசினுக்கு நன்றி சொல்லலாம்.பூங்கதவே பாடலி கேட்டு மெய்மறந்து ராஜாவுக்கு நன்றி சொல்லலாம். ஆதமாநாம் பாணியில் இத்துடனாவது விட்டதற்கு நன்றி என்று அரசியல்வாதிகளுக்கு நன்றி சொல்லலாம்.இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

நண்பர்கள் இந்த நன்றி செய்தியை பார்த்து வியந்து மகிழ்வார்கள் அல்லவா?அதிலும் மோசமான மனநிலையில் இருக்கும் போது இந்த நண்றி செய்தி எட்டிப்பார்த்தால் மனது லேசாகி விடாது?

நன்றி என்பது ஒரு நல் உணர்வு ,அதை தள்ளிப்போடாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.எங்கும் அன்பு பெருகட்டும்.

இணையதள முகவரி;http://thankuz.com/

rediro

இணையதளங்களை அறிய புதுமையான வழி.

இணையம் ஒரு தகவல் பெருங்கடல்.அந்த கடல் முன் எப்போதாவது நீங்கள் திசை தெரியாமல் குழம்பி தவித்தது உண்டா?அதாவது இப்போது எந்த இணையதளத்தை நோக்கி செல்லலாம் என்று தெரியாமல் திகைத்து நிற்பது!

இந்த குழப்பமும் திகைப்பும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.இணைய கத்துகுட்டிகளுக்கும் ஏற்படலாம்.இணையத்தின் மூளை முடுக்குகளை நன்கறிந்த இணைய கில்லாடிகளுக்கும் உண்டாகலாம்.

இத்தகைய ஒரு நிலை ஏற்படும் போது வழிகாட்டுவதற்காக என்றே ரெடிரோ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இப்போது எந்த தளத்தை காணலாம் என்னும் கேள்விக்கு இந்த தளமே முடிவு செய்து ஒரு புதிய இணையதளத்தை பரிந்துரைக்கிறது.

எந்த வகையை சேர்ந்தது என்றெல்லாம் பாராமல் சீட்டு குலுக்கி போடுவது போல இந்த தளம் ஏதாவது ஒரு புதிய இணையதளத்தை உத்தேசமாக தேர்வு செய்து அறிமுகம் செய்கிறது.இதன் முகப்பு பக்கத்தில் உள்ள’ கோ’ என்று கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்தால் போதும் ஏதாவது ஒரு தளத்திற்கு அழைத்து செல்கிறது.

இந்த தள்ம் வேண்டாம் என்றாள் இன்னொரு முறை கிளிக் செய்தால் வேறொரு புதிய இணையதளம் வந்து நிற்கிறது.தினமும் வருகை தந்தால் புதிய தளங்களை தெரிந்து கொள்ளலாம்.

புதிய இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ள ஏற்கனவே எண்ணற்ற தளங்கள் இல்லாமல் இல்லை.யாஹூ காலத்தில் அறிமுகமான கூல் சைட்ஸ் இணையதளத்தில் துவங்கி பல தளங்கள் புதிய தளங்களை அடையாளம் காட்டி வருகின்றன.பிரபலமான செய்தி தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் இதற்கென தனிப்பகுதியும் இருக்கின்றன.

உதாரணத்திற்கு பிபிசி தலத்தில் வெப்ஸ்கேப் பகுதி புதிய தளங்களை அறிமுகம் செய்கிறது.மேக் யூஸ் ஆப் வலைப்பதிவு தினந்தோறும் கூல் சைட்ஸ் என்ற பெயரில் புதிய தளங்களை அறிமுக செய்கிறது.இந்தியாவின் மும்பை மிரர் நாளிதழின் தொழிநுட்ப பகுதியில் புதிய தளங்கள் தொகுத்தளிக்கப்டுகிறது.

ஆனால் இவற்றில் எல்லாம் ஒவ்வொரு தளமாக பார்வையிட்டு உங்கள் விருப்பத்திற்கேற்ற தளத்தை தேர்வு செய்ய வேண்டும்.அந்த தளம் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றலாம்.இல்லை ஏமாற்றத்தை தரலாம்.ஏமாற்றம் ஏற்பட்டால் வேறு சில தளங்களை பார்வையிட வேண்டும்.

இதற்கு மாறாக தோராயமாக தேர்வு செய்யப்பட்டு முன வைக்கப்படும் இணையதளத்தை பார்வையிட முடிவது சுவாரஸ்யமானது தானே.இதில் உள்ள ஒரு புதிர் தன்மை ஏற்படுத்தும் ஆர்வமும் அதன் பிறகு பயனுள்ள தளத்தை பார்க்க நேர்ந்தால் ஒருவித திருப்தியும் உண்டாகத்தானே செய்யும்.அதைதான் இந்த தளம் சாத்தியமாக்குகிறது.

ரெடிரோவை பற்றி படிக்கும் போதே சாட்ரவுலட் தளம் பற்றியும் நினைவுக்கு வரலாம்.இணைய அரட்டை அதன் புதுமையையும் சுவாரஸ்யத்தையும் இழந்து அலுப்பை த்ந்து கொண்டிருந்த நிலையில் அதை தலைகிழாக பிரட்டிப்போடுவது போல வந்து சேர்ந்த சாட்ரவுலட் இணைய அரட்டையில் மீண்டும் சுவாரஸ்யத்தை உயிர் பெற வைத்தது.

ரவுலட் சூதாட்ட விளையாட்டு பாணியில் முன் பின் அறிமுகம் இல்லா யாரோ ஒருவரோடு வெப்கேம் மூலம் அரட்டை அடிக்க உதவுவதே இந்த தளத்தின் தனிச்சிறப்பு.யாருடன் அரட்டை அடிப்பது என நாம் முடிவு செய்ய வேண்டாம்.நல்லவர் ,வல்லவர் என்றெல்லாம் பார்த்து தேர்வு செய்ய வேண்டாம்.ஒவ்வொரு முறையும் யார்வது ஒருவரை சாட்ரவுலட்டே பரிந்துரை செய்யும்.

இணையய்தள அறிமுகத்திலும் இதே தன்மையை ரெடொரோ கொண்டு வந்துள்ளது.

இதில் உள்ள ஒரு புதிர் தன்மை ஏற்படுத்தும் ஆர்வமும் அதன் பிறகு பயனுள்ள தளத்தை பார்க்க நேர்ந்தால் ஒருவித திருப்தியும் உண்டாகத்தானே செய்யும்.அதைதான் இந்த தளம் சாத்தியமாக்குகிறது.

இதுவரை 70 தளங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இருந்து ஒவ்வொரு முறையும் ஒரு தளம் முன் வைக்கப்படுகிறது.இந்த பட்டியலில் இடம் பெறக்கூடிய புதிய தளங்களை இணையவாசிகளும் பரிந்துரை செய்யலாம்.

இணையதள முகவரி;http://www.rediro.com/

உலக போராட்டங்களை அறிய ஒரு இணையதளம்.

உலகம் போராடிக்கொண்டே இருக்கிறது.அதாவது, உலகில் எங்காவது ஒரு மூளையில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிற‌து.

ஆனால் எல்லா போராட்டங்களுமே உலகின் கவனத்தை ஈர்ப்பத்தில்லை.சில இருட்டடிப்பு செய்யப்படுகின்ற‌ன.சில மறைக்கப்படுகின்றன.பல அலட்சியப்படுத்தப்படுகின்றன.ஆனால் இவற்றை மீறி ஆர்ப்பாட்டம்,பேரணி,பொதுக்கூட்டம்,கிளர்ச்சி என மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கொண்டு தான் இருக்கின்றன.

நாளிதழ்களும் ,செய்தி தளங்களும் இந்த போராட்டங்களை பதிவு செய்து கொண்டு தான் இருக்கின்றன.போர்க்குணம் கொண்டவர்கள் அதாவ்து போராட்டத்தில் ஆர்வம் உள்ளவர்களும்,போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகிறவர்களும் போராட்ட செய்திகளை தேடிப்பிடித்து படித்தும் வருகின்றனர்.

ஆனால் போராட்ட செய்திகளை எல்லாம் ஒரே இடத்தில் காணவேண்டும் என நினைத்தால் அதற்கான வழி இது வரை இல்லை.போராட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் தளங்களாக தேடிச்செல்ல வேண்டும்.சினிமா செய்தி,உலக செய்தி ,தொழில்நுட்ப செய்தி என அனைத்து வகையான் செய்திகளையும் ஒரே இடத்தில் தொகுத்து தர பல தளங்கள் இருக்கும் நிலையில் போராட்டங்களுக்கு ஒரு தளம் இல்லாதது பெருங்குறை தான்.

இந்த குறையை போக்கும் வகையில் உலக் போராட்டங்களை ஒரே இடத்தில் தரும் தளமாக வேர்ல்டு அட் புரடஸ்ட் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள்,கிளர்ச்சிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் உலகில் அதற்கேற்ப உலகில் எங்கெல்லாம் போராட்டம் நடக்கின்றன்னவோ அந்த போராட்ட செய்திகளை தொகுத்தளிக்கிற‌து.

போராட்ட செய்திகளை பலவிதமாக தெரிந்து கொள்ளலாம்.முகப்பு பக்கத்தின் மேலேயே சமீப்பத்திய போராட்ட செய்திகள் செய்தி வரிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றன.அதன் கீழே உலக வரைபடம் போராட்ட வரைபடமாக விரிகிறது.வரைபடத்தில் எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டங்கள் தொடர்பான‌ செய்திகள் வருகின்ற‌ன.
வரைபடத்தில் சில நாடுகள் சிவப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.அதன் பொருள் அந்த நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் தொடர்பான செய்திகள் அதிக அளவில் உள்ள என்பதாகும்.ஒருவிதத்தில் போராட்டத்தின் தீவிரத்தையும் இவை உணர்த்தக்கூடும்.போராட்டம் தீவிரமாகும் போது செய்திகளும் அதிகமாக வெளியாக வாய்ப்புள்ளது தானே.
வரைபடத்தை சின்னதக்கியும் பெரிதாக்கியும் பார்க்கும் வசதியும் உள்ளது.அதே போல கீழே வந்தால் அங்குள்ல ஸ்லைடர் வசதியை கொண்டு பழைய போராட்டங்க‌ளை தேதிவாரியாக பார்க்கலாம்.

போராட்டத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த தளம் பேரூதவியாக இருக்கும்.ஆய்வு நோக்கிலும் இந்த தளம் பயன்படும்.மனித உரிமை ஆர்வளர்கள் அரசுகள் பொய சொல்கின்ரனவா என்று கன்கானிக்கவும் இந்த தளத்தை பய‌ன்ப‌டுத்த‌லாம்.

இப்போதைக்கு போராட்டங்கள் பற்றி நாளிதழ்களிலும் செய்தி தளங்களிலும் வெளியாகும் செய்திகளே இங்கு தொகுத்தளிக்கப்படுகின்றன.இருட்டடிப்பு செய்யப்படும் போராட்டங்கள் பற்றி அறிய வாய்ப்பில்லை.

எனவே போராட்ட விவரங்களை இணையவாசிகள் சம‌ர்பிக்க வாய்ப்பளித்தால் மேலும் சிற‌ப்பாக இருக்கும்.அதே போல போராட்டங்கள் தொடர்பான் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகள் கூட தொகுத்தளிக்கப்படலாம்.

எகிப்திலும்,அரபு நாடுகளிலும் நடைபெற்ற மக்கள் கிள‌ர்ச்சி டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் தானே உயிர் பெற்றன.

இதே போன்றதொரு போராட்டதளத்தினை இந்தியாவுக்காகவும் தமிழகத்துக்காகவும் ஊட உருவாக்கினால் நன்றாக இருக்கும்.

போராடங்களை அறிய இணைய‌ முகவரி http://worldatprotest.com/