ஆலோசனை கேட்க மேலும் ஒரு இணையதளம்.

முடிவெடுக்க முடியாமல் குழம்பித்தவிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி,அல்லது மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாமே என்று நினைத்தாலும் சரி நண்பர்களின் ஆலோசனையை கேட்டு முடிவெடுக்க உதவும் இணையதளங்கள் இருக்கின்றன.

பன்ல்.இட் இணையதளமும் இந்த வகையான ஆலோசனை கேட்பு இணையதளம் தான்.ஆனால் மற்ற ஆலோசனை கேட்பு தளங்களை விட மிகவும் எளிமையானதாக இருக்கிறது.

இந்த தளத்தின் மூலம் ஆலோசனை கேட்க முதலில் உறுப்பினராக வேண்டும்.உறுப்பினராவது மிகவும் எளிதானது தான்.

உறுப்பினரான பின் அலோசனை கேட்க விண்ணப்ப படிவம் போன்ற ஒரு பக்கம் வந்து நிற்கிறது.

அதில் ஆலோசனைக்கான தலைப்பை டைப் செய்துவிட்டு அதன் கீழே ஆலோசனைக்கான விளக்கத்தை இடம் பெற செய்து விட்டு அதற்கும் கீழே நண்பர்களின் இமயில் முகவரிகளை டைப் செய்து அவர்களுக்கு எல்லாம் அனுப்பி வைத்து கருத்து கேட்கலாம்.

நண்பர்களும் அதனை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்.அந்த கருத்துக்களை பரிசிலித்து அதனடிப்படையில் முடிவெடுத்து கொள்ளலாம்.

எந்த விஷயமாக இருந்தாலும் சரி கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது தான்.அதற்கான எளிய வழியாக‌ இந்த தளம் அமைந்துள்ளது.

ஆலோசனை கேட்க:http://funl.it/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *