டெக் டிக்ஷனரி -16 பேஸ்புக் அபிஷியல் (“Facebook official”) – பேஸ்புக் அறிவிப்பு

4f982db970a65ddb12727cdd8d1b2ad6எச்.பி.ஒ உங்களுக்குத்தெரிந்திருக்கலாம். (ஹோம் பாக்ஸ் ஆபிஸ் எனும் பிரபலமான அமெரிக்க சேனலில் சுருக்கம்). சரி, எப்.பி.ஒ தெரியுமா?

எப்.பி.ஒ என்பது பேஸ்புக் அபிஷியல் என்பதன் சுருக்கம். தமிழில் பேஸ்புக் அதிகாரி என்றோ, அதிகாரபூர்வ பேஸ்புக் என்றோ பொருள் கொள்வதைவிட பேஸ்புக் அறிவிப்பு என கொள்வதே சரியாக இருக்கும். இதன் ஆங்கில விளக்கத்தை தெரிந்து கொண்டால் இதற்கான காரணம் புரியும்.

ஜோடியாகிறவர்கள் அல்லது தம்பதியாக போகிறவர்கள் தங்கள் உறவு நிலையை பேஸ்புக்கில் அறிவிப்பது பேஸ்புக் அறிவிப்பாக கொள்ளப்படுகிறது. அதாவது உலகிற்கு தங்கள் உறவை பேஸ்புக் மூலம் அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக இதற்கு பொருள்.

சிங்கிள் என்றால் மணந்து கொள்ளாமல் தனியாக இருப்பதை குறிப்பது போல, திருமணம் செய்து கொள்ள இருப்பதை அல்லது ஜோடி கிடைச்சாச்சு என்பதை சமூக ஊடகத்தில் தெரிவிக்கும் செயலாக இது கருதப்படுகிறது. பேஸ்புக்கில் பயனாளிகளுக்கான அறிமுக பக்கத்தில், இப்படி உறவு நிலையை அறிவிப்பதற்கான வசதி இருப்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் உறவு நிலையை சிங்கில் இருந்து மாற்றுவதும் வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. உறவு நிலையை பேஸ்புக்கில் அறிவிப்பதோடு, இன்னும் ஒரு படி மேலே சென்று, ஒருவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன் துணையின் பேஸ்புக் பக்கத்திற்கு இணைப்பு கொடுத்து, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லலாம்.

உறவு நிலையை பேஸ்புக்கில் அறிவிப்பது என்பது வெறும் சமூக ஊடக சடங்காக மட்டும் கருதுவதற்கில்லை. நிஜ வாழ்க்கையில் தம்பதிகள் மத்தியில் ஒருமித்த கருத்து இருப்பதற்கான பல அடையாளங்களைப்போல, சமூக ஊடக யுகத்தில், பேஸ்புக் அறிவிப்பை வெளியிடுவது தம்பதிகளுக்கு இடையிலான கருத்தொற்றுமையின் அடையாளமாக கருதப்படுகிறது.

பேஸ்புக் அறிவிப்பு என்பது தம்பதிகள் புரிதலிலும், உறவிலும் நல்ல முன்னேற்றத்தை அளிப்பதாக சைகாலஜி டுடேவின் இந்த கட்டுரை சொல்கிறது:https://www.psychologytoday.com/us/blog/why-bad-looks-good/201706/the-relationship-benefits-going-facebook-official

பேஸ்புக் அறிவிப்பை எப்போது வெளியிட வேண்டும் என இந்த கட்டுரை விவரிக்கிறது.https://www.hercampus.com/school/marymount/what-does-it-really-mean-be-facebook-official

எல்லாம் சரி தான், ஆனால் இப்படி எல்லாமே பேஸ்புக்மயமாகி கொண்டிருப்பது தான் மிகவும் சிக்கலாக இருக்கிறது.

டெக் டிக்ஷனரி- 8 டிஜிட்டல் நேட்டிவ் ( digital native) – டிஜிட்டல் பூர்வகுடிகள்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.