எஸ்.எம்.எஸ்.வரும் முன்னே

டெக்ஸ்ட்டிங் தெரியும். ஸ் மெக்ஸ்டிங் தெரியுமா?  எஸ்.எம்.எஸ். அனுப்பும் பழக்கத்தை தான் ஆங்கிலத்தில் பிரபலமாக டெக்ஸ்டிங் என்று சொல்கின்றனர். சரி அது என்ன ஸ்மெக்ஸ்டிங், புதிதாக இருக்கிறதே. சிகரெட் பிடிப்பவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் புதிய, ஆனால் வரவேற்கத்தக்க பழக்கத்தைத்தான் ஸ்மெக்ஸ்டிங் என்று குறிப்பிடுகின்ற னர். அதாவது, சிகரெட் பிடிக்கும் உணர்வை கட்டுப்படுத்திக் கொள்வ தற்காக எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்புவதில் ஈடுபடும் பழக்கம் பலருக்கு ஏற்பட்டிருப்ப தாகவும் இந்த புதிய பழக்கமே ஸ்மெக்ஸ்டிங் என்று குறிப்பிடப்படுவதாகவும் பத்திரிகை கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.
இங்கிலாந்தில் தற்போது பொது இடங்களில் புகை பிடிக்க தடை அமலுக்கு வந்துள்ளது. இதன் காரண மாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்ட பலர் அதனை கைவிட வேண் டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

.
சிகரெட் பிடிக்காமல் இருப்பதால் ஏற்படக்கூடிய உணர்வுகளிலிருந்து தப்பிப்பதற்காக பலரும் சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றினால் உடனே எஸ்.எம்.எஸ். அனுப்ப தொடங்கி விடுகின்றனராம். அந்நாட்டைச் சேர்ந்த செல்போன் சேவை நிறுவனம் ஒன்று புகைப் பிடிக்கும் தடை அமலுக்கு வந்த காலத்திற்கு பிறகு இரண்டே வாரங் களில் எஸ்.எம்.எஸ். செய்தி களின் எண்ணிக்கை 75 லட்சம் அள வுக்கு அதிகரித்திருப்பதாக தெரிகிறது.

புகை பிடிப்பதற்கு பதிலாக பலரும் எஸ்.எம்.எஸ். அனுப்புவதே இதற்கு காரணம் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய பழக்கத்தை குறிக்கவே ஸ்மோக்கிங் மற்றும் டெக்ஸ்டிங் இரண்டையும் இணைத்து ஸ்மெக்ஸ் டிங் என்ற புதிய சொல்லை உருவாக்கி உள்ளனர்.

ஆனால் நிபுணர்களோ இது வெறும் வார்த்தை ஜாலம் தான் என்று சொல்கின்றனர். செல்போன் சேவை நிறுவனம் மார்க்கெட்டிங் உத்தியாக இதனை பயன்படுத்துகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விமர்சனம் ஒருபுறமிருக்க, புகைப்பிடிக்கும் வழக்கத்தை கைவிட உள்ளபடியே எஸ்.எம்.எஸ். உதவியாக இருக்கும் என்பது பல இடங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், இதற்காக விசேஷ சேவையை அறிமுகம் செய்து ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்.

அவருடைய திட்டம் எப்படி செயல் படுகிறது என்றால், புகை பிடிப்பதை நிறுத்த விரும்புகிறவர்கள் அவரிடம் பதிவு செய்து கொண்டு தங்கள் செல்போன் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்பிறகு உங்களுக்கு எப்போ தெல்லாம் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறதோ அப்போ தெல்லாம் ஒரு வெற்று எஸ்.எம்.எஸ்.ஐ அனுப்பி வைக்க வேண்டும். இந்த எஸ்.எம்.எஸ்.சுக்கு பதிலாக புகைப் பிடிப்பதை கைவிடுவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகள் பற்றிய விவரங்கள் எஸ்.எம்.எஸ்.ஆக வந்து சேரும்.

இந்த எஸ்.எம்.எஸ்ஐ படிக்கும்போது புகை பிடிக்க வேண்டாம் என்ற எண்ணம் உறுதிப்படும். ஒரு மாத காலத்துக்கு அவ்வப்போது புகைப் பிடிப்பதை நிறுத்துவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் ஊக்கம் தரும் வாசகங்கள் அனுப்பி வைக்கப் படும்.
சிகரெட் பிடிப்பதை நிறுத்த தொடங்கு வதற்கு முன்பாக இந்த டாக்டரிடம் பதிவு செய்து கொண்டால், ஒரு வார காலம் முன்னதாகவே அதற்கு தயார் செய்யும் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல நியூசி லாந்துநாட்டில் ஆன்டனி ராட்ஜஸ் என்னும் டாக்டர் இளைஞர்கள் மத்தி யில் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறார்.

800க்கும் மேற்பட்ட இளைஞர் களை தேர்வு செய்து அவர்களுக்கு சிகரெட் பிடிப்பதை நிறுத்தும் ஆலோச னைகளை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த சோதனையில் பங்கேற்ற 28 சதவீதம் பேர் புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டிருக்கின்றனர்.
சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு பல நேரங்களில் சிகரெட் பிடிக்கும் விருப்பத்தை கட்டுப்படுத்த முடியா ததே பெரும் பிரச்சனையாக இருக்கி றது.

அந்த நேரங்களில் எல்லாம் எஸ்.எம்.எஸ். வந்து காப்பாற்றி விடும் என்பது நல்ல யுத்திதான்.
அது மட்டுமல்லாமல், சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்போது எஸ்.எம்.எஸ். செய்தி அனுப்ப முயற்சிப்பது மனதை திசை திருப்பிவிடும் என்று ராட்ஜஸ் கூறுகிறார். தன்னுடைய ஆய்வில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் இப்படி எஸ்.எம்.எஸ்.ல் ஆழ்ந்து சிகரெட் பிடிப்பதை மறந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இளைய தலைமுறையினர் செல் போனும், கையுமாக சுத்திக் கொண்டி ருக்கும்நிலையில் புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு எஸ்.எம்.எஸ். சரியான ஆயுதமாக இருக்கும் என்று கருத வேண்டி இருக்கிறது. அது மட்டு மல்லாமல், மேலும் பல மருத்துவ திட்டங்களை எஸ்.எம்.எஸ். மூலம் நிறைவேற்றலாம் என்கின்றனர். உதாரணத்துக்கு ரத்த அழுத்தத்தை கண்காணித்துக்கொண்டே இருப்பதற் கான எளிய திட்டத்தை எஸ்.எம்.எஸ். மூலம் சுலபமாக உருவாக்கி விடலாம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.