வாழ்த்து, வீடியோ வாழ்த்து

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களின் போது வாழ்த்து அட்டைகளை இமெயில் மூலமாக அனுப்பி வைக்க உதவக் கூடிய இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. உண்மையில் இன்டெர்நெட் பிரபலமாக தொடங்கிய ஆரம்ப காலம் தொட்டே வாழ்த்து அட்டைகளுக்கான இணையதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. இப்போது வீடியோ யுகம் அல்லவா? அதற்கேற்ப வாழ்த்து சொல்வதும், வீடியோ வடிவில் இருப்பதுதானே பொருத்தமாக இருக்கும்.

.
இந்த தீபாவளிக்கு நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு வீடியோ வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் வசதியை இண்டியாவீடியோ டாட் ஓஆர்ஜி இணையதளம் அறிமுகம் செய்துள்ளது.

இதனை பெறுபவர்கள் மட்டுமல்ல, அனுப்புபவர்களும் ரசித்து மகிழக் கூடிய வகையில் இந்த வீடியோ வாழ்த்துக்கள் அமைந்துள்ளன என்பது மிகவும் விசேஷமானது.

இண்டியாவீடியோ டாட் ஓஆர்ஜி தளமே மிகவும் விசேஷமானதுதான். இந்தியாவில் தொடங்கப்பட்ட வீடியோ கோப்புகளுக்கான  முதல் இணையதளம் என்று இதனை குறிப்பிடலாம்.

சர்வதேச அளவில் யுடியூப் பிரபலமாகி வீடியோ பகிர்வு கலாச்சாரத்தை உருவாக்கிய பிறகு அதற்கு போட்டியாக பல இணைய தளங்கள் பிறந்து விட்டன.

இந்தியாவிலும் கூட யுடியூப்பின் அடியொற்றி வீடியோ பகிர்வு தளங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில இண்டியாவின் யுடியூப் என்ற வர்ணனையோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இண்டியாவீடியோ இணையதளம் இந்த வரிசையில் பின்னர் அறிமுகமானது என்றாலும், இதனை முன்னோடி தளமாக தாராளமாக குறிப்பிடலாம். காரணம் மற்ற வீடியோ பகிர்வு தளங்களுக்கும், இதற்கும் முக்கிய வேறுபாடு உண்டு.

யுடியூப் உள்ளிட்ட தளங்களில் யார் வேண்டுமானாலும் வீடியோ கோப்புகளை பதிவேற்றி யாரோடு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். இதுதான் அந்த தளங்களின் பலம்.
பல நேரங்களில் இதுவே அந்த தளங்களின் பலவீனமாகவும் விளங்குகிறது.

இந்த தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் வீடியோ கோப்புகளில் பல பயனற்றவையாக நேரத்தை வீணடிப்பவையாக இருக்கக் கூடும். அதோடு அவற்றின் தரமும் விவாதத்துக்குரியதுதான்.

இவற்றிலிருந்து இண்டியாவீடியோ தளம் முற்றிலும் மாறுபட்டது. இந்த தளம் தொழில் முறையாக தேர்ச்சி பெற்றவர்களால் எடுக்கப்பட்ட வீடியோ கோப்புகளை அரங்கேற்றும் இடமாக அமைந்துள்ளது.

இந்திய கலாச்சாரத்திற்கான வீடியோ களஞ்சியமாக இருக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் நமது நாட்டின் பாரம்பரிய பெருமையை உணர்த்தக் கூடிய வகையிலான வீடியோ படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த படங்கள் தனித்தனி தலைப்புகளின் கீழ் அழகாக தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் நடன வகைகள், சுற்றுலா தளங்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வீடியோ படங்கள் இடம் பெற்றுள்ளன.

வீடியோ கோப்பு மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள தோடு அவை தொடர்பான தகவல்களும் பின் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. காட்சியை பார்த்து விட்டு, கருத்தையும் தெரிந்து கொள்ள வசதியாக இவை அமைந்துள்ளன.

வெகு வேகமாக இணையவாசிகளை கவர்ந்து வரும் இந்த இணையதளம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடியோ வாழ்த்துக்களை அனுப்பி வைக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த தளத்தில் உள்ள பல்வேறு வகையான நடன காட்சிகள் தொடர்பான வீடியோ கோப்பை தேர்வு செய்து அவற்றை தீபாவளி வாழ்த்தாக தயாரித்து நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

முதன் முறையாக தீபாவளிக்காக வீடியோ வாழ்த்து அனுப்பும் வசதி இந்த தளத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா வீடியோ காட்சிகளுமே தொழில் முறையாக உருவாக்கப்பட்டவை என்பதால் அவற்றின் தரத்திற்கு உத்தரவாதம் கொடுக்கலாம்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதன் முறையாக இந்த தளம் இத்தகைய வீடியோ வாழ்த்து முறையை அறிமுகம் செய்தது. அதற்கு பரவலான வரவேற்பு கிடைத்ததையடுத்து தொடர்ந்து ரம்ஜானுக்கு அறிமுகம் செய்யப்பட்டு தற்போது தீபாவளிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இண்டியாவீடியோ டாட் ஓஆர்ஜி இணையதளம், இன்விஸ் மல்டிமீடியா மற்றும் யூனஸ்கோ அமைப்பின் கூட்டு முயற்சியால் உருவாகியுள்ள இணையதளமாகும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.