செல்போன் கணிதம்

mசெல்போன்கள் எத்தனை பிரபலமாக இருந்தால் என்ன, நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியிருந்தால் என்ன, நம்மில் பலருக்கு செல்போன்கள் மீது ஒருவித சந்தேகம் அல்லது எச்சரிக்கை உணர்வு இல்லாமல் இல்லை.
அரசாகட்டும், தனி நபராகட்டும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் செல்போனுக்கு தடை போடவே முற்படுகிறது. அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கித்தரும் முன் நிறையவே யோசிக்கின்றனர்.
செல்போன் கிடையவே கிடையாது என்று கண்டிப்பாக கூறும் கற்கால பெற்றோர்கள் இருக்கவே செய்கின்றனர்.
செல்போன்கள், தவறான வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதால், பிள்ளைகள் பாழாகிவிடலாம் என்னும் எச்சரிக்கை உணர்வு பலருக்கு இருக்கிறது. செல்போன் யுகத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் செல்லு படியாகுமா என்ற கேள்வி எழுந்தாலும், இதற்கான பதிலை தேடிக் கொண்டி ருப்பதை விட செல்போன் அத்யாவ சியமானது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துவதற் கான ஒரு சுவாரசியமான உதாரணத்தை பார்க்கலாம்.
அதிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கவலையின் சுவடே இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சியோடு செல்போன்களை வாங்கிக்கொடுக்க வைக்கக்கூடிய அழகான உதாரணம்.
செல்போன்களின் பயணம் பாதிப்பும் அதனை பயன்படுத்துபவர்களிடம் இருக்கிறதா அல்லது செல்போன் களிடம் இருக்கிறதா? செல்போன் களால் நிகழும் தவறுகளுக்கு அந்த தொழில்நுட்பத்தை குறை சொல்வது சரியாகுமா?
இஸ்ரேல் பேராசிரியர் ஒருவர் உருவாக் கியுள்ள செல்போனுக்கான சாப்ட் வேரைப் பற்றி அறிந்து கொண்டால், இந்த கேள்விக்கான பதில் தானாக கிடைத்து விடும். கணிதத்திலும், கணித பாடத்தின் அறிவை மாணவர் களுக்கு போதிப்ப திலும் பேரார்வம் கொண்ட மிக்கேல் ஏரூஷ்லாமி என்னும் அந்த பேராசிரியர் செல்போன் களில் டவுன்லோடு செய்து கொள்ளக் கூடிய கணித சாப்ட்வேரை உருவாக்கி இருக்கிறார்.
இந்த சாப்ட்வேரை அவர் செல் போனுக்குள் அடங்கக்கூடிய கணித ஆய்வுக்கூடம் என்று வர்ணிக்கிறார். ஆய்வுக்கூட கோட்பாட்டை அவர் வலியுறுத்தும் விதமே சுவாரசியமாக இருக்கிறது.
பௌதீகம் மற்றும் ரசாயனம் போன்ற பாடங்கள் ஆய்வுக்கூடங்களின் வழியே கற்பிக்கப்படுகிறது. அதே விதமாக கணிதமும் கரும்பலகையை மட்டுமே சார்ந்திராமல் ஆய்வுக் கூடத்துக்கும் இறங்கி வர வேண்டும் என்கிறார் அவர். அந்த உத்தேசத்தோடு கணித ஆய்வுக்கூடத்தை செல் போனில் டவுன்லோடு செய்யக்கூடிய சாப்ட்வேரை வடிவமைத்துள்ளார்.
இந்த சாப்ட்வேர் பற்றி சுருக்கமாக சொல்வதாயின் மாணவர்கள் கம்ப்யூட் டரின் உதவியோடு கணித சமன்பாடு களை கற்றுக்கொள்ள முடிவது போல செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள உதவக் கூடியது இது.
அடிப்படையான சூத்திரங்களில் தொடங்கி மேல்நிலை படிப்பு வரையி லான கணித பாடங்களின் பல்வேறு சமன்பாட்டை சார்ந்த விஷயங்கள் இந்த சாப்ட்வேரில் அடங்கியுள்ளன.
பொழுதுபோகாமல்இருக்கும்போது மாணவர்கள் செல்போனில் இருக்கும் கேம்களை விளையாடுவது போல இந்த கணித சமன்பாடுகளுக்கு தீர்வு காண முயற்சிக்கலாம்.
மாணவர்களுக்கு ஈடுபாடு மிக்கதாக இருக்கும் என்பதோடு, கணித பாடத்தை கற்றுக்கொண்டது போலவும் இருக்கும்.
இன்றைய உலகில் எல்லோரும் செல் போன்கள் வைத்திருக்கும் நிலையில் குறிப்பாக இளைய தலைமுறையினர் செல்போன் களுடனே பிறக்கும் நிலையில் தொழில்நுட்பத்தை பயன் படுத்தி கணித பாடத்தை கற்றுத் தரும் வகையில் இந்த சாப்ட்வேரை உருவாக்கியிருப்பதாக பேராசிரியர் தெரிவிக்கிறார்.
இதற்காக அவர் மேத் 4 மொபைல் டாட் காம் என்னும் இணையதளத்தை அமைத்திருக்கிறார். இந்த தளத்திலி ருந்து நான்கு வகையான கணித செயல்பாடுகளை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
கால்குலசில் தொடங்கி ஜாமன்ட்ரி, அல்ஜீப்ரா என பல்வேறு கணித பாடங்களை இந்த சாப்ட்வேர் மூலம் கற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தேர்வுக்கு செல்வதற்கு முன்பாக இந்த சாப்ட்வேர் மூலம் கணித பாடங்களுக் கான தயாரிப்பை சரிபார்த்துக்கொள்ள லாம். அது மட்டுமல்லாமல், இந்த பாடங்களை எஸ்எம்எஸ் மூலம் பரிமாறிக்கொள்ளும் வசதியும் இருக்கி றது. எனவே மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய தீர்வை சக மாணவர் களுக்கு அனுப்பி வைக்கலாம்.
இதேபோல பள்ளி ஆசிரியரிட மிருந்து வீட்டுப்பாடத்தைப் பெற்று அதற்கான ஆலோசனைகளையும் பெறலாம். மேலும் பஸ்சின் வேகம், கார் சீறிப்பாய்ந்து செல்லும் வேகம் ஆகியவற்றை இந்த சாப்ட்வேர் உதவியோடு வரைபடமாக மாற்றி பார்க்கும் வசதியும் உண்டு. இவ் விதமாக கணிதத்தின் அடிப்படை செயல்பாடுகளை மாணவர்கள் புது விதமாக புரிந்துகொள்ளலாம்.
இது ஒரு ஆரம்பம்தான். மாணவர்க ளின் பயன்பாட்டுக்கேற்ப மேலும் பல கணித பாடங்கள் செல்போன் சாப்ட் வேராக வரும் என்கிறார் பேராசிரியர்.
இப்போது சொல்லுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தைரியமாக செல்போனை வாங்கிக்கொடுக்கலாம் அல்லவா, அதற்கு முன்பாக “math4mobile.com”ட்” தளத்திற்கு சென்று பாருங்கள்.
இந்த சாப்ட்வேருக்கு கட்டணம் கிடையாது. இலவசமான டவுன்லோடு செய்து கொள்ளலாம். அனைத்து விதமான செல்போன்களிலும் செயல் படும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

———–

link;
http://www.math4mobile.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.