100 தேடியந்திர தேடல் பலன்

ஒரு தேடியந்திரத்தில் தேடினால் 100 தேடியந்திரத்தில் தேடிய பலனைப் பெறலாம் என்று சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும். புதிய தேடியந்திரம் ஒன்று இப்படித்தான் மார் தட்டிக்கொள்கிறது.

இன்டெல்வேஸ் டாட்காமென்பது அதன் பெயர்.இல்லை இப்போது பெயர் மாற்றப்பட்டு விட்டது. பிரவிசிஸ் என்பது புதிய பெயர்.

உண்மையில் இந்த தளம், 100 தேடியந்திரங்களில் தேடும் வசதியை அளிக்கா விட்டாலும்,அதற்கு நிகரான வசதியை தருகிற‌து. அதாவது, ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்கும் சேவையை வழங்குகிறது.
இதென்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம்.

தேடியந்திர உலகில் கூகுல் முதல்வனாக இருக்கலாம். அதற்கு போட்டியாக எண்ணற்ற தேடியந் திரங்கள் முளைத்திருக்கலாம்.தேடியந்திரம் என்ற வகையில் கூகுலுக்கு நிகரான தேடியந்திரம் இல்லை என்றாலும்
குறிப்பிட்ட பிரிவுகளில் கூகுலுக்கு இணையாக செல்வாக்கு பெற்ற தேடியந்திரங்களும் இல்லாமல் இல்லை.

எனவே இப்போது இணைய வாசிகள் கூகுலோடு நிறுத்திக் கொள்வதில்லை. தேவைக்கேற்ப வேறு பல தேடி யந்திரங்களிலும் தேடிப்பார்த்துக் கொள்கின்றனர்.

இதனைப் புரிந்து கொண்டு பல்வேறு தேடியந்திரங்களை ஒரே இடத்தில் தேடிப்பார்க்கும் வசதியை ஒரு சில தேடியந்திரங்கள் வழங்குகின்றன.

அந்த வரிசையில்தான் பிரவிசிஸ் வந்து சேர்ந்திருக்கிறது.
கூகுல், யாஹூ, ஆஸ்க், விக்கி பீடியா உள்ளிட்ட பிரதான தேடியந்திரங் களை இந்த தளத்தின் மூலமே தேடிப்பார்க்கலாம். அதோடு புத்தக விற்பனை தளமான அமேசான் மற்றும் ஏல தளமான இபே தேடல் முடிவுகளை யும் இங்கிருந்தே தேடலாம்.

கூகுலைப் போலவே இந்த தேடியந்திரமும் எளிதாகவே இருக்கிறது.ஆனால் கருப்பு பின்னனியில் கலக்குகிறது.

இதன் தேடல் கட்டத்தில் நம்முடைய குறிப்பு சொல்லை டைப் செய்ய வேண்டும். தேடல் கட்டத்துக்கு மேலே சிறிய பெட்டி களாக கூகுல் உள்ளிட்ட தேடியந்திரங் களுக்கான ஐகான்கள் கொடுக்கப் பட்டுள்ளன.

அவற்றை கிளிக் செய்தால் போதும் அந்த தேடியந்திரத் தின் முடிவுகளை பார்க்க முடியும்.
இப்படியாக ஒரு முறை நமக்குத் தேவையான குறிப்புச் சொல்லை டைப் செய்தால் போதும் அதனைக் கொண்டே பல தேடியந்திரங்களில் தேடிப் பார்த்து விடலாம். இப்படி பல தேடியந்திரங்களில் தேடிப்பார்ப்ப தோடு, அவற்றின் முடிவுகளையும் ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

பிரவிசிஸ் தன்னை தேடியந்திரம் என்று அழைத்துக் கொள்ளவில்லை. மாறாக தேடல் முடிவுகளை தொகுத்து தரும் சேவை என்றே குறிப்பிடுகிறது.
மிகப்பெரிய தேடியந்திரத்தி லிருந்து ஆழமான தேடல் முடிவு களைக் கொண்ட தேடியந்திரங்கள் வரை வெவ்வேறு வகையான தேடியந்திர முடிவுகளை தொகுத்து இந்த தளம் முன்வைக்கிறது.

அனைத்து தேடல் முடிவுகளையும் ஒரே இடத்திலிருந்து பார்க்க முடிவதே இதன் சிறப்பம்சமாக இருக்கிறது. நீங்கள் எதை தேடி வருகிறீர்களோ, அந்த முடிவை சுலபமாக தேடி விடலாம் என்றும் இது உற்சாகமாக அறிவிக்கிறது.
பல தேடியந்திரங்களை பயன் படுத்துபவர்கள் இதனை பார்த்த தும் சொக்கிப் போய்விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

ஒப்பாராய்ச்சி என்று சொல்வதைப்போல தங்களுக்கு தேவையான தகவல்களை
பெற கூகுலைத்தவிறவும் பல தேடியந்திரங்களில் தேடிப்பார்க்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.

———-

linjk;
http://www.browsys.com/finder/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “100 தேடியந்திர தேடல் பலன்

  1. Pingback: ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!. « Cybersimman's Blog

  2. ARIESWARAN

    I LIKE IT.;-(BUT I THINK BETTER WAS GOOGLE

    Reply
    1. cybersimman

      கூகுலோடு ஒப்பிட்டால் எந்த தேடியந்திரமும் சிறந்ததாக தோன்றாது தான்!

      Reply

Leave a Comment

Your email address will not be published.