உலக‌ குறும்பதிவுகளை காண ஒரு இணையதளம்.

நான் டிவிட்டர் ரசிகன்.டிவிட்டர் சார்ந்த சேவைகளுக்கோ பரம‌ ரசிகன்.என்னை போன்ற டிவிட்டர் ரசிகர்களை டவுண் டிவீட் நிச்சயம் உற்சாகத்தில் ஆழ்த்திவிடும்.

டிவிட்டரில் ஓய்வில்லாமல் வெளியாகி கொண்டே இருக்கும் தகவல் நதிகளை நம் கண் முன்னே பாய்ந்தோட செய்கிறது இந்த தளம்.எந்த வகையில் தகவல்கள் தேவையோ அந்த தலைப்பிலான குறும்பதிவுகளை இங்கே பாய்ந்தோட செய்து விடலாம்.தனி நபர்களிம் டிவிட்டர் பதிவுகளையும் இங்கேயே பார்த்து கொள்ளலாம்.

செய்தியில் ஆர்வம் என்றால் செய்தி தொடர்பான குறும்பதிவுகள் எல்லாம் அவை வெளியாகும் போதே தெரிந்து கொண்டு விடலாம்.செய்தியை விட தொழில்நுட்பத்திலோ அல்லது இசையிலோ ஆர்வம் என்றால் அதற்கான வகையை தேர்வு செய்யுங்கள்,தெரிந்து கொள்ளுங்கள்.

சிரிக்க வைக்கும் பதிவுகள்,பேஸ்புக் பதிவுகள்,காதல் பதிவுகள் போன்ற வகைகளும் உள்ளன.குறிப்பிட்ட த‌லைப்பில் பதிவுகள் தேவை என்றால் தனியே தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.

அப்படியே இணையவாசிகள் தங்கள் சொந்த டிவிட்டர் கணக்கின் நடவடிக்கைகளையும் இந்த தளத்தின் மூலமே பின் தொடர்லாம்.

டிவிட்டரில் பதிவுகளை ரகம் வாரியாக பிரித்து தர ஏற்கனவே பல சேவைகள் இருந்தாலும் இது வரவேற்கத்தக்க வரவு தான்.

இன்று செய்திகள் பெரும்பாலும் டிவிட்டரில் தான் முதலில் வெளியாகின்றன என்னும் போது டிவிட்டர் பரப்பில் இப்போது என்ன நிகழ்கிறது என்பதை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்.டவுண் டிவீட் அதை அழகாக செய்கிறது.

இணையதள முகவரி;http://www.downtweet.com/#

தொடர்புடைய முந்தைய பதிவு: டிவிட்டரில் இன்றைய சூடான செய்தி.;http://cybersimman.wordpress.com/2011/11/07/twitter-132/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *