கூகுலில் நீங்கள் விரும்பியதை தேட!

கூகுல் எத்தனை விதமான தேடல் சேவைகளை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?அதை விட இந்த சேவைகளை எல்லாம் ஒரே பக்கத்தில் பெறுவதற்கான ஒரு சேவையையும் கூகுல் வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அட கூகுல் இத்தனை சேவைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறதா என்று வியப்பில் ஆழ்த்தக்கூடிய இந்த சேவையை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நான்கெழுத்து இணையதளம் மூலம் வழங்குகிறது.டபில்யுடியுஎல் டாட் காம் என்பது தான் அந்த தளத்தின் முகவரி.

வாட் டூ யூ லவ் என்பதன் சுருக்கமாக இந்த முகவரி அமைந்துள்ளது.அதாவது கூகுலில் நீங்கள் விரும்புவது என்ன என்று கேட்கும் வகையில் அமைந்துள்ளது.

கூகுலில் தேடுவது போல இதிலும் உங்கள் தேடலுக்கான குறிச்சொல்லை டைப் செய்ய வேண்டும் .அதன் பிறகு தான் ஆச்சர்யம் காத்திருக்கிறது.கராணம் கூகுலில் வருவது போல தேடல் முடிவுகளில் பட்டியல் வருவதற்கு பதில் பல வகையான தேடல் வகைகள் தோன்றுகின்றன.

கூகுல் வரைபடத்தில் இருந்து வீடியோ,செய்தி,வலைப்பதிவு,புத்தகம்,மொழிபெயர்ப்பு,புகைப்படம் என கூகுல் வழங்கும் அனைத்து வகையான தேடல் சேவைகளின் முடிவுகளும் பெட்டியாக பெட்டியாக அடுக்கப்படுகின்றன.ஒரு நிமிடம் எந்த சேவையை பார்ப்பது,எதை பயன்டுத்துவது என புரியாமல் உங்களுக்கே குழப்பமாக கூட இருக்கலம்.

ஆனால் கொஞ்சம் பொருமையாக கவனித்தால் இத்தனை விதமான சேவைகளா என்ற வியப்பு ஏற்படலாம்.

உதாரனத்திற்கு சச்சின் டெண்டுகர் பற்றி தேடுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம் முதலில் குகுல் வரை படத்தில் சச்சின் சார்ந்த தேடல் முடிவு வருகிறது.அதன் பக்கத்திலேயே யூடியூப்பில் சச்சின் தொடர்பான வீடியோக்களும்,அருகிலேயே முப்பரிமானத்தில் சச்சினை விரிவு படுத்தி கொள்வதற்கான வாய்ப்பும் வருகிறது.

அதற்கு கீழே சச்சின் தொடர்பான‌ வலைப்பதிவுகள்,சச்சினை 57 மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதி,மற்றும் சச்சனோடு திட்டமிடும் வாய்ப்பும் வந்து நிற்கிறது.எல்லாமே கூகுல் வழங்கும் சேவைகள் தான்.(கூகுல் நாட்காட்டி,கூகுல் மொழிபெயர்ப்பு,பிலாகர்)

இதோடு முடியவில்லை,கூகுல் புத்தக தேடல் மூலமாக சச்சின் தொடர்பான புத்தகங்களை தேடிப்பார்க்கலாம்.ஜி டாக் மூலமாக சச்சினோடு பேசலாம்.கூகுல் இமேஜ் வாயிலாக சச்சின் புகைப்படங்களை தேடலாம் கூகுல் எர்த்தில் சச்சின் தொடர்பான தேடலாம்.

இத்தோடு முடிந்து விடவில்லை.ஜிமெயில் மூலம் யாருக்காவது சச்சின் பற்றி மெயில் அனுப்பலாம் ,கூகுல் அனல்டிக்ஸ் வாயிலாக சச்சினின் இணைய செல்வாக்கை அலசலாம்,செல்லி சச்சினை தேடலாம் மற்றும் இன்னும் சில சேவைகள் இருக்கின்றன.எல்லாமே கூகுல் வழங்கும் சேவைகள் தான்.ஆனால் ஒரே பக்கத்தில் ஒரே நேரத்தில் அணுகலாம் என்ப‌து தான் சிற‌ப்பு.

கூகுல் எண்ணற்ற சேவையை வழங்கி வந்தாலும் அனைத்தையும் பறைசாற்றி கொள்ளமால் அதன் முகப்பு பக்கத்தை எளிமையாகவே வைத்திருக்கிறது.தேடல் தான் பிரதானமாக உள்ளது.ஆனால் இணையவாசிகள் விரும்பினால் தேடும் போது புகைப்படம் அல்லது வீடியோ அல்லது செய்தி மட்டும் தேவை என தங்கள் தேடலை சுருக்கி கொள்ளலாம்.இதற்கான தேர்வுகள் வலது பக்கத்தின் மேலே சின்னதாக இடம் பெற்றிருப்பத பலரும் கவனித்திருக்கலாம்,பயன்படுத்தியிருக்கலாம்.வரைப்டம்,புகைப்படம் ஆகியவையும் இதில் உண்டு.

இவற்றை தவிரவும் கூகுல் வழங்கும் தனித்தனி சேவைகள் உள்ளன.அவற்றை எல்லாம் தான் ஒரே பக்கத்தில் அணுக வாய்ப்பு தருகிறது கூகுலின் இந்த பக்கம் .
கூகுலின் தேடல் சாம்ப்ராஜ்யத்தை முழுவதும் கண்டு வியக்க இந்த தலத்தில் நீங்கள் கூகுலில் விரும்புவதை தேடிப்பாருங்கள்,சொக்கிப்போவீர்கள்!

இணையதள முகவரி;http://www.wdyl.com/#

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுலில் நீங்கள் விரும்பியதை தேட!

  1. விளக்கமான பதிவு ! நன்றி நண்பரே !

    Reply

Leave a Comment

Your email address will not be published.