Tag Archives: calender

விரும்பிய நேரத்தில் இமெயில் அனுப்ப உதவும் சேவை

SndLatr_Calendarஇன்றைய இமெயிலை நாளை அனுப்பும் தேவை உங்களுக்கு ஏற்படலாம். அதாவது  ஒரு இமெயிலை அதை எழுதியவுடன் அனுப்பாமல் குறிப்பிட்ட வேறு ஒரு நாளில் திட்டமிட்டு அனுப்ப விரும்பலாம். அலுவல் நிமித்தமாக , வர்த்தக நோக்கமாக தனிப்பட்ட தேவைக்காக என பல காரணங்களினால் நீங்கள் ஒரு மெயிலை பின்னர் குறிப்பிட்ட ஒரு நாளில் அனுப்பி வைக்க விரும்பலாம். இதற்கான எளிய வழி இமெயிலை டைப் செய்து விட்டு திட்டமிட்ட நாளில் அனுப்பிக்கொள்ளலாம் என்று அதை சேமித்து வைப்பது. இதில் உள்ள சிக்கல் என்ன என்றால் மறதி அல்லது வேலை பளு காரணமாக அன்றைய தினமு இமெயிலை அனுப்பி வைக்க முடியாமல் போகலாம்.

இதை தவிரப்பதற்கான எளிய வழியாக செண்ட்லேட்டர் எக்ஸ்டென்ஷன் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. குரோம் பிரவுசரில் செயல்படும் இந்த எக்ஸ்டென்ஷன் , பின்னாளில் அனுப்பி வைக்க விரும்பும் இமெயிலை அதே நாளின் அனுப்பி வைக்க உதவுகிறது.

இந்த சேவையை பயன்படுத்த முதலில் எக்ஸ்டென்ஷனை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்கள் மெயில் கணக்கை அணுக அனுமதி அளிக்க வேண்டும். அவ்வளவு தான், மற்றவற்றை இந்த சேவை கவனித்துக்கொள்ளும்.  எப்போது இமெயிலை பிறகு அனுப்பி வைக்க விரும்புகிறீர்களோ அப்போது மெயிலை டைப் செய்து விட்டு, அனுப்புக (செண்ட்) கட்டளையை கிளிக் செய்வதற்கு பதில் இந்த சேவை வழங்கும் பின்னாளில் அனுப்புக ( செண்ட் லேட்டர்) கட்டளையை கிளிக் செய்து, எந்த நாளில் அந்த மெயில் அனுப்பபட வேண்டும் என குறிப்பிட்டு விட்டால் , சரியாக அன்றைய தினம் அந்த மெயில் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.

மெயில் அனுப்பி வைக்கப்பட வேண்டிய நாளை வார்த்தைகளிலும் குறிப்பிடலாம். அல்லது இதில் இணைக்கப்பட்டுள்ள கூகுல் காலண்டரில் இருந்து தேதியையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த சேவையை பயன்படுத்தி உங்களுக்கு நீங்களே கூட நினைவூட்டல்களை அனுப்பி கொள்ளலாம்.

இந்த சேவையில் உள்ள மற்றொரு பயனுள்ள வசதி, எந்த மெயிலுக்கான நினைவூட்டல் வசதியையும் பெற்லாம் என்பது தான். குறிப்பிட்ட முக்கிய இமெயிலை அடுத்த வாரம் மீண்டும் பார்க்க வேண்டும் என நினைத்தால் எப்போது நினைவு ப்டுத்தப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம். மெயிலின் மேலே இதற்கென உள்ள கடிகார பகுதியில் இதற்கான வசதி உள்ளது. இதில் குறிப்பிடும் தினத்தில் அந்த இமெயில் நினைவுபடுத்தப்படும் . நீங்கள் அனுப்பிய் மெயிலுக்கு பதில் வரவில்லை என்றால் மட்டும் நினைவூட்டும்படி கூட அமைத்துக்கொள்ளலாம்.

இமெயிலை கையாளுவதில் தான் அதன் பயன்பாடே இருக்கிறது. இமெயிலை மேலும் சிறப்பாக கையாள உதவும் சேவைகளில் இந்த எக்ஸ்டென்ஷனையும் சேர்த்துக்கொள்ளலாம்.நீங்கள் ஜிமெயில் பயனாளி என்றால் இந்த எக்ஸ்டென்ஷனை பயன்படுத்திப்பார்க்கலாம்.

 

பிரவுசர் நீட்டிப்பை பெற: https://chrome.google.com/webstore/detail/sndlatr-beta-for-gmail/nfddgbpdnaeliohhkbdbcmenpnkepkgn

 

————–
இமெயில் தொடர்பாக பயனுள்ள சில பதிவுகள் :

1.இமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி.

2.தற்கொலை செய்து கொள்ளும் இமெயில்கள்!

3.

இமெயில் வழியே இணைய பக்கத்தை அனுப்பும் வசதி

4.இமெயிலில் புத்தகம் படிக்க மேலும் ஒரு இணையதளம்.

5 .இமெயிலுக்கு ஒர

what-do-you-love-google

கூகுலில் நீங்கள் விரும்பியதை தேட!

கூகுல் எத்தனை விதமான தேடல் சேவைகளை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?அதை விட இந்த சேவைகளை எல்லாம் ஒரே பக்கத்தில் பெறுவதற்கான ஒரு சேவையையும் கூகுல் வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அட கூகுல் இத்தனை சேவைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறதா என்று வியப்பில் ஆழ்த்தக்கூடிய இந்த சேவையை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நான்கெழுத்து இணையதளம் மூலம் வழங்குகிறது.டபில்யுடியுஎல் டாட் காம் என்பது தான் அந்த தளத்தின் முகவரி.

வாட் டூ யூ லவ் என்பதன் சுருக்கமாக இந்த முகவரி அமைந்துள்ளது.அதாவது கூகுலில் நீங்கள் விரும்புவது என்ன என்று கேட்கும் வகையில் அமைந்துள்ளது.

கூகுலில் தேடுவது போல இதிலும் உங்கள் தேடலுக்கான குறிச்சொல்லை டைப் செய்ய வேண்டும் .அதன் பிறகு தான் ஆச்சர்யம் காத்திருக்கிறது.கராணம் கூகுலில் வருவது போல தேடல் முடிவுகளில் பட்டியல் வருவதற்கு பதில் பல வகையான தேடல் வகைகள் தோன்றுகின்றன.

கூகுல் வரைபடத்தில் இருந்து வீடியோ,செய்தி,வலைப்பதிவு,புத்தகம்,மொழிபெயர்ப்பு,புகைப்படம் என கூகுல் வழங்கும் அனைத்து வகையான தேடல் சேவைகளின் முடிவுகளும் பெட்டியாக பெட்டியாக அடுக்கப்படுகின்றன.ஒரு நிமிடம் எந்த சேவையை பார்ப்பது,எதை பயன்டுத்துவது என புரியாமல் உங்களுக்கே குழப்பமாக கூட இருக்கலம்.

ஆனால் கொஞ்சம் பொருமையாக கவனித்தால் இத்தனை விதமான சேவைகளா என்ற வியப்பு ஏற்படலாம்.

உதாரனத்திற்கு சச்சின் டெண்டுகர் பற்றி தேடுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம் முதலில் குகுல் வரை படத்தில் சச்சின் சார்ந்த தேடல் முடிவு வருகிறது.அதன் பக்கத்திலேயே யூடியூப்பில் சச்சின் தொடர்பான வீடியோக்களும்,அருகிலேயே முப்பரிமானத்தில் சச்சினை விரிவு படுத்தி கொள்வதற்கான வாய்ப்பும் வருகிறது.

அதற்கு கீழே சச்சின் தொடர்பான‌ வலைப்பதிவுகள்,சச்சினை 57 மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதி,மற்றும் சச்சனோடு திட்டமிடும் வாய்ப்பும் வந்து நிற்கிறது.எல்லாமே கூகுல் வழங்கும் சேவைகள் தான்.(கூகுல் நாட்காட்டி,கூகுல் மொழிபெயர்ப்பு,பிலாகர்)

இதோடு முடியவில்லை,கூகுல் புத்தக தேடல் மூலமாக சச்சின் தொடர்பான புத்தகங்களை தேடிப்பார்க்கலாம்.ஜி டாக் மூலமாக சச்சினோடு பேசலாம்.கூகுல் இமேஜ் வாயிலாக சச்சின் புகைப்படங்களை தேடலாம் கூகுல் எர்த்தில் சச்சின் தொடர்பான தேடலாம்.

இத்தோடு முடிந்து விடவில்லை.ஜிமெயில் மூலம் யாருக்காவது சச்சின் பற்றி மெயில் அனுப்பலாம் ,கூகுல் அனல்டிக்ஸ் வாயிலாக சச்சினின் இணைய செல்வாக்கை அலசலாம்,செல்லி சச்சினை தேடலாம் மற்றும் இன்னும் சில சேவைகள் இருக்கின்றன.எல்லாமே கூகுல் வழங்கும் சேவைகள் தான்.ஆனால் ஒரே பக்கத்தில் ஒரே நேரத்தில் அணுகலாம் என்ப‌து தான் சிற‌ப்பு.

கூகுல் எண்ணற்ற சேவையை வழங்கி வந்தாலும் அனைத்தையும் பறைசாற்றி கொள்ளமால் அதன் முகப்பு பக்கத்தை எளிமையாகவே வைத்திருக்கிறது.தேடல் தான் பிரதானமாக உள்ளது.ஆனால் இணையவாசிகள் விரும்பினால் தேடும் போது புகைப்படம் அல்லது வீடியோ அல்லது செய்தி மட்டும் தேவை என தங்கள் தேடலை சுருக்கி கொள்ளலாம்.இதற்கான தேர்வுகள் வலது பக்கத்தின் மேலே சின்னதாக இடம் பெற்றிருப்பத பலரும் கவனித்திருக்கலாம்,பயன்படுத்தியிருக்கலாம்.வரைப்டம்,புகைப்படம் ஆகியவையும் இதில் உண்டு.

இவற்றை தவிரவும் கூகுல் வழங்கும் தனித்தனி சேவைகள் உள்ளன.அவற்றை எல்லாம் தான் ஒரே பக்கத்தில் அணுக வாய்ப்பு தருகிறது கூகுலின் இந்த பக்கம் .
கூகுலின் தேடல் சாம்ப்ராஜ்யத்தை முழுவதும் கண்டு வியக்க இந்த தலத்தில் நீங்கள் கூகுலில் விரும்புவதை தேடிப்பாருங்கள்,சொக்கிப்போவீர்கள்!

இணையதள முகவரி;http://www.wdyl.com/#

u

உங்களுக்கேற்ற நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும் இணையதளம்.

நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான் அழகாக செய்கிற‌து.

அதாவது எந்த நிகழ்ச்சிகள் உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் இருக்குமோ அந்த நிகழ்ச்சிகளை அந்த தளம் பரிந்துரைக்கிறது.அந்த வகையில் நிகழ்ச்சிகளுக்கான பன்டோரா என்று இந்த தளம் வர்ணிக்கப்படுகிறது.

பன்டோரா பரிந்துரை சேவைகளின் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை சொன்னால் அதனடிப்படையில் நீங்கள் விரும்பி கேட்ககூடிய பாட‌ல்களை பரிந்துரைப்பதே பன்டோரவின் சிறப்பம்சம்.

இது வியப்பை அளித்தாலும் பன்டோரா இசை ரசனையின் நுட்பங்களை அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளக்கூடிய சாப்ட்வேரின் உதவியோடு பிடித்தமான பாடல்களை பரிந்துரைக்கிறது.

பன்டோரா பாணியில் ஒருவரின் ரச‌னை மற்றும் விருப்பங்கள் அடிப்படையில் அவருக்கு பிடிக்ககூடிய விஷயங்களை பரிந்துரைக்கும் சேவைகள் எல்லா துறைகளிலும் உதயமாகி இருக்கின்றன.இப்போது நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதிலும் யூ பிளான் மீ மூலமாக இந்த பரிந்துரைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.

இன்றைய நிகழ்ச்சிகளை இணைய யுகத்திற்கு ஏற்ப மேம்படுத்தியுள்ள சேவையாக இது அமைந்துள்ளது.ஒருவரது பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள உதவும் தளங்கள் விதவிதமாக இருக்கின்றன.இவற்றின் மூலம் ஒருவர் தனது பகுதியில் நடைபெறும் சுவாரஸ்யமான‌ பயனுள்ள நிகழ்ச்சிகளை எளிதாக கண்டு கொள்ளலாம்.

இன்றைய நிகழ்ச்சிகளை இந்த தளங்கள் விரிவாக பட்டியலிட்டாலும் இவற்றில் இருந்து ஒருவர் தனக்கு பொருத்தமான நிகழ்ச்சிகளை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.இந்த தேடலில் விருப்பமில்லாத,தேவையில்லாத நிகழ்ச்சிகளையும் மேய்ந்தாக வேண்டும்.

இதற்கு மாறாக நிகழ்ச்சிகளே உங்களை கண்டுகொள்ள உதவும் சேவையை தான் யூ பிளான் மீ தளம் சாத்தியமாக்குகிறது.

இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள விரும்பும் உறுப்பினர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உள்ள நிகழ்ச்சிகள் பட்டியலில் உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்ய வேண்டும்.இதன் மூலம் உங்களது விருப்பமும் எதிர்பார்ப்பும் என்ன என்பதை இந்த தளம் புரிந்து கொண்டு அடுத்த முறை அத்தகைய நிகழ்ச்சிகள் வரும் போது அவற்றை மட்டும் உங்களுக்கு பரிந்துரைக்கும்.

இலக்கிய ஆர்வம் உள்ளவரின் நண்பர் இலக்கிய கூட்டம் பற்றி கேள்விபட்டால் அவரிடம் அதனை பரிந்துரைப்பார் அல்லவா அதே போல தான் இந்த தளமும் ஒருவருக்கு பிடிக்ககூடிய நிகழ்ச்சிகளை தனது பட்டியலில் இருந்து தேர்வு செய்து பரிந்துரைக்கிற‌து.

பரிந்துரைகள் எந்த அளவுக்கு துல்லியமானதாக இருக்கும் என்பது ஆய்வுக்குறிய விஷய‌ம் என்றாலும் ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் அவருக்கான நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும் கருத்தாக்கம் பயனுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இந்த பரிந்துரைகள் துல்லியமானதாக மேலும் சில வழிகள் இருக்கின்றன.ஒவ்வொரு முறை நிகழ்ச்சிகள் பரிந்துரைக்க்ப்படும் போது அந்த பரிந்துரையை ஏற்கிறீர்களா அல்லது பயனற்ரது என நிராகரிக்கிறிர்களா என குறிப்பிட வேண்டும்.இந்த தகவல்களின் அடிப்படையில் பயனாளிகளின் ரசனை பற்றிய புரிதலை இந்த தளத்தின் பின்னே உள்ள சாப்ட்வேர் மேலும் கூர்மையாக்கி கொள்ளும்.

அது மட்டும் அல்ல இந்த தளத்துடன் உங்கள் பேஸ்புக் கணக்கை இணைக்கும் பட்சத்தில் பேஸ்புக்கில் நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ரெஸ்டார்ண்ட் மற்றும் நிகழ்ச்சிகளை குறிப்பிடும் போது அதனையும் கவனத்தில் கொண்டு உங்களுக்கேற்ற நிகழ்ச்சியை இந்த தளம் பரிந்துரைக்கும்.

நிகழ்ச்சி தேர்வுகளை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.தேர்வு செய்யும் நிகழ்ச்சிகள் அழகாக நாட்காட்டியில் சேமிக்கப்பட்டு விடுகின்றன.எனவே நாட்காட்டியை பார்ப்பதன் மூலமே நிகழ்ச்சிகள் என்று எங்கே இருக்கின்ற‌ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விளையாட்டு,உணவு(ரெஸ்டார்ன்ட்),டிவி நிகழ்ச்சிகள்,இரவு வாழ்க்கை மற்றும் இதர நிகழ்ச்சிகள் என ஐந்து பிரிவுகளின் கீழ் நிகச்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.ஆம் உங்களுக்கு பிடித்தமான டிவி நிகழ்ச்சிகளையும் இந்த தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

அமெரிக்க நகரங்களை மையமாக கொண்ட சேவை என்றாலும் கருத்தாக்க அளவில் நாமும் தெரிந்து கொள்ள வேண்டிய தளம் தான்.

தனிநப‌ர்களின் தேவையையும் எதிர்பார்ப்பையும் புரிந்து கொன்டு அதற்கேற்ற தனிப்பட்ட பரிந்துரைகளை வழங்கும் சேவைகளுக்கான அழகிய உதாரணம் தானே இந்த தளம்.

இணையதள முக‌வரி;http://www.uplanme.com/#

to

திட்டமிடலில் உதவ மேலும் ஒரு இணையதளம்.

தினசரி வேலைகளை திட்டமிடுவதற்கான இணையதளங்களில் டுடு.லே தளத்தை விஷேசமானதாக குறிப்பிடலாம்.

திட்டமிடுவதற்கான இதன் வழிகாட்டி கொஞ்சம் சிக்கலானது.ஆனால் முழுமையானது.முதல் பார்வைக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக தோன்றினாலும் பயன்படுத்த துவங்கினால் இதன் சிறப்புகள் புரியத்துவங்கிவிடும்.

வீட்டு வேலை,அலுவலக பணி,ஷாப்பிங்,வார இறுதி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் திட்டமிட இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.முக்கியமாக செய்ய நினைக்கும் பணிகளை குறித்த நேரத்தில் நினைவில் கொள்வதற்கான வழியாகவும் இந்த சேவை கைகொடுக்கும்.

இன்று முதல் திட்டமிட்டு செயல்படலாம் என தீர்மானித்து விட்டால் இந்த தளத்தில் உறுப்பினர் கணக்கை துவக்கி கொள்ளலாம்.உறுப்பினரானவுடன் இமெயில் முகவரி பெட்டியை நினைவு படுத்தும் அமைப்போடு ஒரு பக்கம் வந்து நிற்கிறது.

அதில் வலது பக்கத்தில் செயல்களுக்கான பட்டியலும் அதற்கு பக்கத்தில் வேலைகளை குறித்து வைப்பதற்கான பகுதியும் தோன்றுகிறது.டிவிட்டர் கட்டம் அல்லது பேஸ்புக் சுவர் போல தோன்றும் அதில் மனதில் உள்ள வேலை டைப் செய்து சேமித்து கொள்ளலாம்.குறிப்பிட்ட அந்த வேலையை செய்து முடிப்பதற்கான தேதியையும் உடன் குறிப்பிடலாம்.

அதற்கு முன்பாக அந்த வேலை அலுவலகம் சார்ந்ததா,வீட்டு வேலை தொடர்பானதா என்பதை தீர்மானித்து கொள்ளலாம்.வலது பக்கம் பட்டியலில் வீடு அல்லது அலுவலகம் என்னும் பத்ததை கிளிக் செய்தால் போதும்,வேலைகளை அதற்கேற்ப வகைப்படுத்தி கொண்டு விடலாம்.ஷாப்பிங்,படிப்பது,தனிப்பட்ட விஷயம் போன்ற வகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.தேவைப்பட்டால் புதிய வகைகளையும் சேர்த்து கொள்ளலாம்.

அலுவலகம் சென்றதும் என்ன வேலை செய்ய வேண்டும்,யாருக்கு போன் செய்ய வேண்டும் போன்றவற்றை எல்லாம் குறித்து வைத்து கொள்ளலாம்.அதே போல வீட்டிற்கு வாங்கி செல்ல பொருட்கள் போன்றவற்றையும் குறித்து கொள்ளலாம்.

வார இறுதியன்று சினிமா பார்க்க நினைத்திருந்தால் அதையும் குறித்து கொள்ளலாம்.படிக்க வேண்டிய புத்தகங்கள் ,சந்திக்க வேண்டிய நண்பர்கள் ,கலந்து கொள்ள வேண்டிய விழாக்கள் போன்றவற்றையும் குறித்து கொள்ளலாம்.

இமெயிலுக்கு பதில் அளிக்க வேண்டியது,நண்பர் அனுப்பியதாக சொன்ன யூடியூப் வீடியோவை பார்ப்பது என சகல விதமான செயல்களையும் நினைவில் கொள்ள இந்த பட்டியலை பயன்படுத்தி கொள்ளலாம்.

வேலைகளை வகைப்படுத்தி கொள்வதோடு அவற்றை முன்னுரிமை அடிப்படையில் மாற்றி அமைத்து கொள்ளலாம்.இப்படி மாற்றுவதும் சுலபமானது.அதே போல வேலைகளில் திருத்தங்களை செய்ய வேண்டும் என்றாலும் சுலபமாகவே அதனை மேற்கொள்ளலாம்.

செயல்களை தள்ளி போட விரும்பினாலும் தேதியை மாற்றி கொள்ளலாம்.செய்து முடித்த வேலைகளின் பட்டியலையும் பார்க்க முடியும்.

இநத சேவையை பயன்ப்டுத்த துவங்கிய பின் இப்படியெல்லாம் கூட திட்டமிட முடியுமா?என்ற வியப்பு ஏற்படும்.அதே போல சினிமா பார்ப்பதில் துவங்கி,திருமணத்திற்கு செல்வது வரை நினைத்த எந்த வேலையையும் மறக்காமல் நினவில் கொள்ளவும் இந்த தளம் உதவும்.

இதனை பயன்படுத்தம் போதே திட்டமிடலையும் பட்டை தீட்டி கொண்டுவிடலாம்.

இணையதள முகவரி;http://todo.ly/

——————————-
திட்டமிட எளிமையான இணையதளம்.

திட்டமிட உதவும் தளங்களில் எளிமையானது என்னும் பட்டத்தை ‘நவ் டு திஸ்’ தளத்திற்கு தான் வழங்க வேண்டும்.எளிமையான் வழி என்றால் அப்படியொரு எளிமையான வழியை முன் வைக்கிறது இந்த தளம்.

திட்டமுடிவதற்கான அட்டவணை,வகைப்படுத்த படிட்யல்,செய்து முடித்த செய்லகள் என எதுவுமே இல்லாமல் தூய்மையான வெள்ளை காகிதமாக வரவேற்கிறது இந்த தளம்.

அதில் நடு நாயகமாக சின்னதாக ஒரு கட்டம் இருக்கிறது.அந்த கட்டத்தில் செய்ய வேண்டிய செய்லை குறிப்பிட்டு கிளிக் செயதால் போதும் திட்டமிடல் முடிந்தது.அதனை நீக்கி கொள்ளலாம்.அல்லது கிளியர் செய்து விட்டு அடுத்த வேலையை குறித்து கொள்ளலாம்.வேலை முடிந்தால் ஒட்டு மொத்தமாக நீக்கி விடலாம்.அவ்வளவு தான்.

காலண்டரின் ஆதிக்கம் இல்லாமல் திட்டமிடல் அட்டவனையின் சுமை இல்லாமல் சுலபமாக செய்லபட உதவும் உத்தேசத்தோடு ஜாக் லாட்விக் என்பவர் இந்த சேவையை உருவாக்கியுள்ளார்.தளத்தை போலவே இதற்கான அறிமுக பகுதியும் ரத்தின சுருக்கமாக அத்தனை எளிமையாக இருக்கிறது.

http://nowdothis.com/

——————————–

திட்டமிடல் தொடர்பான மேலும் சில பதிவுகள்;http://cybersimman.wordpress.com//?s=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D