வீடியோவுக்கான பின்ட்ரெஸ்ட்!.

இணைய பலகை என்று சொல்லப்படும் பின்ட்ரெஸ்ட்டில் இணையத்தில் பார்க்கும் நல்ல விஷயங்களை புகைப்படமாக சேமித்து வைக்கலாம்.இதே போலவே வீடியோ கோப்புகளை சேமித்து வைப்பதற்காக சேவையாக விடின்டிரெஸ்ட் தளம் அறிமுகமாகியுள்ளது.

பின்ட்ரெஸ்ட் தளத்திலேயே கூட வீடியோ கோப்புகளையும் சேமிக்கலாம் என்றாலும் அது பிரதானமாக புகைப்படம் சார்ந்த சேவையாகவே அமைந்துள்ளது.ஆனால் விடின்டிரெஸ்ட் முழுக்க முழுக்க வீடியோ சேமிப்பு சேவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

பின்ட்ரெஸ்ட் போலவே இதிலும் இணையத்தில் நம்மை கவரும் வீடியோக்களை நமக்கான பலகையில் சேமித்து வைக்கலாம்.பின்ட்ரெஸ்ட் போலவே பல வித தலைப்புகளின் கீழ் பலகைகளை உருவாக்கி அதில் வீடியோக்களை சேமிக்கலாம்.இதற்கான புக்மார்க்லெட்டையும் தருவித்து கொள்ளலாம்.

பார்த்து ரசித்த யூடியூப் வீடியோக்களை குறித்து வைக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.ஆனால் விடின்ட்ரெஸ்ட் அதை மிகவும் சுலபமாக்கியுள்ளது.

அதிலும் பொருத்தமான தனித்தனி தலைப்புகளில் வீடியோக்களை வகைப்படுத்தி வைப்பது விரும்பிய வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் உதவியாக இருக்கும்.உதாரணத்திற்கு கிரிக்கெட் என தலைப்பிட்டு கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை அதில் இடம் பெற வைக்கலாம்.

இந்த வீடியோக்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இதே போல மற்றவர்கள் சேமித்து வைத்துள்ள வீடியோக்களை பார்க்கலாம்.அவற்றில் நமக்கு பிடித்தவற்றை நமது பக்கத்தில் சேமித்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் உறுப்பினர்கள் சேமித்து வைத்துள்ள வீடியோக்கள் வாயிலாக சுவாரஸ்யமான புதிய வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.தொழில்நுபம்,பொழுதுபோக்கு,சாதனங்க‌ள்,அறிவியல், விளையாட்டு என எண்ணற்ற வகைகளில் வீடியோக்களை காணலாம்.அந்த வகையில் புதிய வீடியோக்களை கண்டறிவதற்கான எளிய வழியும் கூட!.

அதனால் தான் இந்த தளம் தன்னை வீடியோ கண்டுபிடிப்பு இயந்திரம் என வர்ணித்து கொள்கிறது.

உறுப்பினர்களின் வீடியோ பகிர்வை பார்த்து ரசிப்பதோடு அவை குறித்து கருத்து பரிமாற்றத்திலும் ஈடுபடலாம்.இந்த உரையாடல் மூலமாக புதிய நட்பையும் தேடிக்கொள்ளலாம்.வீடியோ சார்ந்த நட்பு.

இணையதள முகவரி;http://vidinterest.com/#

———-

பின்ட்ரெஸ்ட் தொடர்பான முந்தைய பதிவுகள்;

1;செய்திகளை வெட்டி ஒட்ட ஒரு இணையதளம்

2.பின்ட்ரெஸ்ட்;ஒரு அறிமுகம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “வீடியோவுக்கான பின்ட்ரெஸ்ட்!.

 1. புதிய திரட்ட்டி http://tamiltoplink.com தமிழ் தொடர்பான பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  Reply
 2. malar

  நல்ல பயனுள்ள தகவல்….

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  வலைப்பூ தலையங்க அட்டவணை
  info@ezedcal.com
  http//www.ezedcal.com

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *