இணைய வடிவமைப்பின் அடிப்படைகளை அறிய ஒரு தளம்.

இப்போது பார்க்கப்போகும் இணையதளம் இணைய வடிவமைப்பு தொடர்பானது என்றாலும் இது இணைய வடிவமைப்பாளர்களுக்கானது மட்டும் அல்ல;எலோருக்குமானது.

சொல்லப்போனால் இந்த தளம் வடிவமைப்பாளர்களை விட இணையவாசிகளை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது.அதாவது இணையவாசிகளுக்காக வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

எந்த வடிவமைப்பாளரும் இந்த தளத்தை பார்த்ததுமே மகிழ்ந்து போவார்கள்.அதோடு தங்களை நாடி வரும் வாடிக்கையாளர்களை எல்லாம் இந்த தளத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.

காரணம் இந்த தளம் இணையதளங்களுக்கான அடிப்படை அம்சங்களை முன்வைக்கிறது.இந்த அம்சங்களை பார்த்து இணைய வடிவமைப்பை கற்று கொள்ள முடியாது என்றாலும் ஒரு இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அது தான் இந்த தளத்தின் நோக்கம்.அதாவது இணைய வடிவமைப்பின் அடிப்படை அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.செய்யக்கூடியாவை மற்றும் செய்யக்கூடாதவை என்று சொல்லப்படுவது உண்டலாவா ,இணைய வடிவமைப்பை பொருத்தவரை செய்யக்கூடியவற்றையும் செய்யக்கூடாதவற்றையும் இதில் உள்ள கட்டுரைகள் எடுத்துறைக்கின்றன.

இந்த அம்சங்கள் எல்லாம் இணைய வடிவமைப்பாளர்களுக்கு அத்துபடி.இவற்றை மனதில் வைத்து கொண்டு தான் வடிவமைப்பிலே ஈடுபடுவார்கள்.ஆனால் இணையதளம் விரும்புவோர்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை அல்லவா?அவர்களுக்கு இணைய வடிவமைப்பின் சூட்சமங்களை புரிய வைப்பது தான் இந்த தளத்தின் நோக்கம்.

இதையே வேறுவிதமாக சொல்வதாயின் அடாவடி வாடிக்கையாளர்களிடம் மாட்டி கொண்டு அல்லல் படும் இணைய வடிவமைப்பாளர்களை காப்பாற்றுவதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது இப்படி தான் இணையதளம் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் வாடிக்கையாளர்கள் அல்லது ஏடாகூடமாக கேள்விகள் கேட்டு வெறுப்பேற்றும் வாடிக்கையாளர்களுக்கு இணையதள அடிப்படைகளை உணர்த்துவது தான் இந்த தளத்தின் பிரதான நோக்கம்.

சொந்த இணையதளம் வேண்டும் என்று வரும் வாடிக்கையாளர்கள் பல நேரங்களில் எந்த அம்சம் வேண்டும் அந்த அம்சம் வேண்டும் என்றெல்லாம் கேட்டு வடிவமைப்பாளர்களை திணறடித்து விடுவார்கள்.தங்களுக்கான இணையதளம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளும் உரிமை வாடிக்கையாளர்களுக்கு உண்டு தான் .அவற்றை நிறைவேற்றி தருவது தான் வடிவமைப்பாளரின் வேலை.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த விருப்பம் இணைய அடிப்படைக்கும் இணைய அழகியலுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும்.இல்லையென்றால் வடிவமைப்பாளரால் எதுவும் செய்ய முடியாது.

உதாரணத்திற்கு வாடிக்கையாளர் எல்லா தகவல்களும் முகப்பு பக்கத்திலேயே இருக்க வேண்டும் என விரும்பலாம்.ஆனால் முகப்பு பக்கத்தில் இப்படி எல்லா தகவல்களையும் போட்டு அடைத்தால் பார்ப்பதற்கும் நன்றாக இருக்காது,தேவையான தகவல்களை பளிச்சென தெரிவிக்க கூடிய வகையிலும் இருக்காது .எனவே வடிவமைப்பாளர் முக்கிய தகவல்கள் மட்டுமே கொண்ட முகப்பு பக்கத்தை வடிவமைக்கலாம்.

ஆனால் வாடிக்கையாளரிடம் எடுத்து சொன்னால் அவரால் இதை புரிந்து கொள்ளாமல் வடிவமைப்பாளர் மீது அதிருப்தி கொள்ளலாம்.தான் சொல்வதை வடிவமைப்பாளர் நிறைவேற்ற மறுப்பதாக கோபம் அடையலாம்.

வடிவமைப்பாளர் பாவம் என்ன செய்வார்.ஒன்று வாடிக்கையாளரிடம் பொருமையாக காரணங்களை எடுத்து சொல்லலாம்.அல்லது அவரோடு வாதிடலாம்.அகராதி பிடித்த வாடிக்கையாளர் என்றால் ‘நான் சொல்வதை நிறைவேற்றாமல் சட்டம் பேசுகிறீர்களா? என்றும் பதில் விவாதம் செய்யலாம்.
செல்வாக்கு மிக்க வாடிக்கையாளர் என்றால் ஒரு சிறு சைகையிலேயே தனது அதிருப்தியை தெரிவித்து விலகி விடலாம்.

இது போன்ற நேரங்களில் மிகவும் பொருமையாக இணையதள வடிவமைப்பின் அடிப்படையான அம்சங்களை விளக்கி சொல்லி புரிய வைப்பது நல்ல பயனை தரலாம்.

அதை தான் வீநட்ஜ் இணையதளம் செய்கிறது.

இந்த தளத்தில் இணையதள வடிவமைப்பு தொடர்பான அடிப்படை அம்சங்களை விளக்கும் கட்டுரைகள் பலவேறு தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.

வடிவமைப்பாளர்கள் பிரச்சனைக்குறிய வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் போது அவரோடு மல்லுக்கட்டாமல் இந்த தளத்திற்கு அனுப்பி வைத்துவிடலாம்.எந்த அம்சத்தில் சந்தேகமே அது தொடர்பான பகுதியில் கிளிக் செய்து தெளிவு பெறலாம்.

உதாரணமாக இணையதளத்தில் எங்கு பார்த்தாலும் காலியிடம் விடப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் அதிருப்தி தெரிவித்தால் இந்த தளத்தில் உள்ள வெற்றிடம் பற்றிய கட்டுரை அவர்களுக்கு சரியான விளக்கத்தை அளிக்கும்.வெற்றிடம் என்று சொல்வதைவிட வென்மை பகுதி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று ஆரம்பிக்கும் இந்த கட்டுரை வென்மை பகுதி எப்படி இனைய அழகுக்கும் தெளிவிக்கும் உதவுகிறது என விளகுகிறது.

இதே போலவே வடிவமைப்பின் அனைத்து அம்சங்களையும் அழகாக எளிமையாக விளக்குகிறது.இவற்றை படித்துப்பார்த்தால் இணையதள வடிவமைப்பு தொடர்பான தெளிவை பெறலாம்.அப்போது வடிவமைபாளர் சொல்வதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

இணையதள முகவரி;http://weenudge.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “இணைய வடிவமைப்பின் அடிப்படைகளை அறிய ஒரு தளம்.

  1. தகவலுக்கு மிக்க நன்றி….

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    Reply

Leave a Comment

Your email address will not be published.