திரட்டிகளின் அடுத்த வடிவம்.

minglewing
பின்ரெஸ்ட் போலவே இருக்கும் மற்றொரு தளம் ‘மிங்கில்விங்’.தோற்றத்தில் அச்சுஅசல் பின்ரெஸ்ட் போலவே இருந்தாலும் இந்த தளம் செயல்பாட்டில் கொஞ்சம் வேறுபடவே செய்கிறது.

முகப்பு பக்கத்தில் கட்டம் கட்டமாக‌ புகைப்படத்தோடு செய்திகளுக்கான இணைப்புகள் இடம் பெறுகின்றன.எல்லாமே பேஸ்புக்கில் பகிரப்பட்டவை.

பேஸ்புக்கில் பகிர்ந்தவற்றை மறுபடியும் இங்கே பகிர வேண்டும் என்று கேட்கலாம்.விஷயம் என்னவென்றால் சமுகவலைப்பின்னல் சேவையான பேஸ்புக் பிரதானமாக நண்பர்களுக்கான வலைப்பின்னல்.அதில் பகிர்பவை அதற்கான நட்பு வட்டத்திலேயே அடங்கிவிடும்.நல்ல விஷயங்களை ஏன் ஒரு சமூக வட்டத்திற்குள் சுருக்கி கொள்ள வேண்டும்.

அது தான்,நட்பு வட்டத்துக்கு வெளியே பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை மிங்கில்விங் தருகிறது.பேஸ்புக் உறையாடல்களுக்கு சிறகு முளைக்க வைப்பதாக இந்த தளம் சொல்கிறது.அதாவது பேஸ்புக்கில் வெளியிடுபவற்றை உலகோடு பகிர்ந்து கொள்வதை இப்படி சிறகு முளைப்பதாக சொல்கிறது.தளத்தின் பெயரிலும் அந்த சிறகு ஒட்டிக்கொண்டிருக்கிறது.

பேஸ்புக் கணக்கை கொண்டே இந்த தளத்திலும் உறுப்பினராக பகிர்ந்து கொள்ளலாம்.செய்தி,கட்டுரை,வீடியோ என எதை வேண்டுமானலும் பகிரலாம்.

இந்த பகிர்வுகள் அவற்றுக்கு உரிய தலைப்பில் தனித்தனியே பட்டியலிடப்படுகின்றன.இசை,அரசியல்,பொழுதுபோக்கு,தொழில்நுட்பம் என அவரவர் விரும்பும் தலைப்பை தேர்வு செய்து அதில் உள்ள பகிர்வுகளை படிக்கலாம்.

உண்மையிலேயே சுவாரஸ்யமான பயனுள்ள இணைப்புகளுக்கு இவை அழைத்து செல்கின்றன.குறிப்பிட்ட ஒரு உறுப்பினரின் மற்ற பகிர்வுகளையும் பார்க்கலாம்.அவற்றுக்கு கருத்தும் தெரிவிக்கலாம்.

பின்ரெஸ்ட் தாக்கத்தை இந்த தளமும் மறுக்கவில்லை. சொல்லப்போனால் கொஞ்சம் ரெடிட்.கொஞ்சம் பின்ரெஸ்ட் இரண்டும் சேர்ந்த கலவை என்றே தன்னை வர்ணித்து கொள்கிறது.

மிகச்சரியான அறிமுகமும் கூட!

இணைய திரட்டியான ரெடிட் போலவே பயனுள்ள செய்திகளையும் இணைப்புகளையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.அவை அழகாக பின்ரெஸ்ட் போலவே தலைப்பின் கீழ் புகைப்படங்களோடு கட்டம் கட்டமாக அடுக்கப்படுகிறது.பார்வைக்கும் சரி தேர்வுக்கும் சரி இது மிகுந்த சுலபமாக இருப்பதை பயன்படுத்தி பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் திரட்டிகளின் அடுத்த வடிவம் என்று இதனை சொல்லலாம்.

இணைய முகவரி.http://minglewing.com/#

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.