நரேந்திர மோடி போன் வாங்கிடீங்களா?

modiphoneஇந்தியா முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுவதாக சொல்கிறார்கள். இது உருவாக்கப்பட்ட அலை என்றும் சொல்கிறார்கள். இந்த அலை முதலில் இணையத்தில் தான் வீசத்துவங்கியது. இப்போதும் இதன் மையம் இணையத்தில் தான் இருக்கிறது.

எல்லாம் மோடியின் இணைய படை செய்த வேலை. மோடியின் ஆதர்வாளர்கள் இணையத்தை எப்படி பயன்ப‌டுத்துவது என்பதில் நிபுணர்களாக இருக்கின்றனர்.  இணையத்தில் அவர்கள் காட்டிவரும் உற்சாகம் மோடி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி பேச வைத்தது. தனிப்பட்ட முறையில் நரேந்திர மோடியும் தொழில்நுட்ப பயன்பாட்டை புரிந்தவராக இருப்பதால், அதிலும் குறிப்பாக பிரச்சார நோக்கில் அறிந்திருக்கிறார். அவர் பேஸ்புக் மற்றும் டிவிட்டரை பயன்படுத்தும் விதமும் இணையத்தில் அவருக்கு ஆதரவு அலை வீச வைத்திருக்கிறது.அல்லது அது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிற‌து.

மோடியின் இந்த ஆதரவு அலை அவரது பெயரில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

ஸ்மார்ட் நமோ எனும் பெயரில் இந்த போன் அறிமுகமாகியுள்ளது. இந்த போனுக்காக என்று பிரத்யேக இணையதளமும் அமைக்கப்பட்டுள்ள‌து. நாங்கள் மோடியின் ஆதரவாளர்கள் என்று இந்த தளம் வர்ணித்து கொள்கிற‌து. நவீன இந்தியாவின் இரும்பு மனிதருக்காக இந்த ஆன்ட்ராய்ட் போனை உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போனின் செயல்திறன் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களும் இடம் பெறுள்ளன. இந்த தளம் மூலமே வாங்கலாம்.தேர்தல் களம் விந்தையானது. கூட்டம் கூடும் .ஓட்டு விழாது. மோடியில் இணையத்தில் ஆதரவு குவிகிறத்.வாக்குகள் விழுமா?

மோடி போனுக்கான தளம்: http://www.smartnamo.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.