டிவிட்டரில் நடந்த வியக்க வைக்கும் உரையாடல்.

idfகுறும்பதிவு சேவையான டிவிட்டரில் தினம் தினம் ஆயிரம் உரையாடல்கள் நிகழ்கின்றன. தகவல் பகிர்வை கடந்து உரையாடலை சாத்தியமாக்குவது தான் டிவிட்டரின் தனிச்சிறப்பு. ஆனால் நிஜ வாழ்க்கையில் நிகழ வாய்பில்லாத உரையாடலை கூட சாத்தியம்மாக்குவது தான் டிவிட்டரின் கூடுதல் சிறப்பு . இதற்கான சமீபத்திய உதாரணம், நேர் எதிர் துருவங்களாக இருக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராட்ட குழுவான ஹமாசுக்கும் டிவிட்டரில் நிக்ழந்த உரையாடல்.
இஸ்ரேல் ஹமாசை தீவிரவாத குழு என்கிறது. ஹமாஸ் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க போராடுவதாக கூறுகிறது.இரு தரப்புக்கும் இடையே பரஸ்பரம் தாக்குதல்கள் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
சரியோ தவறோ இஸ்ரேல் தீவிரவாத செயல்களை சிறிதும் பொறுத்து கொள்வதில்லை. கைது மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயங்குவதில்லை. இந்த செயல்களை தான் ஹமாஸ் தன் இருப்புக்கான நியாமமாக கருதுகிறது.
இப்படி தான் இஸ்ரேல் சமீபத்தில் 2012 பஸ் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பாலஸ்தீனர் ஒருவரை கைது செய்தது. இந்த நடவடிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து விட்டார்.
இஸ்ரேலின் நாணுவ செய்தி தொடர்பாளர் பீட்டர் லெர்னர் இந்த நடவடிக்கைக்கு விளக்கம் அளித்து குறும்பதிவை ஒன்றை வெளியிட்டார்.
இஸ்ரேலை போலஃ ஹமாஸ் அமைப்பும் டிவிட்டரில் இருக்கிறது. ஹமாஸின் ராணுவ பிரிவான அல்சாம் பிரிகேட்ஸ் இந்த குறும்பதிவுக்கு பதில் குறும்பதிவு ஒன்றை வெளியிட்டது.அதில் பால்ஸ்தீனம் விடுதலை பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என குறிப்பிடப்பட்டிருந்தது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ( #Palestine”) போன்ற ஹாஷ்டேகும் அதில் இடம் பெற்றிருந்தது.
இஸ்ரேலின் லெனார் இந்த குறும்பதிவை பார்த்து விட்டு அதற்கும் பதில் அளித்தார். இஸ்ரேல் இங்கே நீடித்து இருக்கும் என்று குறும்பதிவிட்டவர் இஸ்ரேல் நிலைப்பாட்டுக்கு ஆதரவான ஹாஷ்டேகுகளையும் இணைத்திருந்தார். ( #TerrorDoesntPay.”)
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் டிவிட்டரில் கருத்துக்களை வெளியிடுவது இது முதல் முறை அல்ல. ஆனால் அது பொதுவாக ஒரு வழி பாதையாகவே இருக்கும். முதல் முறையாக ஒரு தரப்பு தெரிவித்த கருத்துக்கும் மற்றொரு தரப்பு நேரடியாக பதில் அளித்து உரையாடியுள்ளது தற்போது நிகழ்ந்துள்ளது.
ஹமாஸ் குறும்பதிவுகளுக்கு பதில் அளிப்பதில்லை எனும் நிலை மாறி , இப்படி நேரடியாக பதில் அளிக்க காரணம் , இரு தர‌ப்பின் வாதத்தையும் பின் தொடர்பாளர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக தான் என்று லெனார் கூறியுள்ளார். இதுவே சமூக ஊடகத்தின் சிறப்பு என்றும் கூறியுள்ளார்.
உண்மை தான், இரு தரப்பு வாத்ததையும் பார்த்து டிவிட்டர்வாசிகள் முடிவுக்கு வரட்டும் யார் பக்கம் நியாயம் என்று!.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.