நீங்களும் இனி, இமெயிலை டிக்டேட் செய்யலாம்

http---dictationநீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாயம் இல்லை. பேச்சறியும் மென்பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந்தால் , நாம் சொல்வதை அது புரிந்து கொண்டு எல்லாவற்றையும் வாக்கியங்களாக எழுதித்தரும். இப்போது இந்த வசதியை உங்கள் உலாவிக்கே ( பிரவுசர்) கொண்டு வந்திருக்கிறது டிக்டேஷன்.இயோ இணையதளம்.

இந்த தளத்தை உங்களது  நட்பான உதவியாளர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதில் நீங்கள் இமெயிலை டிக்டேட் செய்யலாம் . கட்டுரை மற்றும் ஆவணங்களை டிக்டேட் செய்யலாம். நீங்கள் சொல்லுவது இருந்தாலும் அதை எழுத்து வடிவில் டைப் செய்து தருகிறது இந்த தளம். இதை பயன்படுத்துவதும் எளிதானது தான். இதன முகப்பு பக்கத்தில் மாணவர்களின் நோட்டு பக்கம் போல கோடுகளை கொண்ட குறிப்பேடு இருக்கிறது. அந்த குறிப்பேட்டின் கிழே உள்ள , டிக்டேட் செய்யவும் பகுதியை கிளிக் செய்து விட்டு , யாரோ நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்க காத்திருப்பது போல மளமளவென்று சொல்ல வேண்டும். இப்படி சொல்லப்படுவதை எல்லாம் அந்த குறிப்பேடு டைப் செய்து தரும். 

இமெயில் அனுப்புவதாக இருந்தால் , அதை டைப் செய்யாமலே இப்படி டிக்டேட் செய்து அனுப்பிவிடலாம். அட நன்றாக இருக்கிறதே என வியக்கத்தோன்றுகிறாதா? 

பொதுவாக பேச்சறியும் மென்பொருளை தனியே வாங்கி பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த தளமோ அதை தானே உள்ளீடு செய்து ,நம் பயன்பாட்டிற்கு தருகிறது. இந்த வசதி கூகுல் கூரோமிலேயே இருப்பது தான் . அது எத்தனை பேருக்கு தெரியும் எனத்தெரியவில்லை. ஆனால் இந்த தளம் கூகுல் குரோமில் உள்ளடங்கியுள்ள பேச்சறியும் மென்பொருள் வசதியை எல்லோரும் பயன்படுத்தக்கூடிய அழகான சேவையாக எளிதாக்கி தந்திருக்கிறது. பணிச்சுமை மிக்கவர்களுக்கும் ,எழுதுவதை ஒரு வேலையாக நினைப்பவர்களுக்கும் இந்த சேவை பேரூதவியாக இருக்கும்.

இவ்வளவு சொல்லிவிட்டு , இப்போது ஏமாற்றம் தரக்கூடிய ஒரு தகவல். இந்த டிக்டேஷன் சேவையை ஆங்கிலத்தில் தான் பயன்படுத்தலாம். இந்தி , தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி இல்லை. இத்தனைக்கும், இந்தியரான அமீத் அகர்வால் தான் இந்த சேவையை உருவாக்கியுள்ளார். அப்படியும் இந்தியும் இல்லை , தமிழும் இல்லை. அகர்வால் வாருங்காலத்தில் இந்திய மொழிகளை கொண்டு வருகிறாரா என பார்க்கலாம். இல்லை கூகுலு குரோம் அதை செய்ய காத்த்ருப்பாரா என்று தெரியவில்லை.

இணையதள முகவரி: https://dictation.io/

பி.கு; naviதமிழில் இது போன்ற சேவையை , அருமையான சந்திப்பிழை சரிபார்ப்பு சேவையை வழங்கி வரும் நாவி சந்திப்பிழை திருத்தி போன்ற இணையதளங்களில் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கு முதலில் இத்தகைய நல்ல தமிழ் முயற்சிகளை நாம் ஆதரிக்க வேண்டும். : 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.