கூகுள் ரோபோ காரின் முழுமையான மாதிரி அறிமுகம்

கூகுல் தானியங்கி காரை நினைவிருக்கிறதா? கடந்த மே மாதம் முன்மாதிரி வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த தானியங்கி காரின் முழுமையான முதல் மாதிரியை கூகுள் தற்போது அறிமுகம் செய்துள்ளது. விடுமுறை கால பரிசாக தானியங்கி காரின் முதல் செயல்பாட்டு வடிவை அறிமுகம் செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது.
முன்னணி தேடியந்திரமான கூகுள் எக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு முக்கிய ஆய்வு முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. கூகுள் கிளாஸ் போன்ற முயற்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் ஒரு பகுதியாக கூகுள் தானியங்கி கார் ஆய்விலும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. 2010 ம் ஆண்டு முதல் கூகுள் இதற்காக ஆய்வில் ஈடுப்பட்டு வருகிறது. இதன் பயனாக கடந்த மே மாதம் தானியங்கி காரின் முன்மாதிரி (ப்ரோட்டோடைப்) வடிவை அறிமுகம் செய்தது. டிரைவர் இல்லாமல் தானாகவே இயங்க கூடிய இந்த காரின் வெள்ளோட்ட காட்சி வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ரோபோ கார் என்றும் குறிப்பிடப்படும் இந்த கார் சாப்ட்வேர் வழிகாட்டுதலோடும் சென்சார்கள் துணையோடும் தன்னைத்தானே இயக்கி கொள்ளும். மனிதர்கள் இதில் ஹாயாக பின்சீட்டில் அமர்ந்து கொண்டால் போதுமானது. இந்த காரில் ஸ்டியரிங்கும் கிடையாது. பிரேக்கும் கிடையாது. எல்லாவற்றையும் சாப்ட்வேர் கவனித்துக்கொள்ளும். ஒரு பட்டனை அழுத்தினால் போதும் கார் போக வேண்டிய இடத்திற்கு அழைத்துச்சென்றுவிடும் என்றும் குறிப்பிடப்பட்டது.
போக்குவரத்தின் எதிர்காலம் என்றும் வர்ணிக்கப்படும் இந்த தானியங்கி கார் ஆச்சர்யத்தை மட்டும் அல்லாமல் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியது. அவற்றில் பிரதானமானது, இந்த கார் உண்மையில் நடைமுறையில் சாத்தியம் தானா ? என்பதாகதான் இருந்த்து. தானியங்கி கார்கள் எல்லாம் சரிபட்டு வருமா? போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு இதன் பின் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த விவாதமும் நடைபெற்று வருகிறது.
மெல்ல கூகுள் கார் பற்றிய பரபரப்பு அடங்கிய நிலையில் இப்போது கூகுள் இதன் முழு மாதிரி வடிவை அறிமுகம் செய்திருக்கிறது. தானியங்கி கார் முயற்சியில் மிகப்பெரிய பாய்ச்சலாக இதன் முதல் முழு செயல்பாட்டு வடிவை உருவாக்கி இருப்பதாக கூகுள் அறிவித்துள்ளது.
மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மாதிரி ஹெட்லைட் கூட இல்லாத வடிவம் என்று குறிப்பிட்டுள்ள கூகுள் தற்போது முதல் முழு தானியங்கி கார் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மே மாத அறிமுகத்திற்கு பின் பலவேறு வகையான சோதனை முயற்சியில் ஈடுபட்டு அவற்றின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக புதிய மாதிரி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்திலும் புத்தாண்டிலும் கலிபோர்னியா சாலைகளில் இந்த தானியங்கி கார் வலம் வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தானியங்கி கார்களில் பிரேக் மற்றும் ஸ்டியரிங் தேவை இல்லை என்ற போதிலும் போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்படும் வகையில் இவை மாதிரி வடிவில் சேர்க்கப்பட்டுள்ளன. அவசர தேவை எனில் கைக்களால் இயக்கி கட்டுப்படுத்தும் வசதியும் இருக்கிறது.
உருவாக்கத்திலும் ,வெள்ளோட்டங்களிலும் பாதுகாப்பு அம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சென்சார்கள் சாலையில் மேடுபள்ளங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய அம்சங்களையும் கவனத்தில் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வரும் ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட மாதிரி கார்களை உருவாக்கி போக்குவரத்து சோதனைகளில் ஈடுபட கூகுள் திட்டமிட்டுள்ளது. முதல் கட்ட சோதனையில் வெற்றி கிடைத்தால் அடுத்த கட்டமாக கலிபோர்னியாவில் மாதிரி திட்டம் ஒன்றையும் நடைமுறைபடுத்த உள்ளது. இந்த சோதனையின் போது கற்றுக்கொண்டு அந்த அனுப்வத்தின் அடிப்படையில் தானியங்கி கார் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் கூகுள் விரும்புகிறது.
கூகிள் தவிர வேறு சில நிறுவன்ங்களும் கூட தானியங்கி கார் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் பிரிட்டனின் பிரிஸ்டல் உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களில் தானியங்கி காருக்கான சோதனை முயற்சியை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
கூகுல் கார் தானியங்கி கார் திட்டத்தின் முன்னேற்றத்தை அறிந்து கொள்வதற்காக கூகுள் பிளஸ் பக்கத்தையும் அமைத்துள்ளது: https://plus.google.com/+GoogleSelfDrivingCars/posts

கூகுல் கார் பற்றிய முந்தைய பதிவு இது ;

கூகுலின் டிரைவர் இல்லாத கார் அறிமுகம்.;

http://cybersimman.com/2014/05/28/google-car/

—–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.