விக்கிபீடியாவின் 2014 ஆண்டு வீடியோ கண்ணோட்டம்

Wikipedia-798x310

2014 ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்க விருப்பமா? இந்த கேள்வியை இப்போது விக்கிபீடியாவும் கேட்டு தன் பங்குகிற்கு அருமையான ஆண்டு இறுதி வீடியோவை வெளியிட்டுள்ளது. விக்கிபீடியா வரலாற்றிலேயே முதல் முறையாக இத்தகைய ஆண்டு கண்ணோட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் முன்னனி இணைய நிறுவனங்கள் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து அளிக்கும் வழக்கம் கொண்டுள்ளன. இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாக கொண்டிருக்கின்றன. யூடீயூப் ஆண்டின் சிறந்த வீடியோ நிகழ்வுகளை தொகுப்பாக்கியது. சமூக வலைப்பின்னல் சேவைகளான டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கும் ஆண்டு இறுதி பட்டியல் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளன. தேடியந்திரமான கூகுளும் இந்த ஆண்டுக்கான தேடல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த வரிசையில் விக்கிபீடியா முதல் முறையாக இணைந்துள்ளது. இணையவாசிகள் பங்களிப்புடன் உருவாகும் கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வகிக்கும் விக்கிமீடியா அறக்கட்டளை 2014 ம் ஆண்டுக்கான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை #எடிட்2014 எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் விக்கிபீடியாவின் தன்மைக்கேற்ப அதன் பயனாளிகள் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். 2014 நீங்கள் படித்ததும் ,எடிட் செய்ததும் எனும் அறிமுகத்துடன் இந்த வீடியோ, விக்கிபீடியா பயனாளிகள் பார்வையில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறது.
செய்திகள், புகைப்படங்கள ஆகிய்வற்றின் தொகுப்பாக இந்த வீடியோ அமைந்துள்ளது.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் துவங்கி, இந்திய பொது தேர்தல், இணையத்தில் வைரலாக பரவிய ஐஸ்பக்கெட் சாலெஞ்ச், ஆப்பிரிக்காவை உலுக்கிய எபோலா நோய் என முக்கிய நிகழ்வுகளை இந்த வீடியோ திரும்பி பார்க்கிறது. குளிர்கால ஒலிம்பிக்ஸ், விண்வெளி ஆய்வு ஆகிய நிகழ்வுகளையும் இந்த 3 நிமிட வீடியோ நினைவு படுத்துகிறது.
குறைந்த பட்ஜெட்டில் 2 மாத காலத்தில் இந்த வீடியோ தொகுப்பு உருவாக்கப்பட்டதாக விக்கிமீடியா அறக்கட்டளை வலைப்பதிவு தெரிவிக்கிறது. விக்கிபீடியாவின் தன்மையை பிரதிபலுக்கும் வகையில் பயனாளிகள் பதிவேற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை கொண்டு வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் உள்ள ஒவ்வொரு படமும், காட்சியின் பயனாளிகளின் பங்களிப்பு ,நாங்கள் தொகுக்க மட்டுமே செய்துள்ளோம் என்றும் விக்கிமீடியாவின் கதைசொல்லி மற்றும் வீடியோ தயாரிப்பாளர் விக்டர் கிரிகாஸ் கூறியுள்ளார்.
சுதந்திரமாக பயன்படுத்தும் புகைப்படங்கள் எப்படி உலகின் முக்கிய நிகழ்வுகளை படம் பிடிக்க உதவுயுள்ளன என்பதையும் இந்த வீடியோ உணர்த்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இத்தகைய சுந்திரமான பகிர்வு மேலும் அவசியம் என்பதை எபோலா தொடர்பான செய்திகளுக்கான பழைய படங்கள் உணர்த்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் விக்கிபீடியாவை தகவல்களை அறிய பயன்படுத்தும் நிலையில் எபோலா நோய் பாதிப்பு , கூட்டு முயற்சியில் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலா பற்றிய தகவல்களை விரிவாக அளிப்பதற்காக டிரான்ஸ்லேட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் மற்றும் விக்கி பிராஜெக்ட் மெட் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் மூலம் தன்னார்வளர்கள் இணைந்து எப்போலா தகவல்களை 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர் என்றும் பெருமையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்கிமீடியா வலைப்பதிவு : http://blog.wikimedia.org/2014/12/17/wikipedias-first-ever-annual-video-reflects-contributions-from-people-around-the-world/

விக்கி வீடியோ கண்ணோட்டம் :https://www.youtube.com/watch?v=ci0Pihl2zXY

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *