உங்கள் பாஸ்வேர்டு என்ன?

jimmy-kimmel-password-798x310

உங்கள் பாஸ்வேர்டு என்ன? இது இணைய யுகத்தில் அநாகரீமான கேள்வி தான். ஆனால் இந்த கேள்வி இரண்டு காரணங்களுக்காக உங்களிடம் கேட்கப்படலாம். முதல் காரணம் பற்றி அறிய இந்த பதிவின் இரண்டாம் பாதியை படிக்கவும். இரண்டாம் காரணம், உலகின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலுடன் உங்கள் பாஸ்வேர்டை ஒப்பிட்டு பார்க்க சொல்வதற்காக.  ஆம், இந்த பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டு இருந்தால் முதலில் அதை மாற்றி விடுங்கள்.

ஸ்பிலேஷ் டேட்டா எனும்  நிறுவனம் கடந்த ஆண்டின் பிரபலமான பாஸ்வேர்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்டாண்டு வெளியிடப்படும் பட்டியல் என்றாலும் இது மிகவும் முக்கியமானது.  இணைய உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டாப் டென்னில் இடம்பெற்றுள்ள பாஸ்வேர்டுகளில் பாஸ்வேர்டு தொடர்பான உளவியலும் ஒளிந்திருக்கிறது.

123456 என்பதும் பாஸ்வேர்டு என்பதுமே இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அதாவது இவை தான் அதிகமானோரால் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டும் இவை தாம் முதலில் இருந்தன. ஆக பாஸ்வேர்டு பழக்கம் அதிகம் மாறிவிடவில்லை. அதனால் என்ன என்கிறீர்களா? அந்த அளவுக்கு பயனாளிகளின் இணைய கணக்குகள் எளிதாக தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்பு இருக்கிறது என பொருள்.

பாஸ்வேர்டில் தனித்தன்மை இல்லாமல் பொதுத்தன்மை இருந்தால் என்ன ஆகும்? ஹேக்கர்கள் லட்டு கணக்காக ஊகித்து விடமாட்டார்கள் ? இதை தான் இந்த பிரபலமான பாஸ்வேர்டு மீண்டும் நிருபிக்கிறது.

இந்த பட்டியல் எப்படி தயாரிக்கப்பட்டது தெரியுமா? சமீபத்தில் சோனி நிறுவனம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது போல அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு கொத்து கொத்தாக பாஸ்வேர்டுகள் ஹேக்கர்களால் வெளியிடப்படுவது உண்டல்லவா? அப்படி வெளியிடப்பட்ட 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பாஸ்வேர்டுகளை கொண்டு தான் இந்த பாஸ்வேர்ர்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே உங்கள் பாஸ்வேர்டு இந்த பட்டியலில் இருந்தால் உடனே மாற்றுங்கள். அதே போல , இத்தைகைய பொதுவான பாஸ்வேர்டை வைத்துக்கொள்ளும் வழக்கத்தையும் மாற்றுங்கள்.

ஆனால் இந்த பட்டியலில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை காண முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக எழுத்துக்களும் ,எண்களும் கலந்த பாஸ்வேர்டுகள் பல இதில் உள்ளனவாம். இது போன்ற பாஸ்வேர்டுகள் பாதுகாப்பானவை. நீங்களும் இதே முறையில் முயற்சிக்கலாம். ஆனால் தயவு செய்து நீங்கள் படித்த பள்ளி , பிடித்த விளையாட்டு , பிறந்த நாள் போன்றவற்றை எல்லாம் பாஸ்வேர்டாக வைத்துக்கொண்டு ஹேக்கர்களுக்கு வேலை இல்லாமல் செய்ய வேண்டாம்

இனி, இரண்டாம் பாகத்திற்கு வருவோம். இது பாஸ்வேர்டு தொடர்பாக பார்க்க வேண்டிய வீடியோ;

பாஸ்வேர்டு விழிப்புணர்வை வலியுறுத்தும் வீடியோ!

உங்கள் பாஸ்வேர்டு என்ன என யாராவது கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? பாஸ்வேர்டை யாராவது வெளியே சொல்வார்களா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். இதே கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால் நீங்கள் உங்களை அறியாமல் பாஸ்வேர்டை பகிர்ங்காமாக சொல்லிவிடும் வாய்ப்பு இருக்கிறது. சந்தேகமாக இருந்தால் , உங்கள் பாஸ்வேர்டு என்ன ? எனும் யூடியூப் வீடியோவை பார்க்கவும். இந்த வீடியோ உங்களை சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும்.

ஏனெனில் இதே கேள்வியை பலரிடம் கேட்டு அவர்களது பாஸ்வேர்டை காமிரா முன் சொல்லவைத்திருக்கிறது இந்த வீடியோ. பலரும் தங்களை அறியாமல் பாஸ்வேர்டை சொல்லிவிட்டு பின்னர் நாக்கை கடித்துக்கொண்டு அசடு வழிவதை பார்த்தால் ஐய்யோ பாவம் என இருக்கும். ஆனால் யாருக்கு வேண்டுமானாலும் இந்த நிலை ஏற்படலாம் என்பது தான் பாஸ்வேர்டு நிதர்சனம்.

இமெயில் உள்ளிட்ட இணைய சேவைகளுக்கு டிஜிட்டல் பூட்டாக பயன்படும் பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் அதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக இருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனால் இந்த புரிதலை மீறி பலரும் பாஸ்வேர்டை கேட்டதும் சொல்லிவிடும் தன்மை கொண்டிருக்கின்றனர் என்பது தான் வேதனையான உண்மை.

புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஜிம்மி கிம்மெல் இதை தனது நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா சைபர் பாதுகாப்பு பற்றியும் ஹேக்கிங் போன்றவற்றை முறியடிப்பது பற்றியும் சமீபத்தில் பேசினார். இதை குறிப்பிட்ட ஜிம்மி கிம்மெல், சைபர் பாதுகாப்பு தொடர்பாக பயனாளிகளி எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை அறிய அவர்கள் பாஸ்வேர்டை கேட்டுப்பார்க்கலாம் என்று கூறிவிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பலரிடம் பாஸ்வேர்டை கேட்டு அந்த பதிலை காமிராவில் பதிவு செய்திருக்கிறார்.

ஆச்சர்யப்படும் வகையில் அல்லது அதிர்ச்சி அளிக்கும் வகையில் பலரும் பளிச் என்று தங்கள் பாஸ்வேர்டை சொல்லியிருக்கின்றனர். உதாரணத்திற்கு முதலில் கேட்கப்பட்ட பெண்ணிடம், சைபர் பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சி இது, உங்கள் பாஸ்வேர்டு என்ன என்று கேட்டதும், அவர் எனது செல்ல நாய் மற்றும் பள்ளி படிப்பு முடித்த ஆண்டு சேர்ந்தது என்று கூறிவிட்டு, அடுத்த கேள்விகளுக்கு நாயின் பெயர் மற்றும் பள்ளி ஆண்டை பதிலாக அளித்திருக்கிறார். அதிலிருந்து அவர் பாஸ்வேர்டை எளிதாக ஊகித்து விடலாமே.

இப்படி தான் பலரும் பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டுள்ளனர். பாஸ்வேர்டை எப்படி வெளியே சொல்வது என புத்திசாலித்தனமாக கேட்டவர்கள் கூட, இல்லை உங்களை பாஸ்வேர்டு பலவீனமானதா என சோதிக்க வேண்டும் என கேள்விகளால் கொக்கி போட்டதும் பாஸ்வேர்டை சொல்லியிருக்கின்றனர்.

பாஸ்வேர்டு பற்றிய விழிப்புணர்வு இப்படி தான் இருக்கிறது என புரிய வைக்கும் இந்த நிகழ்ச்சியின் வீடியோ வாட் ஈஸ் யுவர் பாச்ஸ்வேர்டு எனும் பெயரில் யூடியூப்பிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.

அநேகமாக இந்த நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்ப்டலாம். எனவே பாஸ்வேர்டு பற்றி விழிப்புணர்வு பெறுவது அவசியம்.

பாஸ்வேர்டுக்காக விரிக்கப்படும் பொறியில் பலரும் எளிதாக சிக்கி கொள்கின்றனர் என்று நீண்ட காலமாக சொல்லப்பட்டும் வரும் விஷயத்தை இந்த வீடியோவும் மெய்பித்துள்ளது.

எனவே எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள். அதோடு பாஸ்வேர்டு போன்ற உலகப்புகழ் பெற்ற பாஸ்வேர்டுகளை பாஸ்வேர்டாக கொள்ளும் வழக்கத்தையும் உடனே மாற்றுங்கள்.

பாஸ்வேர்டு எச்சரிக்கை வீடியோ: https://www.youtube.com/watch?v=opRMrEfAIiI&list=RDopRMrEfAIiI#t=0

———–

பாஸ்வேர்டு பற்றிய முந்தைய பதிவுhttp://cybersimman.com/2013/07/26/password-3/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *