தானியங்கி கார்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

3060466-inline-3-how-self-driving-cars-could-reshape-city-streetsதானியங்கி கார்களுக்கு நிங்கள் தாயரா? இதுவரை இல்லை எனில், இப்போது முதல் தயாராகி கொள்வது நல்லது. ஏன்? எதற்காக? பார்க்கலாம்…

தானாக ஓடும் கார்கள் எனும் பொருளில் ஓட்டுனர் இல்லாமல், பென்பொருள் வழிகாட்டுதலில், சென்சார்ஸ்கள் புன்னியத்தில் தானாக இயங்குவதை குறிக்கும் தானியங்கி கார்கள் முயற்சி பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருக்கலாம். கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதற்கான ஆய்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தானியங்கி கார் என்பது கருத்தாக்க நிலையில் இருந்து முன்னேறி வந்து இப்போது ஆய்வுகளும், வெள்ளோட்ட பரிசோதனைகளும் தீவிரமாகி இருக்கின்றன.

இந்த கார்கள் சாலையில் விபத்துகளை குறைக்கும், தனிநபர் போக்குவரத்தை மட்டும் அல்லாமல், பொதுப்போக்குவரத்தையும் தலைகீழாக மாற்றிவிடும் எனும் ரீதியில் வல்லுனர்களின் கருத்துக்களை அமைந்துள்ளன. ஓட்டுனர் தேவையில்லாத காரில் சாலைக்கு முன்னே கவனம் செல்த்தாமல் புத்தகம் படித்தபடியோ அல்லது சாலையோரத்தில் விரியும் காட்சிகளிலோ லயித்தபடி செல்லக்கூடிய வாய்ப்பை நினைத்துப்பாருங்கள்.

சவால்கள்
ஆனால், தானியங்கி கார்கள் ஓட்டுனர்களுக்கு விடை கொடுக்கும் நிலையை அடைவதற்கு முன்னர் பல முக்கிய சவால்களையும், பரீட்சைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. குறுக்கே வந்து விழும் மனிதர்களையும், எதிர்பாராமல் வந்து நிற்கும் விலங்குகளையும் அவற்றால் சமாளிக்க முடியுமா? போன்ற தொழில்நுட்ப நோக்கிலான கேள்விகளோடு, உள்ளே அமர்ந்திருப்பவர்களை காப்பாற்றுவதா? அல்லது நடைபாதையில் நின்றிருப்பவர்கள் உயிரை காப்பாற்றுவதா? என முடிவெடுக்க வேண்டி வரக்கூடிய நெருக்கடியாக சூழல்களில் இவை என்ன செய்யும்? என்பது போன்ற அறம் சார்ந்த கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. இன்னும் எண்ணற்ற கேள்விகளை எதிர்கொண்ட படியே தான் ஆய்வு முயற்சிகள் நடக்கின்றன.

தானியங்கி கார்கள் சாலைக்கு வந்து சேரும் முன், இன்னும் பல சுற்று சோதனைகளை கடந்தாக வேண்டும். அப்படியிருக்க தானியங்கி கார்களுக்கு நாம் தயாரா? என கேப்டதைவிட, தானியங்கி கார்கள் தயாராக இருக்கின்றவா? என கேப்டதே சரியாக இருக்கும் என பலரும் நினைக்கலாம்.

ஆனால், நடைமுறையில் இந்த கார்கள் பழக்கத்திற்கு வருவது என்பது எதிர்பார்ப்பதை விட விரைவாக நிகழ்ந்தாலும் சரி அல்லது மேலும் தள்ளிப்போனாலும், இனி வருங்காலம் தானியங்கி கார்களுக்கானது என்பது நிச்சயமாகி இருக்கிறது. பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் இந்த கருத்தாக்கத்தை உள்வாங்கிக்கொண்டு, தானியங்கி கார்களால் ஏற்படக்கூடிய மாற்றங்களையும், தாக்கத்தையும் எதிர்கொள்வது எப்படி என சிந்திக்கத்துவங்கியிருப்பதன் மூலம் இதை உணர முடிகிறது. ஒரு அழகான உதாரணமாக பென்சா எனும் வடிவமைப்பு நிறுவனம் முன்வைத்துள்ள எதிர்கால நகரங்களுக்கான வரைவு திட்டத்தை எடுத்துக்கொள்வோம். அமெரிக்காவின் நியூயார்க்கைச்சேர்ந்த இந்த வடிவமைப்பு ஆலோசனை நிறுவனம் மூன்றாம் இடம் எனும் தலைப்பில் இதற்கான வரைவை வெளியிட்டுள்ளது.

சாத்தியங்கள்
வருங்கால நகரங்கள் எப்படி இருக்கும் என கற்பனை செய்துள்ள இந்த வரைவு திட்டம் நம்ப முடியாத பல வருங்கால மாயங்களை விவரிக்கிறது. அவற்றில் ஒன்று, தானியங்கி கார்கள் சாலைப்போக்குவரத்தை மட்டும் அல்ல, நடைபாதைகளையும் மாற்றிவிடும் என்பதாக இருக்கிறது. எப்படி என்றால், தானியங்கி கார்கள் புழக்கத்திற்கு வருவதால் ஏற்படக்கூடிய பிரதான நன்மை பார்கிங் இடத்திற்கான தேவை குறைவது தான். இந்த கார்களுக்கான செயல்பாட்டு விதிகள் முற்றிலும் வேறாக இருக்கும் என்பதால் வழக்கமான கார்கள் போல இவற்றை நிறுத்தி வைக்க வீட்டிலும் வெளியேவும் இடம் தேவை வேண்டியிருக்காது. ஆகவே பார்கிங்கிற்கு என ஒதுக்கப்படும் இடம் விடுவிக்கப்பட்டு மற்ற தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்வது சாத்தியமாகும். சதுர அடி நிலம் கூட குதிரை கொம்பாக இருக்கும் நகரங்களில் இப்படி விடுவிக்கப்படும் இடம்பகுதி நகர திட்டமிடலுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
imrs.php
இந்த அம்சம் குறைந்த விலை வீடுகளை கட்டுவதை சாத்தியமாக்கும் என சுட்டிக்காட்டும் பென்சாவின் வரைவு, இன்னொரு முக்கிய மாற்றத்தையும் குறிப்பிடுகிறது. தொழில்நுட்பத்தின் விளைவாக ஏற்கனவே அலுவலக சூழலின் வரம்பும், வரையறையும் கரையத்துவங்கியுள்ளது. இப்போது அலுவலக பணியை வீட்டில் இருந்தே கவனிக்கலாம். எங்கோ ஒரு காபி கடையில் இருந்தும் கவனிக்கலாம். இனி வரும் காலத்தில் காரில் இருந்த படியேவும் கவனிக்கலாம். ஆம், காரோட்டும் கவலை நமக்கிருக்காது என்பதால் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டு லேப்டாப்பில் அலுவலக பணியில் மூழ்கி விடலாம். ஆக அலுவலக சூழலுக்கான எல்லைகள் மேலும் நீர்த்துப்போகக்கூடிய நிலையில், கட்டிடங்களுக்கும் சாலைகளுக்கும் இடையிலான வெளியின் தன்மையும் மாறும் என்கிறது இந்த வரைவு.

நடைபாதை மாற்றம்
தானியங்கி கார்கள் மின்சக்தியால் இயங்க கூடியதாக இருக்கும். விபத்தை ஏற்படுத்தாது. சத்தமும் போடாது. எனவே இந்த காரை அழைப்பதற்கான விசையை அழுத்திவிட்டு, அவை வந்து சேரும் வரை நடைபாதையிலே காத்திருக்கலாம். வாகங்கள் மோதிவிடும் என்ற அச்சம் இல்லாமல், இறைச்சலும் இல்லாத சூழலில் நின்று கொண்டிருக்கும் போது, இந்த வெளி உட்கார்ந்து கொள்ளவும் ஏற்றதாக இருக்காதா? என்று இந்த வரைவு கேட்கிறது. நடைபாதைகள் மீதான நெருக்கடி குறையும் சூழலில் அவற்றை சந்திக்கும் இடங்களாகவும், காபி மையங்களாகவும் மாற்றிக்கொள்ளலாம் எனும் விதமாக இதற்கான பதில் விரிகிறது.
இந்த எண்ணங்களின் அடிப்படையில் பென்சாவின் எதிர்கால நகரத்துக்கான சித்திரம் அமைகிறது. இது பற்றிய பாஸ்ட்கோடிசைன் இணையதள கட்டுரை : https://www.fastcodesign.com/3060466/self-driving-cars-could-revolutionize-our-sidewalks-too

இதே போல, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில், மூத்த குடிமகன்களுக்கு தானியங்கி கார்கள் வரப்பிரசாதமாக இருக்கும் என்று வயதானவர்களின் சார்பில் ஜே மேத்யூஸ் எனும் பத்திரிகையாளர் விவரித்துள்ளார். வயதானவர்களுக்கு கார் ஓட்டுவதில் உள்ள சங்கடங்களையும், சவால்களையும் தானியங்கி கார்கள் போக்கி போக்குவரத்தை எளிதாக்கும் என்று அவர் சந்தோஷப்படுகிறார்:https://www.washingtonpost.com/opinions/a-self-driving-car-will-be-my-godsend/2016/06/03/57da67a4-2028-11e6-8690-f14ca9de2972_story.html

நாம் தயாரா?
இதே நாளிதழில் வெளியான மற்றொரு கட்டுரை கார்கள் மட்டும் அல்ல, டிரக்குகளும் தானியங்கி மயமாகும் என்கிறது. இதனால் டிரக் டிரைவர்கள் வேலை இழக்கும் சூழல் உருவானாலும், டிரக்குகள் மூலம் செய்யப்படும் அனைத்து பணிகளும் தானியங்கி மயமாக்கபடலாம். சரக்குகளை ஏற்றி, இறக்குவதை பொருட்களை டெலிவரி செய்வதை ரோபோக்களே செய்யத்துவங்கலாம். இதற்கேற்ப வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு மற்றும் பதில் அளிப்பதற்கான தானியங்கி அமைப்புகள் உருவாகலாம். இத்தகைய இயந்திர ஒழுங்கின் பயனாக, நாமும் கூட பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளும் மனநிலையில் இருந்து விடுபட்டு,தேவைப்படும் போது ஆர்டர் செய்து கொள்ளும் நிலை வரலாம்.
இப்படி பல எதிர்கால சாத்தியங்களை விவரிக்கிறது அந்தக்கட்டுரை.

ஆக, தானியங்கி கார்கள் சாத்தியமாகும் போது அவை பணியிடம் முதல் கலாச்சாரம் வரை எல்லாவற்றையும் அடியோடு மாற்றும் வாய்ப்பு இருப்பதால் நாமும் அவற்றுக்கு ஏற்ப தயாராவது தான் முறை. மற்றத்தையும், தாக்கத்தையும் மனதில் கொள்வதோடு, அவற்றோடு வரக்கூடிய புதிய வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு நாமும் செயல்பட்டால், புதிய சேவைகளும், தீர்வுகளும் சாத்தியமாகும். நாம் தயாராக இருக்கிறோமா!

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *