ஐரோப்பிய தேடியந்திரம் எக்ஸாலீட்!

exa2-e1317044816343எக்ஸாலீட், இது வரை அறியாமல் இருந்தோமே என நினைக்க வைக்க கூடிய தேடியந்திரம் இல்லை, முதல் முறை அறிமுகம் செய்து கொள்ளும் போது, அட என அசர வைக்க கூடிய தேடியந்திரமும் இல்லை தான்!. ஆனாலும், தேடியந்திர பட்டியலில் எக்ஸாலிட்டிற்கு இடம் கொடுக்க வேண்டும்.

ஏனெனில் அது சொந்த தேடல் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. அதற்கென சில தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் இருக்கின்றன. இல்லாவற்றுக்கும் மேல், கூகுள் சூறாவளிக்கு முன் தாக்குப்பிடித்து நிற்கும் தனித்தன்மையும் அதற்கு இருக்கிறது.

எக்ஸாலீட் பிரான்சில் உருவான தேடியந்திரம். 2000 மாவது ஆண்டு சாப்ட்வேர் நிறுவனமாக எக்ஸாலீட் நிறுவப்பட்டது. இணையத்தின் முன்னோடி தேடியந்திரங்களில் ஒன்றால் அல்டாவிஸ்டாவை உருவாக்கியதில் பங்கேற்ற பிரான்காய்ஸ் போர்டன்கல் (François Bourdoncle) மற்றும் பாட்ரைஸ் பெர்டின் இணைந்து இந்த தேடியந்திரத்தை உருவாக்கியதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.

2004 ம் ஆண்டில் இதன் சேவை அறிமுகமாகி அடுத்த ஆண்டி வர்த்தக நோக்கில் அறிமுகமானது. 2010 ம் ஆண்டில் டாசே சிஸ்டம்ஸ் (Dassault Systèmes ) நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட பின்னர் அதன் துணை நிறுவனமாக எக்ஸாலீட் செயல்பட்டு வருகிறது.

இதன் தேடல் சேவை கிளவுட்வீயு எனும் நுட்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இணைய தேடல் மட்டும் அல்லாமல் வர்த்தக நிறுவனங்களுக்கான தேடல் சேவையையும் இந்த நுட்பத்தை கொண்டு வழங்கி வருகிறது.
எக்ஸாலீட் தேடல் சேவையை கூகுளுடன் ஒப்பிட்டுப்பார்த்து பலர் உதட்டை பிதுக்கலாம் என்றாலும், பல தேடல் அம்சங்களை இது கூகுள் அவற்றை வழங்குவதற்கு முன்னதாக அறிமுகம் செய்திருக்கிறது. இதன் புகைப்பட தேடல் விஷேசமான ஆற்றலை கொண்டிருப்பதாகவும், கவனிக்க வேண்டிய தேடியந்திரம் என்றும் சர்ச் இஞ்சின் ஜர்னல், 2007 ல் பாராட்டியுள்ளது.

எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய மேம்பட்ட தேடல் வசதி மற்றும் புக்மார்க் வசதி உள்ளிட்ட அம்சங்களை எக்ஸாலீட் கொண்டிருக்கிறது.

தேடல் வசதியை பொருத்தவரை, இணையம், புகைப்படம், வீடியோக்கள் ஆகியவற்றை தேடித்தருகிறது. விக்கிபீடியாவில் தேடும் வசதியும் தனியே உள்ளது. செய்திகளுக்கு என்று தனிப்பிரிவு கிடையாது. ஆனால் தேடல் முடிவுகளுக்கு மேல், ஒவ்வொரு குறிச்சொல்லுக்கும் ஏற்ற தற்போதைய செய்திகள் இடம்பெறுக்ன்றன.
தேடல் முடிவுகளில் உள்ள இணையதளங்களுக்கான சிறிய அளவிலான படமும் முடிவுக்கு இடப்பக்கம் இடம்பெறுகின்றன. அதற்கும் அருகே தொடர்புடைய பதங்கள், வலைப்பதிவு அல்லது விவாத குழுக்களில் தேடும் வசதி மற்றும் பல்வேறு வகையான கோப்பு வடிவங்களில் தேடும் வசதி கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ் தேடல் முடிவுகளுக்கான வகைகளும் இடம்பெறுகிறது.

தேவை எனில் மேம்பட்ட தேடல் வசதியை நாடி தேடலை பட்டைத்தீட்டிக்கொள்ளலாம். இதில் பார்க்கும் முடிவுகளை புக்மார்க் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. உறுப்பினராக இணைந்து இந்த வசதியை பயன்படுத்திக்கொளல்லாம்.

எக்ஸாலீடை பொருத்தவரை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், இது தனக்கென சொந்த தேடல் சிலந்திகளை பயன்படுத்தி இணையத்தை துழாவி, இணைய பக்கங்களை பட்டியலிட்டு அதில் இருந்து தேடித்தருகிறது. 16 பில்லியன் பக்கங்களை பட்டியலிட்டு வைத்திருப்பதாக தெரிவிக்கிறது. தொடர்ந்து இணைய பக்கங்களை பட்டியலிட்டு புதுப்பித்து வருவதாகவும், இந்த பிரம்மாண்ட பணியை ஆறு பேரை கொண்ட பொறியாளர் குழு திறம்பட மேற்கொண்டு வருவதாகவும் இதன் வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எக்ஸாலீடிற்கு நீங்கள் மாற வேண்டும் என்றில்லை. ஆனால் மாற்று தேடியந்திரமாக முயன்று பார்க்கலாம்.
தேடல் அனுபவம் என்பது பரந்து விரிந்தது என்பதை புரிந்து கொள்ளாவாவது இதை பயன்படுத்திப்பார்க்கலாம்.
எக்ஸாலீட் பற்றி இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் உண்டு. 2009 ம் ஆண்டு கூகுளுக்கு எதிரான ஐரோப்பாவில் மகத்தான இணைய கிளர்ச்சி ஒன்று வெடித்தது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளை சேர்ந்த ஆய்வு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து கூகுளுக்கு சவால் விடக்கூடிய தேடல் நுட்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டன. 2013 ல் இந்த திட்டம் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது. இதில் எக்ஸாலிட்டும் முக்கிய பங்காற்றியது.

தேடியந்திர முகவரி: https://www.exalead.com/search/web/

* சர்ச் இஞ்சின் ஜர்னல் கட்டுரை:https://www.searchenginejournal.com/exalead-a-look-into-semantic-image-search/5283/

* தமிழ் இந்துவில் எழுதிம் ஆ’வலை’ வீசுவோம் தொடரில் பிரான்சின் குவாண்ட் தேடியந்திரம் தொடர்பான கட்டுரையின் இறுதிடில் எக்ஸாலீட் பற்றிய குறிப்பு வரும். இது எக்ஸாலீட் பற்றிய விரிவான அறிமுகம்:

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.