சிறார்களுக்கான தேடியந்திரம் கிட்லே!

kiddle-search-engine-is-the-google-for-kidsஇணையத்தில் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்துவதற்காக என்று தனியே தேடியந்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரிசையில் தான் கிட்லேவும் வருகிறது.

சிறார்களுக்கு என்று தனியே தேடியந்திரம் உருவாக்கப்படுவதற்கான தேவையை எளிதாக புரிந்து கொள்ளலாம். தேடியந்திரங்களில் தேடும் போது, பிள்ளைகளின் வயதுக்கு பொருத்தமில்லாத தேடல் முடிவுகளும் தோன்றலாம். பிஞ்சு மனதை நஞ்சாக்க கூடிய ஆபாச பக்கங்களும் கண்ணில் படலாம். அது மட்டும் அல்ல, பெரும்பாலான பக்கங்கள் குழந்தைகளால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சிக்கலாக இருக்கலாம்.

இந்த காரணங்களினால் தான் குழந்தைகளுக்கான தேடியந்திரங்கள் தேவைப்படுகின்றன. இந்த தேடியந்திரங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடிய வகையில் தேடல் முடிவுகளை பட்டியலிடுகின்றன. ஆபாச பக்கங்கள் உள்ளிட்ட அவர்களுக்கு பொருத்தமில்லாத பக்கங்களை வடிகட்டி நீக்கி விடுகின்றன. எனவே சிறார்கள் இதை தைரியமாக பயன்படுத்தலாம். அதைவிட முக்கியமாக பெற்றோர்கள் அதிக கவலையோ,அச்சம் இல்லாமல் இவற்றை தங்கள் பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிக்கலாம்.

கிட்லேவும் இந்த அம்சங்களை எல்லாம் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதன் முகப்பு பக்கம் சிறார்களுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. வண்ணமயமான பின்னணியில், அசத்தலான ரோபோ இதன் லோகோவாக அமைந்துள்ளது. தேடல் முடிவுகளும் சிறார்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கூகுளில் தேடுவது போலவே இதிலும் கீவேர்டு எனும் குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம். இணைய பக்கங்கள் தவிர, புகைப்படங்கள், செய்திகள் மற்றும் வீடியோக்களை தேடலாம்.

தேடல் பட்டியலில் இடம்பெறும் முடிவுகள் பளிச் என கண்ணில் படும் வகையில் அவற்றுக்கு அருகே பெரிய அளவிலான புகைப்படங்கள் இடம்பெறுகின்றன. எழுத்துருவும் பெரிதாகவே இருக்கிறது. இவை எல்லாம் பிள்ளைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டவை.

தேடல் பட்டியலில் தோன்றும் முடிவுகள் பொதுவானவை அல்ல; சிறார்களுக்கு என்று தேர்வு செய்யப்பட்டவை. இதற்காக என்றே ஆசிரியர் குழுவை கொண்டு சிறார்களுக்கு பொருத்தமானவை என தேர்ந்தெடுக்கப்பட்ட இணையதளங்களில் இருந்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இத்தகைய பாதுகாப்பான முடிவுகளே முதல் மூன்று இடங்களில் பட்டியலிடப்படுகின்றன.

அதன் பிறகு வரும் நான்கு முடிவுகள், பொதுவான இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்றாலும், சிறுவர், சிறுமியர் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைந்தவையாக இருக்கின்றன.
8 ம் முடிவுகளுக்கு மேல் இடம்பெறுபவை, பெரியவர்களுக்கான தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. சிறார்களுக்கு இவை கடினமாக இருக்கலாம். ஆனால் பாதுகாப்பானவை!

எல்லா முடிவுகளுமே வடிகட்டப்படவை என்பதால் பிள்ளைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கலாம்.
அணுக்கள் அல்லது அகராதி போன்ற வார்த்தைகளை டைப் செய்து தேடினால் இந்த தேடியந்திரத்தின் அணுகுமுறையை சிறப்பை உணர்ந்து கொள்ளலாம். இவற்றுக்காக பட்டியலிடப்படும் முடிவுகள் பெரும்பாலும் கல்வி நோக்கில் அல்லது தகவல் நோக்கிலான இணையதளங்களில் இருந்தே அமைகின்றன. செய்திகளும் அப்படி தான். வீடியோக்களும் அப்படி தான்.

பொதுவாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தான் ஆபத்து அதிகம். ஆனால் கிட்லேவில் தேடும் போது கல்வி சார்ந்த வீடியோக்களே தோன்றுகின்றன.

இது பாதுகாப்பானது மட்டும் அல்ல, பிள்ளைகள் தேவையான இணைய பக்கங்களை இணைய கடலில் தேடி அல்லாடாமல் தங்களுக்கு பொருத்தமானவற்றை எளிதாக தேடிக்கொள்ளவும் உதவுகிறது.
ஆனால் ஒன்று கிட்லே தனக்கென சொந்த தேடல் நுட்பத்தை கொண்டிருக்கவில்லை. கூகுளின் தேடல் நுட்பத்தை தான் பயன்படுத்துகிறது. தனிப்பட்ட நோக்கத்திற்கு ஏற்ற தேடியந்திர வசதியை உருவாக்கி கொள்ள அனுமதிக்கும் கூகுளின் கஸ்டம்ஸ் சர்ச் வசதியை அடிப்படையாக கொண்டே இது செயல்படுகிறது. மேலும் பாதுகாப்பிற்கான வடிகட்டலுக்கும், கூகுளின் சேப் சர்ச் வடிகட்டல் வசதியே பயன்படுத்தப்படுகிறது.

இந்த தேடியந்திரம் கவனத்தை ஈர்த்த போது, கூகுள் அறிமுகம் செய்துள்ள சிறார்களுக்கான தேடியந்திரம் என பல செய்திகளில் குறிப்பிடப்பட்டாலும், இதற்கும் கூகுளுக்கும் தொடர்பு இல்லை. இது கூகுள் தேடல் நுட்பத்தை பயன்படுத்துகிறது. அதனால் என்ன இதுவரை உருவாக்கப்பட்ட அநேக சிறுவர் – சிறுமியர் தேடியந்திரங்களும் கூட கூகுளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை தான்.

கிட்லே பற்றி மேலும் சில குறிப்புகள்: இது பயனாளிகள் பற்றிய தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பதில்லை என்கிறது. அந்த வகையிலும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பானது. மேலும் இதன் முகவரி டாட் கோ என முடிகிறது. ஆங்கிலத்தில் சில்டர்ன் ஒன்லி என்பதன் அடையாளமாம் இது.

ஆனால், இந்த தேடியந்திரத்திற்கான அறிமுக பகுதியில், இது செயல்படும் விதம் பற்றி விளக்கப்பட்டிருக்கிறதே தவிர, இதன் பின்னே உள்ள நிறுவனம் அல்லது குழு பற்றிய தகவல்கள் இல்லை.

நிற்க, கிட்லேவின் வடிகட்டல் வசதி பாதுகாப்பனதாக கருதப்பட்டாலும், இதனால் வடிவகட்டப்படும் வார்த்தைகள் மற்றும் முடிவுகள் பிள்ளைகளுக்கு பாரபட்சமான தகவல்களை வழங்ககூடியதாக இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக வடிகட்டல் என்றால் வரக்கூடிய பிரச்சனை இது என்றாலும், பிள்ளைகளுக்கு பாதுகாப்பானை தகவல்கள் என்று நாம் வடிகட்டக்கூடியவை எந்த அளவு சரியானவை என்பது விவாத்த்திற்கு உரியது தான்.

அதோடு இன்னொரு சுவாரஸ்யமான கேள்வி, பிள்ளைகள் எதுவரை இது போன்ற குழந்தை தேடியந்திரங்களை பயன்படுத்தலாம் மற்றும் எப்போது அவர்களை பெரியவர்களாக அனுமதித்து கூகுள் அல்லது பிங் அல்லது டக் டக் கோ போன்ற தேடியந்திரங்களை பயன்படுத்த அனுமதிக்கலாம்?

தேடியந்திர முகவரி; http://www.kiddle.co/

1. தேடியந்திரங்கள் தொடர்பான தமிழ் இந்துவில் எழுதும் ஆ’வலை’ வீசுவோம் தொடரை வாசிக்க:

2. சிறுவர்களுக்கான தேடியந்திரங்கள்: http://cybersimman.com/2014/11/07/search-54/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *