டிஜிட்டல் விடுதலை அளிக்கும் இசை சாதனம்

20160919_MIGHTY_RIO18_CMF1_-_BluBlack_-_HERO_Shadow_-_SML_largeகட்டுரைக்குள் நுழைவதற்கு முன் ஒரு சிறு குறிப்பு. இந்த கட்டுரையில் விவரிக்கப்பட இருக்கும் இசை சாதனத்தை இந்தியர்கள் இப்போதைக்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த சாதனத்தை தருவித்துக்கொண்டாலும் அதன் ஆதாரமாக இருக்கும் இசை பாயும் சேவையான ஸ்பாட்டிபை இந்தியாவில் இன்னமும் அதிகாரபூர்வமாக அறிமுகமாகவில்லை என்பதால், அதை பயன்படுத்த முடியாது. அதனால் என்ன, சில சாதனங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றில்லை, அதன் கருத்தாக்கத்தை தெரிந்து கொண்டாலே அட, நன்றாக இருக்கிறதே என வியக்கத்தோன்றும்.

அப்படி வியந்து போவதற்காக தான், மைட்டி எனும் அந்த சாதனத்தை இந்தப்பகுதியில் அறிமுகம் செய்து கொள்வோம். இந்த சாதனம் புதுமையானது மட்டும் அல்ல விஷயம், நாம் வசிக்கும் காலத்தையும் நினைவூட்டுவதாக இந்த சாதனம் அமைந்திருப்பது தான் இன்னும் முக்கியமான விஷயம்.

ஆம். நாம் கேட்ஜெட்களின் காலத்தில் வசிக்கிறோம். இதை ஒரு நுகர்வோராகவும் நாம் உணர வேண்டியது அவசியம். தொழில்முனைவோராகவும் இதை உணர்ந்திருப்பது நல்லது. அப்போது தான் மைட்டி போன்ற புதுமையான கேட்ஜெட்டை நம்மாலும் உருவாக்க முடியும்.

கேட்ஜெட் என்பதை குறுஞ்சாதனம் என்று புரிந்து கொள்ளலாம். டிவி ரிமோட் துவங்கி, கார் கதவுகள் தானாக லாக் செய்து கொள்ள உதவும் சாவிக்கொத்து சாதனம் வரை பலவிதமான கேட்ஜெட்களை நாம் பயன்படுத்துகிறோம். ஏசி ரிமோட், கிட்சன் டைமர் எல்லாவற்றையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். இவைத்தவிர பிரத்யேகமான கேட்ஜெட்களும் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் தான் மைட்டி கேட்ஜெட்டும் அறிமுகமாகி இருக்கிறது.

உள்ளங்கையில் அடங்கிவிடக்கூடிய வகையில் சதுர வடிவமாக இருக்கும் இந்த சாதனம் ஒரு இசை கேட்பு சாதனம். அதாவது மியூசிக் பிளேயர். இதில் உள்ள பட்டனை நான்கு திசையிலும் அழுத்தி பாட்டு கேட்கலாம். இதை சட்டை பாக்கெட் அல்லது பாண்ட் பாக்கெட்டில் சொருகி கொண்டால் போதும், இயர்போனில் விரும்பிய இசையை கேட்டு மகிழலாம். இதென்ன பிரமாதம், ஸ்மார்ட்போன் இருந்தாலே போதுமே எப்போது வேண்டுமானாலும் இசை கேட்கலாமே, இதற்கு என தனியே ஒரு சாதனம் தேவையா? என்று நீங்கள் கேட்கலாம். விஷயமே அது தான். இது ஸ்மார்ட்போனுக்கான துணை சாதனம். அதாவது ஸ்மார்ட்போனை கையில் எடுத்துச்செல்லாமலே அதன் மூலம் இசை கேட்டு ரசிக்க வழி செய்யும் சாதனம்.

நீங்கள் இசைப்பிரியர் என்றால், அதிலும் ஸ்டீரிமிங் வகையில் இசையை பாய்ந்தோடச்செய்யும் ஸ்பாட்டிபை சேவையின் ரசிகர் என்றால், இது போன்ற ஒரு சாதனத்தின் தேவையை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த சாதனம். ஸ்பாட்டிபை காப்புரிமை சிக்கல் இல்லாமல் சந்தா செலுத்தி விரும்பிய பாடல்களை ஸ்டீரிமிங் முறையில் கேட்டு ரசிக்க வழி செய்யும் சேவை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். காப்புரிமை காரணமாகவே இன்னமும் இந்தியாவில் அந்த சேவை அதிகாரபூர்வமாக அறிமுகமாகவில்லை.

ஸ்பாட்டிபை சேவையை கம்ப்யூட்டரிலும் கேட்கலாம்; அதைவிட சுலபமாக செயலி மூலம் ஸ்மார்ட்போனிலும் கேட்கலாம். வீட்டில் இருக்கும் போது அல்லது பஸ்சிலோ, காரிலோ பயணம் செய்யும் போதோ ஸ்மார்ட்போனில் ஸ்பாட்டிபை மூலம் பாட்டு கேட்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் ஜாகிங் செல்லும் போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது ஸ்மார்ட்போனை கையில் எடுத்துச்செல்வது சிக்கலாக இருக்கலாம். இது போன்ற நேரங்களில் காதில் இயர்போனை மாட்டியபடி பாடல்களை கேட்டுக்கொண்டிருப்பது உற்சாகத்தை அளிக்க கூடும் என்றாலும், ஸ்மார்ட்போன் இல்லாமல் இது சாத்தியமில்லை. ஆனால், ஜாகிங்கிற்கு நடுவே ஸ்மார்ட்போன் இடைஞ்சலாக இருக்கலாம். அது மட்டும் அல்ல அதன் அழைப்புகளும், நோட்டிபிகேஷன்களும் தொல்லையாக அமையலாம்.

இவை எல்லாம் இல்லாமல், இசையை மட்டும் கேட்டு ரசித்தபடி, ஜாகிங்கோ, வாக்கிங்கோ அல்லது டிரெக்கிங்கோ செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்? என்று ஏங்குபவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் மைட்டி இசை கேட்பு சாதனம். ஆப்பிளின் பழைய ஐபாடு இசை எம்பி 3 பிளேயரை நினைவுபடுத்தும் இந்த சாதனத்தை ஏகாந்தமாக வெளியே செல்ல விரும்பும் போது கையில் எடுத்துச்செல்லலாம். புளுடூத் மற்றும் வயர்லெஸ் மூலம் இதை ஸ்மார்ட்போனில் இணைத்துவிட்டால் போதும் ஸ்பாட்டிபையில் கேட்க விரும்பும் பாடல்களை இதிலேயே கேட்கலாம். இதற்கான பிரத்யேக ஒருங்கினைப்பு செயலியையும் மைட்டி வழங்குகிறது. ஆக, வெளியே செல்லும் போது, போன் கீழே விழுந்த விடும் என்ற கவலை இல்லாமல் பாட்டு கேட்கலாம். அது மட்டும் அல்ல, நொடிக்கொரு முறை போனை எடுத்துப்பார்க்க வேண்டும் எனும் டிஜிட்டல் கவனச்சிதறல்கள் இல்லாமல் காரியத்தில் கண்ணாக இருக்கலாம். இத்தகைய டிஜிட்டல் விடுதலையை விரும்புகிறவர்கள் மைட்டியை நிச்சயம் கூடுதலாக விரும்புவார்கள்.

இது தான் மைட்டியின் கதை. யோசித்துப்பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். படம் பார்ப்பது, பாட்டு கேட்பது, கேம் ஆடுவது என எல்லாவற்றையும் ஸ்மார்ட்போன் மூலமே நிறைவேற்றிக்கொள்ளலாம் எனும் நிலையில், பாடல்களை கேட்டு ரசிப்பதற்காக மட்டுமே ஒரு சின்னஞ்சிறிய சாதனத்தை உருவாக்குவதும் அதற்கான தேவை இருப்பதை உணர்வதும் ஆச்சர்யமானது தான் இல்லையா!

அதிலும் குறிப்பாக டிஜிட்டல் இசையை கேட்க வழி செய்து பெரும் வெற்றி பெற்ற ஆப்பிளின் ஐபாடு சாதனம், ஐபோன் எழுச்சிக்குப்பிறகு தேவையற்று போய்விட்டதாக கருதப்பட்ட நிலையில், மைட்டி வடிவில் இசை கேட்பு சாதனம் மறு அவதாரம் எடுத்துள்ளது ஆச்சர்யமானது. ஆனால், முன்னாள் கூகுள் பொறியாளரான அந்தோனி மெண்டல்சனுக்கு முதன் முதலில் இந்த ஐடியா உதித்த போது, இது செல்லுபடியாகும் என எத்தனை பேர் நினைத்திருப்பார்கள் எனத்தெரியவில்லை. அதனால் தான் மெண்டல்சன், இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டரை இதற்கான வெள்ளோட்ட மேடையாக தேர்வு செய்தார்.

மைட்டி சாதனத்தின் மையக்கருத்தை விளக்கி கூறி, இதற்கு ஆதரவு அளிக்குமாறு கிக்ஸ்டார்ட்டர் மூலம் அவர் கோரினார். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்ததோடு கேட்டதை விட அதிகமாக நிதியும் குவிந்தது. ஆனால் வாக்குறுதி அளித்தது போல் உடனடியாக மைட்டி சாதனத்தை உற்பத்தி செய்து கொடுக்க முடியாமல் போனாலும் சற்று தாமதமாக இந்த சாதனம் அதை ஆதரித்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல, இப்போது கட்டணம் செலுத்தி வாங்கிக்கொள்ளும் வகையில் சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

,கொஞ்சம் புதுமையான ஐடியாவில் உருவானது தான் மைட்டி சாதனம். ஆனால் இதற்கான தேவை இருப்பதை இசைப்பிரியர்கள் நிருபித்துள்ளனர். ஸ்மார்ட்போன் தான் எல்லாம் என்பதை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள், நமக்கு இது போன்ற சின்னஞ்சிறிய சாதனங்களும் தேவை தான். அதனால் தான் நம் காலத்தை கேட்ஜெட்களின் காலம் என்பது பொருத்தமாக இருக்கும்!

மைட்டி சாதனத்தின் இணையதளம்: https://bemighty.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.