வனவிலங்கு பாதுகாப்பில் நீங்களும் கைகொடுக்க உதவும் செயலி

rவனவிலங்கு நலனில் அக்கறை கொண்டவரா நீங்கள்? வனவிலங்கு பாதுகாப்பில் பங்களிப்பு செலுத்துவதிலும் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? எனில், நீங்களும் உங்களால் இயன்ற வகையில் வனவிலங்கு பாதுகாப்பு ஆய்வில் பங்கேற்கலாம். புதிதாக அறிமுகமாகி இருக்கும் ’ரோட்கில்ஸ்’ செயலி இதற்கு வழி செய்கிறது.

இணைய நுட்பத்தின் தாக்கத்தால் வளர்ந்து வரும் சிட்டிசன்ஸ் சயின்ஸ் எனப்படும் ’குடிமக்கள் விஞ்ஞானம்’ எனும் கருத்தாக்கத்திற்கான அழகான உதாரணமாக இந்த செயலி அமைந்துள்ளது. அறிவியல் ஆய்வு என்பது தொழில்முறை விஞ்ஞானிகளின் துறையாக இருந்தாலும், பல நேரங்களில் இந்த ஆய்வில் பொதுமக்களின் உதவி தேவைப்படுகிறது. இப்படி விஞ்ஞானிகள் ஆய்வு திட்டங்களில் ஏதேனும் ஒருவிதத்தில் பொதுமக்கள் பங்கேற்பது குடிமக்கள் விஞ்ஞானம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக ஆய்வு தொடர்பான தகவல்களை திரட்டுவதில் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யலாம். அந்த தகவல்களை சரி பார்த்து, ஆய்வு செய்யும் பணியை விஞ்ஞானிகள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் களத்தில் இறங்கி பரவலான முறையில் தகவல்களை திரட்டுவதில் சாமானிய மக்களின் உதவி பேரூதவியாக அமையும்.

இணையத்தின் ஆற்றலால் வளரத்துவங்கிய குடிமக்கள் விஞ்ஞானம் இப்போது ஸ்மார்ட்போன் செயலிகள் வாயிலாக மேலும் பிரபலமாகத்துவங்கியுள்ளது. இந்த வரிசையில் தான் ரோட்கில்ஸ் செயலி வருகிறது.

முதல்கட்டமாக ஆண்ட்ராய்டு போன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை ( Wildlife Conservation Trust  ) அமைப்பு வடிவமைத்துள்ளது. சாலை விபத்துக்களில் உயிரிழக்கும் வனவிலங்குகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் மூலம் திரட்டுவது தான் இந்த செயலியின் நோக்கம். எதிர்காலத்தில் வனவிலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தை குறைக்க தேவையான நடவடிக்கைக்ளை மேற்கொள்ள இந்த தகவல்கள் உதவும் என்பது நம்பிக்கை.

வனப்பகுதி மற்றும் சரணாலயங்கள் அமைந்துள்ள இடங்களில் சாலை விபத்துகளில் சிக்கி வனவிலங்குகள் பரிதாபமாக உயிரிழப்பது தொடர்பான செய்திகளை பலமுறை செய்திகள் வாசித்திருக்கிறோம். ஆனால் இவை எல்லாம் விதிவிலக்கான ஒற்றை நிகழ்வுகள் அல்ல என்பது தான் வேதனையானது.

மனித- விலங்கு மோதல் என கூறப்பட்டாலும் பெரும்பாலான நேரங்களில் விலங்குகளின் வாழ்வாதார சூழலில் மனிதர்களின் குறுக்கீடு மற்றும் ஊடுருவல்களால் தான் இத்தகைய விபத்துகள் நிகழ்கின்றன. தனிமனிதர்களின் மீறக்கள், சட்டவிரோதமான தாக்குதல்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற உள்கட்டமை தேவைகள் என பலவிதங்களில் வனவிலங்குகளின் வாழ்க்கையில் மனித குறுக்கீடு நிகழ்கின்றன.

இவற்றின் பாதிப்பை குறைக்கும் வகையில் வனவிலங்கு பாதுகாப்பிற்கான தகவல்களை திரட்டுவதற்காக ரோட்கில்ஸ் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பயணங்களின் நடுவே எங்கேனும் வனவிலங்குகள் விபத்துக்குள்ளாகி இருப்பதை பார்த்தால், அந்த விபத்து தொடர்பான தகவல்களை பொதுமக்கள் இந்த செயலி மூலம் பதிவு செய்யலாம்.

ஆண்ட்ராய்டு போனில் செயலியை பதவிறக்கம் செய்த பிறகு, விபத்து நடைபெற்ற இடத்தின் அருகாமையில் இருந்தால், உடனே இந்த செயலியில், ’ரோட் கில் ரிப்போர்ட்’ எனும் பகுதியை கிளிக் செய்து விபத்து விபரத்தை பதிவு செய்யலாம். விபத்து நடந்த இருப்பிடம் மற்றும் விபத்துக்குள்ளான விலங்கின் புகைப்படம் ஆகிய தகவல்களை பதிவேற்ற வேண்டும். விபத்து தொடர்பான இதர தகவல்கள் தெரிந்தால் அதையும் இடம்பெறச்செய்யலாம். விபத்தில் சிக்கியது வனவிலங்கா? சாதாரண விலங்கா? எனும் தகவலையும் தெரிவிக்க வேண்டும்.

இத்தகைய தகவல்கள் கணிசமாக சேரும் போது, வனவிலங்குகள் தாக்குதலுக்கு இலக்காகும் பகுதிகள் தொடர்பான புரிதல் இன்னும் ஆழமாகும். இப்போதே கூட, வனப்பகுதிகள் அருகே சிறுத்தை, யானை போன்ற விலங்குகள் விபத்துக்குள்ளாவதோடு, எண்ணற்ற பல விலங்குகள் வாகனங்களில் சிக்கி உயிரைவிடுகின்றன. இந்த சம்பவங்கள் அநேகமாக பதிவாவது கூட இல்லை.

ஆனால், குடிமக்களில் கணிசமானோர் ரோட்கில்ஸ் செயலியை பயன்படுத்தி விலங்கு விபத்துகள் தொடர்பான தகவல்களை பதிவேற்றினால், ஆய்வாளர்கள் அவற்றை கொண்டு ஆபத்தான பகுதிகளை கண்டறிய முடியும். எப்படியும் சிறிய ஆய்வுக்குழுவால் இந்த பணியை திறம்பட செய்ய முடியாது. மாறாக பொதுமக்கள் மனது வைத்தால், எளிதாக தகவல்களை திரட்டிவிட முடியும். இந்த தகவல்கள் எதிர்காலத்தில் சாலை விரிவாக்க திட்டம் போன்றவை மேற்கொள்ளப்படும் போது வனவிலங்குகள் பாதுகாப்பை மனதில் கொள்ள உதவியாக இருக்கும்.

திட்டத்தில் பங்கேற்கும் பயனாளிகள் சேகரிக்கப்பட்ட தகவல்களை இந்த செயலிக்கான இணையதளத்தில் பார்வையிடலாம். இப்போதைக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த செயலியை பயன்படுத்த செய்வதையே வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு நோக்கமாக கொண்டிருக்கிறது. பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தான் இதன் மூலம் திரட்டப்படும் தகவல்களின் பலனை உணர முடியும்.

இந்த திட்டத்தில் பங்கேற்பது குறித்த எளிதான வழிமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன. பயனாளிகள் முதலில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதும் அவசியம். மேலும் இந்தியாவில் பல சரணாலயங்களில், அவற்றுக்கு உரிய விதிமுறைகள் இருக்கின்றன. வனவிலங்கு ஆர்வலர்கள், படமெடுக்க முயற்சிக்கும் போது இந்த விதிமுறைகளை பின்பற்றி நடப்பதும் அவசியம். ஒரு சில சரணாலயங்களில் நுழைவதும் சட்ட விரோதமாகும். இத்தகைய கட்டுப்பாடுகளையும் மீறாமல் இருக்க வேண்டும்.

இந்த செயலியின் ஐபோன் வடிவம் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பிற வனவிலங்கு அமைப்புகள் ஆதரவுடன் இந்த செயலி பெருமளவில் பயனளிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

விரைவில் கோடை விடுமுறை காலம் துவங்க உள்ள நிலையில் சுற்றுலா செல்பவர்கள் இந்த செயலியையும் பதிவிறக்கம் செய்து கொண்டு, வனவிலங்கு பாதுகாப்பில் பங்கேற்கலாம்.

ரோட்லிக்ஸ் செயலி: https://www.roadkills.in/

தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.