இந்தியாவில் ஸ்பாடிபை அறிமுகம்

homepage-of-interviewbuddyஇணைய இசை கேட்பு சேவையான ஸ்பாடிபை (Spotify  ) இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கிறது. இசைப்பிரியர்களுக்கு, குறிப்பாக ஸ்பாடிபை சேவை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என காத்திருந்தவர்களுக்கு இது நிச்சயம் உற்சாகம் அளிக்கும் செய்தி தான். இதுவரை ஸ்பாடிபை சேவை பற்றி அறிந்திராதவர்கள் குழம்ப வேண்டாம். ஸ்பாடிபை இணையத்தில் ஸ்ட்ரிமிங் முறையில் இசை கேட்க வழி செய்யும் சேவை. சர்வதேச அளவில் புகழ் பெற்றதாக இருக்கிறது.

இணையத்தில் இசை கேட்டு ரசிக்க எண்ணற்ற வழிகள் இருக்கின்றன தான். ஆனால் ஸ்பாடிபையில் என்ன விஷேசம் என்றால், அது காப்புரிமை சிக்கல் இல்லாமல், சட்டப்பூர்வமாக இசையை கேட்டு ரசிக்க வழி செய்வது தான். ஸ்வீடனைச்சேர்ந்த நிறுவனமான ஸ்பாடிபை இசைக்கலைஞர்கள், இசை நிறுவனங்களிடம் கட்டணம் செலுத்தி முறையான அனுமதி பெற்று பாடல்களை அளிக்கிறது. எனவே இசைத்திருட்டு பிரச்சனை இதில் இல்லை.

அதே நேரத்தில் இதில் பாடல்களை டவுண்லோடு செய்ய முடியாது. ஆனால் விரும்பிய பாடல்களை ஸ்டிரிமிங் முறையில் கேட்டு ரசிக்கலாம். பாடல்களுக்கான விருப்ப பட்டியலையும் உருவாக்கி கொள்ளலாம். இலவச சேவை உண்டு. ஆனால் விளம்பரங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். இல்லை எனில் கட்டண சேவையை நாடலாம்.

இதுநாள் வரை ஸ்பாடிபை இணையதளத்தில் நுழைந்தால் உங்கள் நாட்டில் இன்னமும் அறிமுகமாகவில்லை எனும் தகவல் தோன்றும். இப்போது ஸ்பாடிபை இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கிறது. காப்புரிமை சிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு (இன்னும் சில இழுபறிகள் உள்ளன) இந்திய சேவையை அறிமுகம் செய்துள்ளது. டெஸ்க்டாப்பிலும், செயலி வடிவிலும் அணுகலாம்.

ஏற்கனவே இந்திய சந்தையில் கானா, சவான் , கூகுள் மியூசில், ஆப்பிள் மியூசிக் உள்ளிட்ட இசை சேவைகள் இருப்பதால் ஸ்பாடிபை கடும் போட்டியை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் ரசிகராக ஸ்பாடிபை அனுபவம் எப்படி இருக்கிறது என சோதித்துப்பாருங்கள்: https://www.spotify.com/in/

(செயலி புதிது)

குழுவாக பேச வழி செய்யும் ஜியோ குருப்டாக் செயலி

செல்பேசி சேவை வழங்கும் ஜியோ நிறுவனம், ஜியோ குருப் டாக் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் குழுவாக பேசுவது சாத்தியம். கான்பிரன்ஸ் கால் போல பேசும் வசதியை அளிக்கும் இந்த செயலி ஜியோ சந்ததாரர்களுக்காக பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இதன் மூலம் மற்ற செல்பேசி சேவை பயனாளிகளையும் அழைத்து பேச முடியும். இந்த செயலியில் பேசும் போது, தேவை எனில் மற்றவர்களை மியூட் செய்து ஒருவர் பேசுவதில் மட்டும் கவனம் செலுத்தும் வசதியும் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு, மற்றும் ஐபோன்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலியை பயன்படுத்த முதலில் இதை போனில் நிறுவ வேண்டும். தற்போதைய நிலையில் இதில் குரல் மூலமாக மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். அடுத்த கட்டமாக வீடியோ அழைப்பு வசதியும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயலியில் குழுவை உருவாக்கி கொண்டு, அதன் உறுப்பினர்களோடு ஒற்றை கிளிக்கிலும் பேசலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.jio.grouptalk&hl=en

(தளம் புதிது)

நேர்காணலுக்கு தயார் செய்யும் இணையதளம்

வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கு செல்வது என்றால் கொஞ்சம் தயக்கமும், பதற்றமும் இருப்பது இயல்பானது தான். இந்த நிலை இல்லாமல், நேர்காணலை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்- சோதனை நேர்காணலில் ஈடுப்பட்டு இத்தகைய நம்பிக்கையை பெற வழிகாட்டுகிறது இண்டர்வியூபட்டி (https://interviewbuddy.in/ ) இணையதளம்.

வேலைவாய்ப்பு தேடலில் ஈடுபட்டுள்ளவர்கள், மாக் இண்டர்வியூ என சொல்லப்படும் சோதனை நேர்காணலில் ஈடுபட்டு தங்களை தயார் செய்து கொள்ள உதவுவதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டால், துறை சார்ந்த வல்லுனர்கள் நடத்தும் நேர்காணலில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்து பயிற்சி பெறலாம். இதற்காக எந்த மென்பொருளையும் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இணையம் மூலமே நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் செயல்பாடு தொடர்பான மதிப்பெண்களையும் பெறலாம். நேர்காணலை மீண்டும் பார்த்துக்கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது. ஆனால் கட்டணம் செலுத்த வேண்டும். மானவர்களுக்கு சலுகை இருக்கிறது. இண்டர்வியூபிட் (https://www.interviewbit.com/ ) இணையதளமும் இதோ போன்ற சேவையை அளிக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *