புத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்

iphone-comparisonபுதிய ஐபோன் தொடர்பான பரபரப்பு ஓரளவு அடங்கிவிட்டது, ஆனால் அது தொடர்பான விவாதம் சூடு பிடித்திருக்கிறது. ஐபோன் தொடர்பான விவாதம் அதன் சிறப்பம்சங்கள், புதுமைத்தன்மை, அதிகப்படியான விலை ஆகிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு அமைந்தாலும், பொதுவாக ஸ்மார்ட்போன் வளர்ச்சி தொடர்பான முக்கிய போக்கின் தாக்கத்தையும் இந்த விவாதங்களில் பார்க்க முடிகிறது. ஐபோன், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நட்பாக இருக்கிறதா? எனும் கேள்வி தான் அது.

மீம்கள் மூலம் எளிதாக எழுந்திருக்கும் கேள்வி தான் என்றாலும், நகைச்சுவையானது என அலட்சியம் செய்துவிட முடியாத முக்கிய கேள்வியாகவும் அமைகிறது இது. ஐபோனின் அளவு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிதாக இருப்பதை மையமாக வைத்து இந்த கேள்வி எழுகிறது.

பொதுவாகவே கேட்ஜெட் உலகில் புதிய மாதிரி அறிமுகம் என்பது பரவலாக எதிர்பார்க்கப்படும் முக்கிய சடங்காகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மூலம் இதை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. புதிய ஐபோன் எப்படி இருக்கும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அறிமுக நாள் அன்று அபிமானிகளை ஆப்பிள் மையங்கள் வாசலில் வரிசையில் காத்திருக்க வைப்பது என்பது ஆப்பிள் உருவாக்கிய வெகுஜன கலாச்சாரமாக இருக்கிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் மேக்ஸ் போன்களை அறிமுகம் செய்தது. இ-சிம் உள்ளிட்ட இரட்டை சிம் வசதி, கூடுதல் செயல்திறன் ஆகிய அம்சங்கள் கவனத்தை ஈர்த்தாலும், அதிக விலை மற்றும் பெரிய அளவு ஆகியவை தான் விவாத பொருளாகி இருக்கின்றன.

இதில் விலை அம்சத்தை விட்டுவிடலாம். ஐபோன் என்றால் விலை அதிகமானது என்பது தெரிந்த சங்கதி தான். நேர்த்தி மற்றும் தரத்திற்கு ஏற்ற விலை என்பது போல, ஸ்டீவ் ஜாப்ஸ் காலம் முதல் ஆப்பிள் அதில் உறுதியாக இருக்கிறது. அதற்கேற்ப விலையை உயர்த்திக்கொண்டும் வருகிறது.

இந்த முறை அமெரிக்கர்களே கூட, ஐபோனில் விலை குறித்து மீம்களை வெளியிட்டு தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். ஆனால், விலை என்பது முற்றிலும் சந்தை சார்ந்தது என்பதால் இப்போதைக்கு அந்த சந்தை காரணிகளிடமே விட்டுவிடலாம். விலையை போலவே அதிகரித்துக்கொண்டு வரும் மற்றொரு முக்கிய அம்சத்தை கவனிப்போம். போனின் அளவு தான் அது.

புதிய ஐபோன்கள் 6.1 அங்குலம் மற்றும் 6.5 கொண்டவையாக இருக்கின்றன. இதற்கு முந்தைய மாதிரிகளை எல்லாம் விட புதிய ஐபோன்கள் பெரிதாக இருக்கின்றன. இதை தான் ஆப்புள் ’பெரிய செய்தி’ என்றும் அறிவித்திருக்கிறது. பெரிய திரை என்பது பார்ப்பதற்கும் நன்றாக இருப்பதாக கூட நினைக்கலாம். ஆனால் பயன்படுத்துவதற்கு?

இந்த சந்தேகத்தை தான் பல பயனாளிகள் எழுப்பியுள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்களை மனதில் கொண்டு பார்த்தால், இந்த அளவு பெரிய பிரச்சனை அல்லவா என்று கேட்கின்றனர். போனை எளிதாக கையில் எடுத்துச்செல்ல வேண்டும் என்றால் பாக்கெட்டில் வைத்துக்கொள்ள வசதியாக இருக்க வேண்டும். பெண்களின் ஜீன்ஸ் பாக்கெட் அளவை வைத்து பார்க்கும் போது, புதிய ஐபோனின் அளவு சிக்கலானதாகி விடுகிறது.

இந்த கவலையை பல பெண்கள் டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய பெண்மணியான நேட்கருன் (@nattgarun ) என்பவர், பெண்கள் பாக்கெட் ஒரு மாட்டுச்சானம், அதில் ஐபோன் பொருந்துவதில்லை என குறைப்பட்டுக்கொண்டுள்ளார்.

அடி ராபர்ட்சன் (https://twitter.com/thedextriarchy ) என்பவர், ஐபோனுக்கு ஏற்ப ஆடைகளை கூட பெரிதாக்கிவிடலாம் ஆனால் கைகளை வளரச்செய்வது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.ம் ஆனி ஸ்டெட்டர் (https://twitter.com/StuderAnnie) என்பவர்  என் கைகலை பெரிதாக்க முடியாது போன்களை சிறியதாக்குங்கள் என்று தெரிவித்திருந்தார்.

கொஞ்சம் யோசித்தால் இது முக்கியமான கேள்வியாக இருப்பதை உணரலாம். ஐபோன் அளவு பெரிதாக்குவது மார்க்கெட்டிங் உத்தியாக இருந்தாலும் கூட, போன் பாக்கெட்டுக்குள் அடங்குவது முக்கியம் இல்லையா எனும் கேள்வி எழுகிறது. அதைவிட முக்கியமான கேள்வி போனை வடிவமைக்கும் போது பெண்களை மனதில் கொள்ள வேண்டாம் எனும் கேள்வியாக அமைகிறது. வடிவமைப்பு என்பதும் பாலின சமத்துவம் மிக்கதாக இருக்க வேண்டும் தானே!

ஆனால், இது ஐபோனுக்கு மட்டுமே உரித்தான பிரச்சனை அல்ல. பொதுவாகவே ஸ்மார்ட்போன் உலகில் புதிதை உருவாக்கும் மோகத்தில் அம்சங்களில் கவனம் செலுத்தி பயன்பாட்டை கோட்டைவிட்டுக்கொண்டிருக்கின்றன்ரோ எனும் கேள்வியை இது எழுப்புகிறது. புதிய அம்சங்கள் தேவை தான் என்றாலும், அவை போன் பயன்பாட்டை மேலும் சிக்கலாக்கும் வகையில் இருந்தால் யாருக்கு லாபம் எனும் கேள்வியும் எழுகிறது.

அளவில் பெரிய திரையையே எடுத்துக்கொள்வோம். ஐபோனை விட பெரிய திரை கொண்ட போன்கள் இருக்கின்றன. ஆனால் பிரச்சனை அதுவல்ல. பெரிய திரையை ஒரு அமசமாக முன்வைக்கும் ஸ்மார்ட்போன் உலகில் பரவலாக இருக்கிறது. இதில் பல சாதக அம்சங்கள் இருந்தாலும், பயன்பாட்டு நோக்கில் பார்த்தால் இதில் முக்கிய பாதகமும் இருக்கிறது.

பொதுவாக ஒரு கையில் போனை வைத்துக்கொண்டு ஒற்றை விரலில் அதை இயக்குவதற்கு பலரும் பழகி இருப்பதாக கருதப்படுகிறது. வழக்கமான ஸ்மார்ட்போன்கள் இதற்கு ஏற்றதாக அமைகின்றன. ஆனால் அளவு பெரிதாகும் போது, ஒற்றை கையாள் இயக்குவது கடினமாதாகிறது. அது மட்டும் அல்ல, பெரிய திரை என்பது சாதாரனமான ஒற்றை விரல் இயக்கத்தை கைவிட்ட திரையிலேயே முழு கவனத்தையும் குவிய வைக்கிறது என்கிறார் தொழில்நுட்ப எழுத்தாளரான இயான் போகஸ்ட்.

இதனால் ஸ்மார்ட்போனிலேயே மூழ்கி கிடக்கும் பழக்கம் அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது. நிச்சயம் இது சிக்கலானது தான்.

இந்த காரணங்களினால் தான் பலரும், போன் திரையை பெரிதாக்குவதை விட்டு விட்டு, உண்மையிலேயே தேவைப்படும் புதிய அம்சங்களை கொண்டு வந்தால் என்ன என்று கேட்கின்றனர். இது வடிவமைப்பு நோக்கில் சவாலானது மட்டும் அல்ல, நாம் போன்களை பயன்படுத்தும் விதம் தொடர்பான ஆழமாக கேள்விகளுக்கான பதில் தேட வைப்பதாகவும் இருக்கிறது.

ஒருவிதத்தில் யோசித்துப்பார்த்தால் அளவு பெரிதாவது எப்பது பழமைக்கு திரும்புவதாகிவிடாதா? யோசித்துப்பாருங்கள் ஆரம்ப கால செல்போன்களை செங்கல் போன்கள் என கேலி செய்திருக்கிறோம். அதன் பிறகு போன்களின் எடை மற்றும் அளவு குறைந்து நேர்த்தியும் செயல்திறனும் அதிகமாயிற்று. இப்போது ஸ்மார்ட்போன்களில் மீண்டும் அளவை பெரிதாக்கி கொண்டே செல்வதன் அவசியம் என்ன? இது ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல அதன் பயனாளிகளுக்குமான கேள்வி தான்!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.