டெக் டிக்ஷனரி – 4 டிஜிட்டல் புட்பிரிண்ட் (digital footprint ) : டிஜிட்டல் காலடித்தடம்

digital_footprintநீங்கள் உலகில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள், எந்த அளவு தடம் பதிக்கிறீர்கள் என்று தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம், இணையத்தை பயன்படுத்தும் வ்போது, உங்களை அறியாமல் நீங்கள் உங்கள் டிஜிட்டல் சுவடுகளை அழமாக பதிவு செய்து கொண்டிருக்கிறீர்கள். இதை தான் ஆங்கிலத்தில் டிஜிட்டல் புட்பிரிண்ட் என்கின்றனர். ஆன்லைனில் நாம் சென்ற வழித்தடங்களை எல்லாம் சுட்டிக்காட்டக்கூடிய டிஜிட்டல் அடையாளங்கள் அல்லது குறிப்புகளை தான் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இணையத்தில் நாம் பயன்பத்தும் சேவைகள், வெளியிடும் பதிவுகள், மேற்கொள்ளும் உரையாடல்கள் என பலவிதமாக இந்த குறிப்புகள் அமைகின்றன. இவ்வளவு ஏன் நாம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் அல்லது வீடியோ உள்ளிட்ட எந்த விஷயமும் நம்மைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களை இணையத்தை பதிய வைக்கிறது. நீங்கள் அனுப்பும் இமெயில், விஜயம் செய்யும் இணையதளங்கள் என எல்லாம் இதில் அடங்கும்.
இணையத்தை பயன்படுத்தும் எல்லோரும் ஏதோ ஒரு வகையான டிஜிட்டல் சுவடுகளை பதிய வைக்கின்றனர் என்றாலும் நீங்கள் எந்த வகையான டிஜிட்டல் தடங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என கவனமாக இருப்பது நல்லது. முக்கியமான விஷயம் என்னவெனில், இணையத்தில் ஒரு தகவல் வெளியிட்ட அல்லது பகிர்ந்து கொண்ட பின் அதை முற்றிலுமாக நீக்குவது சாத்தியம் அல்ல. அது எங்காவது ஓரிடத்தில் இருந்து கொண்டே இருக்கும்.
டிஜிட்டல் காலடித்தடம் பற்றி எல்லாம் நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் இணைய நிறுவனங்கள் இத்தகைய தகவல்களை தங்கமாக கருது, இவற்றை பல முனைகளில் சேகரிக்கின்றன. இதற்கு தகவல் அறுவடை என பெயர் சொல்கிறார்கள். சமீபத்தில் வெடித்த பேஸ்புக் அனலிடிகா சர்ச்சனையின் மையமும் இந்த தகவல் அறுவடை தான் என்பதை நினைவில் கொள்வது நல்லது.
டிஜிட்டல் காலடித்தடம் பற்றி மேலும் அறிய வேண்டும் எனில் கோர்சரா தளம் இது பற்றி பாடமே நடத்துகிறது: https://www.coursera.org/learn/digital-footprint

http://cybersimman.com/2018/03/06/tech-6/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *