உங்கள் ஆன்லைன் பயோ எப்படி இருக்க வேண்டும்?

oஆன்லைனில் நீங்கள் யார்? இந்த கேள்விக்கு பதிலை நீங்கள் எப்போதாவது யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? ஆம், எனில் உங்கள் ஆன்லைன் பயோ பற்றியும் நீங்கள் யோசித்திருக்க வேண்டும். இல்லை என்றாலும் பரவாயில்லை, இனி மேல் யோசிப்பது நலம். ஏனெனில் உங்கள் ஆன்லைன் பயோ முக்கியமானது என்பது மட்டும் அல்ல, அது எப்படி இருக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியமானது. அதனால் ஆன்லைன் பயோவில் கவனம் செலுத்தி, உங்களது ஆகச்சிறந்த பயோவை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

ஆன்லைன் பயோ என்றால் என்ன என்று உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இணைய சேவைகளில் உங்களை அறிமுகம் செய்து கொள்ளும் வகையில் எழுதும் குறிப்புகளே ஆன்லைன் பயோவாக கருதப்படுகிறது. நீங்கள் யார் எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இவை அமைவதாக வைத்துக்கொள்ளலாம். இணையத்தில் உங்களின் அடையாளம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் துவங்கி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், லிங்க்டுஇன், பிளாகர் என பலவிதமான இணைய சேவைகளில் உங்களுக்கான பயோவை நீங்கள் உருவாக்கி கொள்ளலாம். இவைத்தவிர டிண்டர் உள்ளிட்ட ஆன்லைன் டேட்டிங் தளங்களிலும் பயனாளிகள் தங்களை அறிமுகம் செய்து கொள்வது அவசியம்.

ஆன்லைன் பயோ என்பதை இணையத்தில் நமக்கான சரிதை என்பதாக புரிந்து கொள்ளலாம் என்றாலும், இவற்றில் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்க முடியாது. நம் வாழ்க்கை கதையில் துவங்கி, வாழ்நாள் சாதனைகளை, கனவுகள், சோதனைகளை எல்லாம் தெரிவிக்க இடமில்லை. பெரும்பாலான சேவைகளில் பயோ –வை உருவாக்குவதற்கு அனுமதிக்கப்படும் வார்த்தைகள் குறைவு என்பதால், நம்மைப்பற்றி என்ன சொல்கிறோம் என்பது கச்சிதமாக இருக்க வேண்டும்.

இத்தகைய கச்சிதமான ஆன்லைன் பயோவை உருவாக்குவது சவாலானது தான். அது சிறப்பாகவும் இருக்க வேண்டும், அது சரியாகவும் இருக்க வேண்டும். இரண்டுக்கும் என்ன வேறுபாடு என யோசிக்கலாம். ஆன்லைன் பயோ, படித்தவுடன் கவரும் வகையில் இருக்க வேண்டும். அதற்காக மானே தேனே பொன்மானே என்றெல்லாம் இல்லாதவற்றை எல்லாம் சேர்த்துக்கொள்ளவும் கூடாது. உங்கள் அடிப்படை ஆளுமை என்னவோ அதை பயோ பிரதிபலிக்க வேண்டும். அப்போது தான் அது சரியானதாக இருக்கும். இல்லை எனில் உங்கள் பயோ பார்வையாளர்கள் முன் பல்லிளித்து விடும்.

நம் பயோ தான் என்றாலும், மிகை வர்ணனையோ, பக்கட்டான தகவல்களோ இடம்பெற்றிருப்பது சரியல்ல. அதற்காக பயோ வெறுமையாகவும் இருக்க கூடாது, அலுப்பூட்டக்கூடிய வகையிலும் இருக்க கூடாது. ஒருவிதத்தில் பார்த்தால், ஆன்லைன் பயோவை உருவாக்குவது என்பது ஒரு கலை. அது கொஞ்சம் கவித்துவமாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஒருவரது ஆதார குணம், ஆர்வங்கள் மற்றும் திறன்களை அடையாளம் காட்டுவதாகவும் இருக்க வேண்டும். பயோவில் புதுமை படைக்கலாம்: ஆனால் உண்மை இருக்க வேண்டும்.

ஒரு பயோவுக்கு இத்தனை மெனக்கெட வேண்டுமா? என உங்களில் சிலர் நினைக்கலாம். ஆன்லைனில் உங்கள் அடையாளம் சரியாக வெளிப்பட வேண்டும் என நினைத்தால் இது நிச்சயம் முக்கியம் தான். ஏனெனில் டிவிட்டரிலோ, இன்ஸ்டாவிலோ அல்லது வேறு எந்த இணைய சேவையிலோ நீங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது, அந்த சேவையில் புதிய நண்பர்கள் அல்லது தொடர்புகளை பெறுவதில் பயோ முக்கிய பங்கு வகிக்கிறது. புதியவர் ஒருவருக்கு நீங்கள் அதாவது உங்கள் இணைய கணக்கு அறிமுகமாகும் போது, அவர் உங்களை பின் தொடர தீர்மானிக்கும் போது அநேகமாக உங்கள் பயோவை பார்த்து நீங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள முற்படலாம்.

இது போன்ற நேரங்களில் உங்கள் பயோ கவரும் வகையில் இல்லை என்றால் அவர் திரும்பிச்சென்று விடலாம். பல நேரங்களில் பயோவை பார்த்தே உங்களை பின் தொடர தீர்மானிக்கலாம். சக பயனாளிகள் மட்டும் அல்ல, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களும் கூட அடிக்கடி ஆன்லைன் பயோக்களை ஆய்வு செய்கின்றன. அதிலும் லிங்க்டுஇன் போன்ற தொழில்முறை தளங்களில் உள்ள அறிமுகம், வேலைவாய்ப்பை தீர்மானிக்க கூடியதாக அல்லது வேட்டு வைக்க கூடியதாக அமையலாம்.

இப்போது நிச்சயம், ஆன்லைன் பயோவின் முக்கியத்துவம் உங்களுக்கு ஓரளவாவது புரிந்திருக்கும். இனி, சிறந்த ஆன்லைன் பயோவை உருவாக்குவது எப்படி எனும் கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.

சிறந்த ஆன்லைன் பயோவை உருவாக்க பலவிதமான வழிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை இணைய சேவைகளுக்கு ஏற்ப மாறுபடவும் செய்கின்றன என்றாலும் அடிப்படை விதிகள் பொதுவானவை. முதல் விஷயம், ஆன்லைன் பயோவில் என்ன எல்லாம் இருக்க வேண்டும், என்பதைவிட என்ன எல்லாம் இருக்க கூடாது என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் பயோவில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்கின்றனர். உதாரணத்திற்கு, ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரை ஒன்று, தொலைநோக்கு மிக்கவர், பிரபலம், பணிவானவர், தாக்கம் செலுத்துபவர் போன்ற பதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சுட்டிக்காட்டுகிறது. இவை எல்லாம் சக்தி வாய்ந்த வார்த்தைகள் தான். நமக்கு நாமே மகுடம் சூட்டிக்கொள்வது போல இந்த வார்த்தைகளில் பயோவில் போட்டுக்கொள்வது தூண்டுல் மிக்கதாக இருந்தாலும், உண்மையில் இவை பயனற்றவையாக அமையும் வாய்ப்பே அதிகம்.

உதாரணத்திற்கு தொலைநோக்கு மிக்கவர் எனும் வார்த்தையையே எடுத்துக்கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் விஷனரி என இது சொல்லப்படுகிறது. எனது துறையில் தொலைநோக்கு மிக்கவர் என சொல்லிக்கொள்ளும் விருப்பம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும், உண்மையில் தீர்கதரிசனம் மிக்கவர்களுக்கே இந்த வார்த்தை பொருந்தும். இது மற்றவர்கள் தர வேண்டிய அடையாளம். நாமாக போட்டுக்கொள்ளக்கூடாது.

அதே போலவே, நீங்கள் பிரபலமானவராக இருந்தால் பிரபலம் என குறிப்பிடும் தேவையே இருக்காது. பணிவானவர் என்று சொல்வதும் மிகவும் பொருத்தமானது. இந்த சொற்களை எல்லாம் படிக்கும் போதே, அவை அதிகம் பொருந்ததாக வார்த்தை ஜாலங்கள் என தோன்றிவிடும். எனவே தான் இத்தகைய வார்த்தைகளையும், மிகை அலங்கார வார்த்தைகளையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

இவற்றுக்கு மாறாக, உண்மையில் நீங்கள் யார் என்பதை பிரதிபலிக்க கூடிய வார்த்தைகளை தேர்வு செய்தால், ஆன்லைன் பயோ உங்கள் ஆளுமைக்கேற்ப அமைந்திருக்கும்.

ஆக, உங்களை எப்படி அறிமுகம் செய்து கொள்வது என ஆற அமர்ந்து யோசித்து சிறந்த பயோவை உருவாக்குங்கள். இதற்கு வழிகாட்டுதல் தேவை எனில் இந்த குறிப்புகள் உதவலாம்:

  • நீங்கள் யார் என சொல்லாதீர்கள், உணர்த்துங்கள். அதாவது படைப்பாற்றல் மிக்கவர் என கூறாதீர்கள். உங்கள் படைப்புத்திறனை உணர்த்தக்கூடிய செயல்களை குறிப்பிடுங்கள்.
  • உங்களுடைய பார்வையாளர்கள் யார் என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ற கீவோர்ட்களை பயன்படுத்துங்கள்.
  • புத்துணர்ச்சியான மொழியை பயன்படுத்துங்கள். வழக்கமான சொற்களை தவிர்க்கவும்.
  • உங்கள் பார்வையாளர்கள் பெறக்கூடியது என்ன எனும் கேள்விக்கு பதில் அளிக்க கூடிய ஒரு விஷயமாவது உங்கள் அறிமுகத்தில் இருக்க வேண்டும்.
  • அடிக்கடி பயோவை மீண்டும் படித்துப்பார்த்து செழுமை படுத்துங்கள். ஆல் தி பெஸ்ட்!

தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.