டியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்!

s3டியூட், முதல் மெயிலில் கேள்வி பதில் தளமான குவோரா (quora) பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதன் பிறகு நீங்கள் குவோரா பக்கம் எட்டிப்பார்த்து வியந்திருக்கலாம். இல்லை குவோரா அப்படி ஒன்றும் ஸ்பெஷலாக இல்லையே என நினைத்திருக்கலாம்.  குவோராவை இப்படி குறைத்து மதிப்பிட்டாலும் தவறில்லை- ஏனெனில் ஒரு பார்வையில் கணிக்க கூடிய இணைய சேவை அல்ல அது. குவோராவின் அருமையை உணர அதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். குவோராவில் வெளியாகி கொண்டிருக்கும் விதவிதமான கேள்வி பதில்களை தொடர்ந்து படித்து வந்தால், ஆஹா அற்புதமான தளமாக இருக்கிறதே எனும் எண்ணம் ஏற்படும்.

ஆனால், அதற்கு முதலில் குவோரா தளத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்ற வேண்டும். அந்த ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய குவோரா கேள்வி பதில்கள் சிலவற்றை பார்க்கலாம்.

’அண்மையில் காக்னிசண்ட் நிறுவனம் ஆட்குறைப்பு செய்தது. அதில் நானும் ஒருவன். இப்போது நான் ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு, பின்னர் பெங்களூரு சென்று வேலை தேடலாம் என நினைக்கிறேன். இது சரியா?’

இது தான் கேள்வி. நீங்களும் கூட இது போன்ற நிலையில் இருந்தால் குவோராவில் ஆலோசனை கேட்கலாம். புதிய வேலைக்கு செல்வதாக இருந்தாலும் சரி அல்லது மேற்படிப்பாக இருந்தாலும் சரி, மனதில் குழுப்பம் இருந்தால் அதை குவோராவில் கேள்வியாக்கி பதில் தேடலாம். இது போன்ற சூழல்களில் குவோரா உங்கள் நண்பர்கள் குழாம் போல செயல்பட்டு பதில் அளிக்கும். முகம் தெரியாத யாரோ ஒருவர் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய பதிலை அளிக்கலாம்.

எல்லாம் சரி, யாரோ ஒருவர் தரும் பதிலை எப்படி நம்புவது என கேட்கலாம். நியாயமான கேள்வி தான். இதற்கான பதிலாக, மேலே சொன்ன கேள்வியின் பதிலையே பார்க்கலாம். https://www.quora.com/Recently-Cognizant-did-layoffs-I-was-part-of-it-Now-I-am-thinking-to-take-a-break-for-1-month-and-then-Ill-go-to-Bangalore-for-job-search-Is-that-OK/answer/Saahil-Sharma-16

காக்னிசண்ட் நிறுவன வேலை இழந்த சூழலில், பிரேக் எடுத்துக்கொண்டு வேலை தேடலாமா எனும் கேள்விக்கு, சாஹில் சர்மா என்பவர் பதில் அளித்திருக்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் சாஹில், முதல் வரியில், ‘ அப்படி செய்யாதீர்கள்’ என தீர்மானமாக குறிப்பிட்டு, இடையே பிரேக் எடுத்துக்கொண்டு அதன் பிறகு வேலை தேட முயற்சிக்க வேண்டாம் என்று உறுதியாக குறிப்பிடுகிறார்.

ஏன்?. காரணத்தை அவரே அழகாக விளக்குகிறார். என்னுடைய தோழி ஒருவரும் இப்படி தான் செய்தார். அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இரண்டு மாத பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் வேலை தேடத்துவங்கினாள். இப்போது ஆறு மாத காலமாக வேலையில்லாமல் தான் இருக்கிறாள்.

உங்கள் விஷயத்தில் வேலை இழந்திருக்கிறீர்கள். எனவே சீரான வருமானம் இருக்காது. ஆனால் குடும்ப ஆதரவோடு தாக்குப்பிடிக்கலாம்.

எனினும், என்னுடைய ஆலோசனை என்னவெனில், உடனே வேலை தேடிக்கொண்டு, நல்ல வேலை கிடைத்ததும் அதில் சேர 15 அல்லது 20 நாள் அவகாசம் பெற்று பிரேக் எடுத்துக்கொள்ளலாம் என்பது தான்.

சேமிப்பில் வாழ்க்கைய அனுபவிக்க வேண்டாம். சீரான வருமானத்தை தேடிக்கொண்டு, வார இறுதி விடுமுறையில் வாழ்க்கையை ரசிக்கவும் என்றும் பதிலை அடிக்கோடிட்டு முடிக்கிறார்.

என்ன டியூட் பதில் எப்படி?

s2உங்கள் சீனியர்கள் அல்லது சகோதரர்களிடம் கேட்டிருந்தாலும் இதோ போன்ற பதில் தான் வந்திருக்கும் அல்லவா? கேட்ட கேள்விக்கு நடைமுறை தன்மை மிக்க பதில் தரப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் கேள்வி கேட்டவரின் விருப்பத்தை புரிந்து கொண்டு, பிரேக்கை அனுபவிப்பதற்கான வழியும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குவோரா பதில்களின் தனித்தன்மைகளில் ஒன்று.

இந்த பதிலை அளித்த சாஹில், ஐடி நிறுவனத்தில் பணியாற்றுபவர்., எனவே வேலை வாய்ப்பு சந்தையின் நிலை மற்றும் பணிக்கு சேறுபவர்களின் மனநிலை மற்றும் அவர்கள் செய்யக்கூடிய தவறுகளை நன்கு அறிந்திருக்கலாம். அதை அவரது பதில் உணர்த்துகிறது அல்லவா? சாஹில் சர்மா பற்றி குவோராவில் இன்னும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்: https://www.quora.com/profile/Saahil-Sharma-16. அவர் ஒரு யூடியூப் சேனலும் வைத்திருக்கிறார்: https://www.youtube.com/channel/UC-AcUKUzoC8EK1l7IFrDFAQ

இன்னொரு கேள்வியை பார்க்கலாம். இது கொஞ்சம் வில்லங்கமான சுவாரஸ்யமான கேள்வி.

நேர்க்காணல் நீலப்படம் பார்த்துண்டா என கேட்டால் என்ன பதில் சொல்வது? என்பது கேள்வி.

இது கொஞ்சம் சிக்கலான கேள்வி தான். இதற்கு நேர்காணலின் தன்மைக்கேற்ப பதில் சொல்ல வேண்டும். கேள்வி கேட்டது காவல்துறை எனில், ஆம் பல முறை என பதில் சொல்ல வேண்டும். நீங்கள் 14 வயதில் இருந்து அம்மாவிடம் இருந்து இந்த கேள்வி வந்தால், ‘ நீலப்படமா , அப்படி என்றால் என்ன? ‘என சொல்வது சிறப்பாக இருக்கும். நேர்காணலுக்கான புத்திசாலித்தனமான கேள்வி எனத்தோன்றினால், கருப்பு வெள்ளை மற்றும் வண்ணப்படங்கள் தான் பார்த்திருக்கிறேன் என கூற வேண்டும்.

இப்படி அமைந்துள்ள அந்த பதிலில் பின் குறிப்பாக, வேலைக்கான நேர்க்காணலில் புத்தியுள்ள யாரும் இப்படி கேட்க மாட்டார்கள், அப்படியே கேட்டாலும், அலுவலக நேரத்தில் இல்லை என பாதுகாப்பாக சொல்லிவிடுங்கள் என்று முடித்திருக்கிறார். பதிலுக்கான அறிமுகத்தில் நையாண்டித்தன்மை தொற்றிக்கொள்ளும் குணம் உடையது என்றும் குறிப்பிட்டுள்ளார். ரசிக்கும்படியான பதில் தான்.

அடுத்த கேள்வியை பார்க்கலாம். ஜெர்மனியில் முதல் முறை படிக்கச்சென்றால், என்ன எல்லாம் தேவை எனும் கேள்விக்கு, ஜெர்மன் மொழி சான்றிதழ், பல்கலைக்கழக அழைப்புக்கடிதம், பாஸ்போர்ட் உள்ளிட்ட தேவையான அம்சங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இன்னொரு சுவாரஸ்யமான கேள்வியை பார்க்கலாம்

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சாலை வழியே செல்ல முடியுமா?

அமெரிக்கா என்றால் நமக்கெல்லாம் தெரிந்தது விமான பயணம் தான். அமெரிக்காவுக்கு சாலை வழியே செல்ல முடியுமா என்ன?

sஇந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள நபர், ஆசியாவையும், அமெரிக்காவையும் பிரிப்பது பியரிங் ஜலசந்தி தான். அந்த பகுதியில் அமெரிக்காவின் அலாஸ்காவையும், ரஷ்யாவுக்கும் இடையே 55 மைல்கள் தான். ஆக ரஷ்யாவில் இருந்து படகு அல்லது, சிறு கப்பலில் காரை அலாஸ்காவுக்கு கொண்டு சென்றால் அமெரிக்காவுக்கு சாலை வழியாகவே சென்று விடலாம்.

எப்படி இருக்கிறது பதில். நண்பர்கள் விவாதத்தில் எழக்கூடிய கேள்வி மற்றும் அதற்கான பதில் போல இருக்கிறது. குவோராவில் விதவிதமான கேள்வி பதில்களை பார்க்கலாம். நமக்கு விருப்பமான தலைப்புகளில் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

குவோரா பதில்கள் அளிக்கும் சுவாரஸ்யத்திற்காகவே அவற்றை படிக்கலாம். நிறைய தகவல்களையும், புதிய கோணங்கள், பார்வைகளையும் தெரிந்து கொள்ளலாம். பல நேரங்களில் கேள்விகளுக்கான பதில்கள் நச் என பிரச்சனைக்கு வழிகாட்டுவதாகவும் அமைவதுண்டு.

கூகுள் போன்ற நிறுவனத்தில் பயிற்சியாளர் பணியில் சேர வேண்டும் எனில், பலபுரோகிராமிங் மொழிகள் தெரிந்திருக்க வேண்டுமா எனும் கேள்விக்கு, சுபம் ராஜன் எனும் ஐடி பட்டதாரி பதில் அளித்திருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பயிற்சி பணியாளர் தேர்வுக்கு சென்று வந்ததால் நான் இதற்கு பதில் அளிக்கிறேன் என தெரிவித்து, கூகுள் போன்ற நிறுவனங்களில் பயிற்சியாளர் வாய்ப்பை பெற டேட்டா ஸ்டர்க்சர்ஸ் அண்ட் அனல்டிக்ஸ் தான் தேவை என குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது தீர்வு காணும் திறமையை என குறிப்பிட்டுள்ளார்.

குவோராவில் உலா வந்தால் பல விஷயங்களில் தெளிவு பெறலாம். பதில்களை படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றில்லை. அதில் உள்ள கேள்விகளுக்கு பதில் தெரியும் எனில் நீங்களும் பதில் அளிக்கலாம். கூகுள் பணியாளர் வாய்ப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர் ஒரு ஐடி பட்டதாரி தான். வல்லுனர்கள் தான் பதில் அளிக்க வேண்டும் என்றில்லை: அனுபவம் பேசுகிறது எனும் அடிப்படையிலும் பதில் அளிக்கலாம். தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டு உங்களுக்கான வெளிச்சத்தை தேடிக்கொள்ள குவோரா நல்ல மேடை. இதன் மூலமே உங்களை வெளிப்படுத்திக்கொள்ளாம். ஐடி பட்டதாரியான சுபம் அழகாக பதில் அளித்துவிட்டு அதன் முடிவில் தனது லிங்க்டுஇன் பக்கத்தையும் அறிமுகம் செய்திருக்கிறார்:   https://www.linkedin.com/in/shubhamrnjn/

ஆக, குவோரா பக்கமும் அடிக்கடி எட்டிப்பாருங்கள். வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

பி.கு; கடந்த மெயிலில் கேட்டிருந்த பிளாக்ஸோ பற்றி அடுத்த மெயிலில் மறக்காமல் பார்க்கலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *