’வைன்’ வீடியோ சேவையின் மறு அவதாரம்

17-email-boss.w700.h467தகவல் புதிது

’வைன்’ வீடியோ சேவையின் மறு அவதாரம்

இப்போது டிக்டோக்காக மாறியிருக்கும் மியூசிகல்லி செயலி எல்லாம் அறிமுகமாவதற்கு முன்னரே இணையத்தை கலக்கி கொண்டிருந்தது ’வைன்’ (Vine) . அமெரிக்காவின் டோம் ஹாப்மன் மற்றும் நண்பர்களால் அறிமுகம் செய்யப்பட்ட வைன், ஆறு நொடி வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தது. இந்த செயலியிலேயே படம் பிடிக்கும் காமிரா இருந்தது. அதிலேயே பகிர்ந்து கொள்ளலாம். திரையை தொட்டால் மட்டுமே படம் பிடிக்கும் என்பதால், அதிலேயே புத்திசாலித்தனமாக எடிட் செய்யும் வாய்ப்பும் இருந்தது. இந்த அம்சங்களை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அசத்தலான ஆறு நொடி வீடியோக்களை உருவாக்கி அதன் பயனாளிகள் கலக்கி கொண்டிருந்தனர். குறிப்பாக புதுமையான காமெடி வீடியோக்கள் வைனில் மிகப்பிரபலம். வைனில் காமெடி நட்சத்திரங்களானவர்களும் இருக்கின்றனர்.

இதன் வரவேற்பு காரணமாக யாஹு நிறுவனம் இதை கையகப்படுத்தினாலும், பின்னர் இது மூடப்பட்டது. வைனுக்கு பிறகு ஸ்னேப்சாட்,இன்ஸ்டாகிராம் என பல செயலிகள் வந்துவிட்டாலும், இந்த சேவை மூடப்பட்டது வைன் அபிமானிகளுக்கு வருத்தமாகவே அமைந்தது. அதை போக்கும் வகையில் வைன் நிறுவனர் ஹாப்மேன், இதன் அடுத்த வடிவமான பைட் (Byte) செயலியை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். வைன் மாயத்தை இதனால் மீட்டெடுக்க முடிகிறதா என பார்க்கலாம்.

=—–

தளம் புதிது

சார்ட்களை உருவாக்கும் இணையதளம்

தகவல்களை காட்சி வடிவில் எளிதாக புரிந்து கொள்ள வழி செய்யும் இன்போகிராக் எனப்படும் தகவல் வரைபடங்களை உருவாக்கி கொள்ளும் சேவையை கேன்வா உள்ளிட்ட இணையதளங்கள் அளிக்கின்றன. இவற்றின் மூலம் விதவிதமான இன்போகிராப்களை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். இதே போல, சார்ட் என குறிப்பிடப்படும் வரைப்படங்களை உருவாக்கி கொள்ள சார்டிபை (https://chartify.io/ ) இணையதளம் வழி செய்கிறது. நாளிதழ்கள், பத்திரிகைகளில் கட்டுரைகளுடன் அல்லது தனியே பார்க்க கூடிய, பை சார்ட், பார் சார்ட், காலம் சார்ட் போன்ற சார்ட்களை இதன் மூலம் எளிதாக உருவாக்கி கொள்ளலாம். எல்லா சார்ட்களுமே டெம்பிளட் வடிவில் இருக்கின்றன. அவற்றை தேர்வு செய்து, அதில் தகவல்களை இடம்பெற வைத்து , தேவையான தலைப்பு கொடுத்தால் போதும் சார்ட் தயாராகிவிடும். பிரமிட் சார்ட், வெட் டயகிராம் போன்ற பிரபலமான சார்ட் வடிவங்களும் இருக்கின்றன. புதிய திட்டங்களுக்கான காட்சி விளக்கம் உள்ளிட்டவற்றுக்கு இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவுகளை மெருகேற்றவும் இந்த வசதி கைகொடுக்கும்.

கேட்ஜெட் புதிது

போல்படபில் போன் அறிமுகம் எப்போது?

சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் மடங்கும் தன்மை கொண்ட போல்டபில் போன் உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அண்மையில் சாம்சங் நிறுவனம் தனது போல்டபில் போனுக்கான கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தது. கண்ணாடி திரைக்கு பதிலாக பிரத்யேகமான இன்பினிட்டி பிளக்சி டிஸ்பிளே கொண்டதாக இந்த போன் இருக்கும் என சாம்சங் கூறியது. மடங்கும் நிலையில் ஸ்மார்ட்போனாகவும், பிரித்த நிலையில் டெப்லெட்டாகவும் இருக்க கூடிய இந்த போன் பற்றி வேறு அதிக விவரங்கள் வெளியிடப்பவில்லை. இந்நிலையில், தென்கொரிய செய்தி நிறுவனம் ஒன்று, இந்த போன் எப்போது அறிமுகமாகும் என்பது உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது. காலெக்ஸி எப் என அழைக்கப்படக்கூடிய இந்த போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரத்யேகமாக விற்பனை ஆக கூடிய இந்த விலை 1,770 டாலர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயலி புதிது

யாஹுவின் செய்தி செயலி

யாஹு நிறுவனம் அண்மை காலமாக புதிய சேவைகளாக அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது,. இந்த வரிசையில் இப்போது வேக்கிங் நியூஸ் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி காலையில் கண் விழிக்க உதவும் அலாரம் வகையை சேர்ந்தது என்றாலும், இதில் ஒரு வித்தியாசமான அம்சம் இருக்கிறது. இது அலாரம் ஒலி எழுப்புவதற்கு பதில், அன்றைய தின செய்தி சுருக்கங்களை ஒலிக்கச்செய்கிறது. பல்வேறு செய்தி தளங்களில் இருந்து செய்தி சேவையை தேர்வு செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளது. அமெரிக்காவில் முதல் கட்டமாக அறிமுகம் ஆகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு: https://in.yahoo.com/?p=us

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *