புத்தாண்டுக்கான காலண்டர் களஞ்சியம்!

ca1புத்தாண்டை முன்னிட்டு அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய தளமாக காலண்டர்பீடியா (http://calendarpedia.com  ) இருக்கிறது. பெயர் உணர்த்தக்கூடியது போலவே இந்த தளம் காலண்டர் களஞ்சியம் தான்!

காலண்டர்பீடியா தளத்தின் முகப்பு பக்கம் கொஞ்சம் சிக்கலாக, குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் தளத்தை ஆழ்ந்து கவனித்தால் குழப்பம் நீங்கி அதன் அருமை புரியும்.

காலண்டர்பீடியா தளத்தில் என்ன எல்லாம் இருக்கிறது தெரியுமா? நாட்காட்டிகள், திட்டமிடல் வழிகாட்டிகள் மற்றும் காலண்டர் டெம்பிளட்கள். இவை எல்லாம், பிடிஎப், எக்சல் மற்றும் வேர்டு கோப்பு வடிவங்களில் இருக்கின்றன.

இனி, முகப்பு பக்கத்தை சற்று கூர்ந்து நோக்கினால், ஆண்டு காலண்டர்கள் முதலில் இருப்பதை பார்க்கலாம். இதில் இருந்து புத்தாண்டுக்கான ( 2019 ) காலண்டரை தேர்வு செய்து கொள்ளலாம். மேலே சொன்னது போல அதற்கான கோப்பு வடிவத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

ca42019 ம் ஆண்டு காலண்டரின் பிடிஎப் வடிவம் தேவை என தீர்மானித்தால், அதற்கான பக்கத்தில் 9 விதவான டெல்பிளட்கள் இருக்கின்றன. முதல் தேர்வு இப்படி அமைகிறது. இந்த கோப்பை அப்படியே தரவிறக்கலாம். அச்சிட்டும் கொள்ளலாம். இதை ஆண்டு திட்டமிடலுக்கு பயன்படுத்தலாம்.

மற்ற டெம்பிளட்கள் பிடித்தமானதாக இருக்கிறதா என்றும் பரிசீலிக்கலாம். அடுத்த தேர்வும் 2019 ம் ஆண்டிற்கான மாதாந்திர காலண்டர் பக்கங்கள். மாத திட்மிடல்களை குறித்து வைக்க இதை தரவிறக்கி கொள்ளாம்.

அடுத்ததாக என்ன என நீங்கள் ஊகித்து இருக்கலாமே! ஆம், வார காலண்டர் பக்கங்களையும் வரவைத்து தரவிறக்கி கொள்ளலாம். இதற்கும் பலவிதமான வடிவமைப்புகள் இருக்கின்றன. விரும்பியதை தேர்வு செய்து கொள்ளலாம்.

இவைத்தவிர இன்னமும், பலவிதமான காலண்டர் தேர்வுகள் இருக்கின்றன. முயன்று பாருங்கள். அருமையான இணையதளம். இந்த புத்தாண்டுக்கான திட்டமிடலுக்கு ஊக்கம் அளிக்கும்; http://www.calendarpedia.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.