கூகுள் இல்லாமல் ஒரு நாள்- 2019 ல் உங்களுக்கான சவால்!

Screenshot_2019-01-01 Uses This Richard Stallmanஇளையராஜா என்ன தேடியந்திரத்தை பயன்படுத்துகிறார்?

இந்த பதிவுக்கும் இளையராஜாவுக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால் அப்படியும் சொல்லவிட முடியாது. உண்மையில் இளையராஜா எந்த தேடியந்திரத்தை பயன்படுத்துகிறார் என்று அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. இசையில் கரை கண்டவர் என்ற முறையில், இணையத்தில் தேட அவர் பிரத்யேகமான வழிகள் ஏதேனும் வைத்திருக்கிறாரா என அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

கூகுள் அல்லாமல், இசை தேடலுக்கான வேறு இணைய மார்கங்கள் பற்றி அவரைப்போன்ற இசையமைப்பாளர்கள் சொல்வது புதிய கண்டறிதலுக்கு வழி வகுக்கும். இதே போலவே இன்னும் பல துறை சார்ந்த வல்லுனர்களிடம், நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் என்ன என கேட்கலாம்.

இப்போதைக்கு, ரிச்சர்ட் ஸ்டால்மேன் பயன்படுத்தும் தேடியந்திரம் என்ன? எனும் கேள்வியை பார்க்கலாம்.

ஸ்டால்மேன், சுதந்திர மென்பொருள் (free software) இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். கம்ப்யூட்டர் பயனாளிகளின் சுதந்திரத்திற்காக, அதாவது நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளை கட்டுப்படுத்தும் சுதந்திரத்திற்காக பாடுபடுவது அவரது நோக்கமாக இருக்கிறது.

ஸ்டால்மேன் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். ஓபன் சோர்ஸ் மூலவர்களில் அவரும் ஒருவர். மென்பொருள் உருவாக்கம் எப்படி கட்டற்றதாக இருக்க வேண்டும் எனும் கருத்தியலை முன்வைத்த முன்னோடிகளில் அவரும் ஒருவர்.

தொழில்நுட்பம் சார்ந்த சிந்தனைகள் மற்றும் கருத்தாக்கங்கள் மீது தாக்கம் செலுத்தும் இணைய ஜாம்பவான்களில் ஒருவர் என்பதால், ஸ்டால்மேன் என்ன செய்கிறார் அல்லது என்ன செய்யவில்லை என்பதை அறிந்து கொள்வதில் பலருக்கு ஆர்வம் இருக்கலாம். அந்த வகையில் தான், கேள்வி பதில் தளமான குவோராவில் கண்ணில் பட்ட கேள்வி, ரிச்சர்டு ஸ்டால்மேன் என்ன தேடியந்திரத்தை பயன்படுத்துகிறார்? என்பதாகும்!

இந்த கேள்விக்கான குவோரா பதில்களில் இருந்து ஊகிக்க கூடிய விஷயம் என்னவெனில், ஸ்டால்மேன் கூகுளையும் பயன்படுத்துவதில்லை, வேறு எந்த தேடியந்திரத்தையும் பயன்படுத்துவதில்லை என்பது தான். அது தான் விஷயமே. கூகுளை பயன்படுத்தாமல் இணையத்தில் தேடுவது சாத்தியமே.

உண்மையில், கூகுள் போன்ற தேடியந்திரங்களை பயன்படுத்தாமல், இணையத்தில் தகவல்களை தேடுவது சாத்தியமா எனும் கேள்விக்கான பதிலை குவோராவில் தேடிய போது, துணை கேள்வியாக ஸ்டால்மேன் கவனத்தை ஈர்த்தது. ( கவனிக்க இந்த தேடல் கூகுள் மூலம் நிகழ்த்தப்படவில்லை: குவோரா தளத்தில் நேரடியாக நிகழ்த்தப்பட்டது- குவோரா தேடலுக்காக கூகுள் தேடலை பயன்படுத்துகிறதா எனத்தெரியவில்லை). – https://www.quora.com/Which-search-engine-does-Richard-Stallman-use

ஸ்டால்மேன் தனது சொந்த தளத்தில் எழுதியுள்ள அவரது கம்ப்யூட்டர் பயன்பாடு தொடர்பான கட்டுரை  (http://stallman.org/stallman-computing.html) மற்றும் பயனர் அனுபவங்களுக்கான யூஸ் திஸ் தளத்தில் அளித்த பேட்டியில் (https://usesthis.com/interviews/richard.stallman/ )இருந்து குவோரா தளத்தில் மேலே குறிப்பிட்ட கேள்விக்கான பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூகுள் இல்லை.

Screenshot_2019-01-01 (3) Which search engine does Richard Stallman use - Quoraஇணையத்தை ஸ்டால்மேன் எப்படி பயன்படுத்துகிறார் என்பது கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது. இணையத்தை எப்படி அணுகுகிறேன் என்பதில் மிகவும் கவனமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இணையத்தை எப்படி பயன்படுத்துகிறேன் என்பதிலும் கவனமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

ஸ்டால்மேன் பதில்களில், தொழில்நுட்ப தத்துவ நோக்கில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.  இங்கே நான் குறிப்பிட விரும்புவது, கூகுள் போன்ற தேடியந்திரங்களை பயன்படுத்தாமல் இருக்க ஸ்டால்மேன் ஊக்கம் அளிக்கிறார் என்பது தான்.

அதற்காக கூகுள் பக்கமே போக கூடாது என சொல்ல வரவில்லை. கூகுளுக்கு ( தேடியந்திரங்களுக்கு) மாற்று வழியை அறிந்திருக்க வேண்டும் என்பது தான். குறிப்பிட்ட தளங்களை அறிந்திருந்து அவற்றுக்கு நேரடியாக செல்வது, குவோரா போன்ற சேவைகளை பயன்படுத்துவது, உங்களுக்கான தகவலை மின்னஞ்சல் மூலம் தருவிப்பது, ஹேக்கர் நியூஸ் போன்ற திரட்டிகளை பயன்படுத்துவது என இதற்கு பல வழிகளை குறிப்பிட முடியும். இவை ஏன் அவசியம் என்பதற்கு, பிரைவஸி பாதுகாப்பு, கண்காணிப்பு சமூகம், தேடல் குமிழ் என பல காரணங்களை அடுக்க முடியும்.

2018 ம் ஆண்டில் இணையத்தில் பிரைவஸி கவலைகள் அதிகரித்த நிலையில், இனி வரும் ஆண்டுகளில் உங்கள் தரவுகள் பற்றி நீங்கள் இன்னும் அதிகம் கவலைப்பட்டாக வேண்டும். எனவே தான் கூகுள் தவிர்த்த வழிகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

இதற்கு முற்றிலும் கூகுளை கைவிட வேண்டும் என்றில்லை. ஒரு நாள் உங்களால் கூகுளை பயன்படுத்தாமல் இருக்க முடிகிறதா ? என முயன்று பாருங்கள். 2019 க்கான புத்தாண்டு தீர்மானமாக இதை கொள்ளுங்கள். உங்கள் அனுபவத்தையும், கேள்விகளையும், விமர்சனங்களையும் எனக்கு எழுதுங்கள்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *